உகாதி 2022: முக்கியத்துவம் மற்றும் வழிபாட்டு முறை

Author: S Raja |Updated Fri, 01 Apr 2022 09:15 AM IST

உகாதி பண்டிகை தெலுங்கு மற்றும் கன்னடம் மொழிகள் பேசும் மக்களின் வருடப்பிறப்பான உகாதி புத்தாண்டு தமிழ்நாட்டிலும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. தெலுங்கு, கன்னட மக்கள் தங்கள் வீடுகளில் உகாதி விருந்தளித்து உறவினர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பார்கள். மகாராஷ்டிர மக்கள் இதே நாளை குடிபாட்வா எனவும் சிந்தி மக்கள் சேதி சந்த் எனவும் பல கலாச்சாரம் முறைப்படி கொண்டாடுகின்றனர். உகாதி ஒவ்வோரு ஆண்டும் ஆங்கில நாட்காட்டியின் படி மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் கொண்டாடப்படுகிறது. இந்து சூரியசந்திர நாட்காட்டியின் படி, உகாதி சைத்ர (சித்திரை) மாதத்தின் முதல் நாளாக கருதப்படுகிறது.

எதிர்காலம் தொடர்பான எந்த ஒரு பிரச்சனைக்கும் கற்றறிந்த ஜோதிடர்களிடம் பேசி தீர்வு காணலாம்.

சைத்ர மாதத்தின் முதல் நாள் தான் பிரம்மன் உலகத்தை படைத்ததாக பிரம்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே இந்நாளில் புது முயற்சிகளை மேற்கொள்ள நல்ல நாளாக கருதப்படுகிறது. மேலும் சைத்ர மாதத்தின் முதல் நாள் வசந்த காலத்தின் பிறப்பை குறிப்பதால், இந்நாள் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. உகாதி என்ற சொல் "யுகா" என்ற வடமொழி சொல்லிலிருந்து வந்தது. இதன் அர்த்தம் புதிய யுகத்தின் ஆரம்பம் என்பது. இந்த நாளில் காலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து நீராடி, புத்தாடை அணிந்து இந்த நாளைத் தொடங்குகிறார்கள். மாவிலைத் தோரணம் கட்டி, வண்ணக் கோலங்கள் இடுவார்கள். வயல்களில் விளைந்த தானியங்களை வீட்டின் முகப்பில் கட்டுவதும் சில இடங்களில் வழக்கமாக உள்ளது. இந்த நாளில் பெருமாள், சிவன், கணபதி போன்ற இஷ்ட தெய்வங்களை அலங்கரித்து வழிபடுகிறார்கள். அம்பிகை வழிபாடு இந்த நாளில் விசேஷமாகச் செய்யப்படுகிறது. சிலர், குலதெய்வ வழிபாடும் செய்வார்கள். பூஜையில் பாட்டுப் பாடி வழிபடுவது தெலுங்கு இன மக்களின் வழக்கம். ஒப்பட்லு என்ற பணியாரம், பூரன் போளி, பால் பாயசம், புளியோதரை போன்றவற்றை நைவேத்தியமாகப் படைத்து உண்கிறார்கள். அந்த ஆண்டின் புதிய பஞ்சாங்கத்தையும், பஞ்சகவ்யத்தையும் பூஜையில் வைப்பதும் வழக்கம்.

உகாதி பண்டிகையை ஒட்டி தமிழ்நாட்டில் வசிக்கும் தெலுங்கு, கன்னடம் பேசும் மக்கள் தங்கள் வீடுகளை மாவிலை தோரணங்களால் அலங்கரித்திருந்தனர். அதிகாலை எழுந்து தலைக்கு குளித்து புத்தாடை அணிந்துகொண்டு வீட்டில் பெரியவர்களிடம் ஆசி பெறுவார்கள். பின்னர் உகாதியின் சிறப்பு இனிப்பு பலகாரம் போன்றவற்றை தயாரித்து அக்கம் பக்கத்தினருக்கு வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வார்கள்.

பிருஹத் ஜாதகத்தில் மறைந்திருக்கும், உங்கள் வாழ்க்கையின் அனைத்து ரகசியங்களும், கிரகங்களின் இயக்கத்தின் முழு கணக்கையும் தெரிந்து கொள்ளுங்கள்

உகாதி நாளன்று மாலையில், ஒரு பொது இடத்தில் மக்கள் கூடி இசை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், புராணங்கள் படிப்பது, விளையாட்டு நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வார்கள். புதிய முயற்சிகளுக்கு வித்திடும் நாளாக இந்த நாள் அமைவதாக மக்கள் கருதுகிறார்கள். எனவே, இந்த நாளில் மங்களமான காரியங்களைத் தொடங்குகிறார்கள். உகாதிப் பண்டிகையையொட்டி திருப்பதி வேங்கடாசலபதி பெருமாள் கோயிலில் 40 நாள்கள் நித்ய உற்சவம் நடைபெறும். ஆந்திர, கர்நாடகப் பகுதியிலுள்ள எல்லா ஆலயங்களிலும் விசேஷ பூஜைகளும் ஆராதனைகளும் இந்த நாளில் நடைபெறும். புத்தாண்டாக மட்டுமன்றி இளவேனிற்காலத்தின் தொடக்க நாளாகவும், அதை மகிழ்வோடு வரவேற்கும் நாளாகவும் இந்த உகாதி தினம் மராட்டிய, கொங்கண் பகுதிகளில் அனுஷ்டிக்கப்படுகிறது.

உகாதி பானாக்கம்

பானாக்கம் என்பது இனிப்பு, புளிப்பு, லேசான காரம் என மூன்று சுவைகளும் ஒன்றாகக்கலந்த ஒரு பானம். வெல்லம், புளி, ஏலக்காய், சுக்கு, மிளகு சேர்த்து தயாரிக்கப்படும் நீராகாரம். கோடைகாலத்தில் உடலின் களைப்பை நீக்கி குளிர்ச்சியும், புத்துணர்ச்சியும் தரக்கூடிய பானம். இது அடுப்பில்வைத்து காய்ச்சாமல் அப்படியே கலக்கி பருகக்கூடிய பானவகையைச் சேர்ந்தது. உகாதி நாளன்று இந்த பானம் செய்யப்பட்டு விருந்தினர்களுக்கு அளிக்கப்படுவது சிறப்பம்சமாகும்.

காக்னிஆஸ்ட்ரோ அறிக்கை மூலம் புதிய ஆண்டில் ஏதேனும் தொழில் நெருக்கடியை நீக்கவும்

உகாதி பச்சடி

உகாதி விருந்தில் இடம் பெறும் முக்கிய உணவு உகாதி பச்சடி. இதில் மாங்காய், வெல்லம், மிளகாய், புளி, வேப்பம்பூ, உப்பு, என அறுசுவையும் கலந்து செய்யப்படுகிறது. வாழ்க்கையானது இன்பம், துன்பம் நிறைந்தது என்பதை உணர்த்தவே இதுபோன்ற உணவுகளை வருடத்தின் முதல்நாள் செய்யப்படுகிறது.

சடங்குகளும், சம்பிரதாயங்களும் குறைந்து வரும் இந்தக் காலத்தில் இதுபோன்ற பண்டிகைகள் மக்களிடையே மகிழ்ச்சியையும் ஒற்றுமையையும் கொண்டு வரட்டுமென பிரார்த்திப்போம். உகாதி நாளைக் கொண்டாடவிருக்கும் அனைத்து இன மக்களுக்கும் எங்கள் அஸ்ட்ரோசேஜ் தரப்பிலிருந்து மனமார்ந்த வாழ்த்துகளையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

அனைத்து ஜோதிட தீர்வுகளுக்கும் கிளிக் செய்க: ஆஸ்ட்ரோசேஜ் ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோர்

எங்கள் கட்டுரை உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறோம். ஆஸ்ட்ரோசேஜின் முக்கியமான பகுதியாக இருப்பதற்கு நன்றி. மேலும் சுவாரஸ்யமான கட்டுரைகளுக்கு காத்திருங்கள்.

Talk to Astrologer Chat with Astrologer