பூராடம் நட்சத்திர பலன்கள்
அமைதியும் அடக்கமும் நிறைந்த சாந்த சொரூபியானவர் நீங்கள். ஆதாரப்பூர்வமானவற்றில் நம்பிக்கை கொண்ட உங்களது சிந்தனைகளில் எப்போதும் உறுதியாக இருப்பீர்கள். அழகாக எழுதுவதும் திறன் கொண்டவர் நீங்கள். கவிதை எழுதுவதிலும் வாசிப்பதிலும் நாட்டம் கொண்டிருப்பீர்கள். ஆனால் உங்களிடம் உள்ள குறை என்னவென்றால் எதையும் அவசரகதியில் முடிவெடுத்து பின்னர் அதனால் கருத்து வேற்றுமைகள் ஏற்பட்டு தவிப்பீர்கள். எதையும் முடிவெடுத்தவுடனே செயல்படுத்தி விடுவீர்கள். உங்களது முடிவு சரியா தவறா என எண்ண மாட்டீர்கள். உடனடியாக முடிவெடுக்கும் திறன் கொண்ட உங்களை பேச்சில் யாராலும் வெல்ல முடியாது. உங்களது இந்த திறமைக்கு அனைவரும் மயங்குவார்கள். தன்னம்பிக்கை நிறைந்தவர் நீங்கள். கடினமான சூழல்களை சந்திக்கும்போது எளிதில் தோல்வியை ஏற்க மாட்டீர்கள். பொறுமையுடன் அதனை சந்திப்பீர்கள். லட்சியவாதியான நீங்கள் ரிஸ்க் எடுக்க தயங்க மாட்டீர்கள். உங்களது பொறுமை மற்றும் நம்பிக்கையால் சரியான நேரத்துக்காக காத்திருப்பீர்கள். தடைகளை கண்டு துவள மாட்டீர்கள். உங்களது கல்வி சிறப்பாக இருக்கும். மருத்துவ துறையில் பெரும் வெற்றி பெறுவீர்கள். மேலும், யோகா மற்றும் ஆன்மீக விஷயங்களில் ஆர்வம் கொண்டிருப்பீர்கள். பிசினசில் நீங்கள் பெரும் வெற்றியை அடையக்கூடும். ஆனால் உங்களது பணியாளர்கள் நேர்மையானவர்களாகவும் நம்கத்தன்மை உடையவர்களாகவும் இருப்பது அவசியம். அனைவரிடமும் நேசமும் பாசமும் காட்டுவீர்கள். உங்களது இந்த நல்ல குணங்களால் அனைவராலும் மதிக்கப்படுவீர்கள். எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதை விரும்புவீர்கள். அடக்கமான குணமும் நடிப்பு உட்பட பல்வேறு கலைகளில் ஆர்வமும் கொண்டிருப்பீர்கள். மேலும் இலக்கியத்துறையில் நல்ல ஞானம் கொண்டிருப்பீர்கள். அதில் பல விஷயங்களை தெரிந்து வைத்திருப்பீர்கள். தூய்மையான மனதுடன் நேர்மையாக அனைவருடனும் பழகுவீர்கள். உங்களை சிறந்த நண்பர் என கூறலாம். ஏனெனினில் உங்களது நட்ப்பை வாழ் நாள் முழுவதும் தொடருவீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவ்வேற்றுவீர்கள். சிறந்த கல்வியை பெற்றிருப்பீர்கள். மற்றவரை ஈர்க்கும் குணம் வாய்த்தவர் நீங்கள். எப்போதும் மகிழ்ச்சியுடனும் குதூகலத்துடனும் வளைய வருவீர்கள். கடினமான சூழல்களில் ஓய்வாக இருக்கமாட்டீர்கள். பொய்களை அறவே விரும்பமாட்டீர்கள். உணமையே எப்போதும் வெல்லும் என்பதில் நம்பிக்கை கொண்டிருப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மூச்சு சம்மந்தமான உபாதைகளை அலட்சியம் செய்ய வேண்டாம்.
கல்வி மற்றும் வருமானம்
உங்களுக்கு சாதகமான தொழில்கள் நேவி அதிகாரி, உயிரியளாளர், விவசாயம், பிசினஸ், டான்சர், ஸ்டேஜ் பர்ஃபாமர், பாடகர், சைக்காலஜிஸ்ட், தத்துவவாதி, கவிஞர், எழுத்தாளர், ஆர்டிஸ்ட், பெயிண்டர், ஃபேஷன் டிசைனர், ஹோட்டல் தொடர்பான பணிகள் ஆகியவை.
இல்லற வாழ்க்கை
நீங்கள் பிறந்த ஊரிலிருந்து தொலைவாக வாழ்வீர்கள். உங்களது பெற்றோர்களால் அதிக நன்மைகள் இருக்காது. திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். ஆனால் திருமணம் தாமதமாக நடக்க கூடும். உங்களது வாழ்க்கை துணை மற்றும் அவரது குடும்பத்தாரின் மேல் அதிக பற்று வைத்திருப்பீர்கள். உங்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கலாம். அவர்கள் ஒழுக்காமாகவும் அதிர்ஷ்டசாலியாகவும் இருப்பர்.
Astrological services for accurate answers and better feature
Astrological remedies to get rid of your problems









