சந்திர கிரகணம் (5 ஜூலை 2020)
05 ஜூலை 2020, இந்த ஆண்டின் இரெண்டாவது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்த சந்திர கிரகணம் தவமான சந்திர கிரகமாக இருக்க போகிறது. 5 ஜூன் 2020 ஏற்பட்ட கிரகத்தின் இது மூன்றாவது கிரகணம் ஏற்படும். 05 ஜூன் 2020 முதல் 05 ஜூலை 2020 மொத்தத்தில் மூன்று கிரகணம் ஏற்படும் என கூறப்பட்டது. ஜோதிடத்தில் உலகமுழுவதும் ஏற்படும் கிரகணத்தின் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
இந்த சந்திர கிரகணம் 8 மணி 37 நிமிடத்தில் தொடங்கி 11 மணி 22 நிமிடத்தின் பொது முடிவடைகிறது மற்றும் 10 மணிக்கு அதன் உச்சத்தை அடைகிறது. சந்திரன் கிரகணம் தற்போது ஏற்படும் சூரியனுக்கும் மற்றும் பூமிக்கும் நடுவில் சந்திரன் வரும் பொது மற்றும் சந்திரன் மீது படும் சூரிய ஒளி பூமியின் மீது ஏற்படாது. மறுபுறம், நாம் சந்திர கிரகணம் பற்றி பார்க்கும் பொது, அது பூமியின் நிழல் பகுதியில் சந்திரன் வரும்போது, சந்திரன் மீது சூரியன் ஒளி துண்டிக்க படுவதாக கூறப்படுகிறது. அது விழுமிய சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.
இது பகுதி சந்திர கிரகணம் அல்லது பெனும்பரால் சந்திர கிரகணம் தனுசு ராசியில் நடக்கிறது இது ஆன்மிக வளைச்சி மற்றும் பார்வை ஆகியவற்றுடன் தொடர்புடையதானதாக கருதப்படுகிறது. எனவே இந்த நேரத்தில் ஒரு நபர் நேர்மறையாக இருந்தால் நிச்சியமாக இந்த கிரகணம் வளர்ச்சியின் அடைப்படையில், இந்த ராசி ஜாதகக்காரர்களுக்கு சில நம்பிக்கையான மற்றும் நேர்மறையான முடிவுகளை வழங்க உதவியாக இருக்கும். இதுமட்டுமின்றி நட்சத்திரம் பற்றி பேசும்பொது, எனவே பூராடம் நட்சத்திரத்தில் ஏற்படும், இது ஆற்றல் மற்றும் உற்சாகம் தொடர்பான நட்சத்திரமாகும், இதனால் இது உங்கள் முயற்சிக்கு உற்சாகத்தை தருகிறது. எனவே இந்த கிரகத்தின் பொது உங்கள் முயற்சிகளில் உறுதியாகவும் மற்றும் சீராகவும் இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இருப்பினும் இந்த நட்சத்திரம் தண்ணீர் அடைப்படை கொண்டதாகும், இதனால் உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்பாடாக வைத்து கொள்வது அவசிமாகும். இந்த சந்திர கிரகணத்தால் 12 ராசியில் ஏற்படும் விளைவுகளை அறிந்து கொள்வோம்.
மேஷம்
தனுசு ராசியில் ஏற்படும் இந்த சந்திர கிரகணம் மேஷ ராசியில் ஒன்பதாவது வீட்டில் ஏற்படும். இதன் வீடு அதிர்ஷ்டம் மற்றும் உயர்கல்வியை குறிப்பிடுகிறது. இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் அன்றாட வேலைகளில் இருந்து வெளியேறி, எதாவது புதிய கல்வி, தைரியம் மற்றும் அறிவு பெற முயற்சி செய்விர்கள், இது உங்கள் தொழில் வாழ்க்கையில் புதிய உச்சத்தை அடைய வாய்ப்பு கிடைக்கும். இருப்பினும், உங்கள் லக்கின அதிபதியான சந்திரன் மற்றும் செவ்வாய் உட்பட்ட பெரும்பாலான கிரகங்களும் உள்ளன, இது இரெண்டாவது வீட்டின் ராசியின் ஏற்படும் நிலைமையை காட்டுகிறது. இந்த நேரத்தில் நீங்கள் அடிக்கடி திசைதிருப்ப பட்டவராகவும் மற்றும் குழப்பமாகவும் உணருவீர்கள். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் குரு அல்லது ஆசிரியர்களுடன் மீண்டும் இணைவதற்கு இந்த நேரம் சிறந்த நேரம் என்பதை நிரூபிக்க முடியும். அவர்கள் வழங்கும் எந்த ஆலோசனையும் உங்களுக்கு உதவியாக இருக்கும். இதனுடவே இந்த நேரம் ஆன்மிக ஆதாயத்திற்கும் நல்லது, எனவே இதற்கிடையில் ஆன்மிக மற்றும் ஊக்கம் அளிக்கும் புத்தகங்களை படிப்பீர்கள்.
பரிகாரம்: சந்திர கிரகணத்தின் பொது குரு மந்திரத்தை உச்சரித்து கொண்டே தியானம் செய்ய வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசி ஜாதகக்காரர்களுக்கு எந்தவொரு புதிய வேலை தொடங்க இந்த நேரம் நன்மையானதாக இருக்காது. ஏனென்றால் இந்த நேரத்தில் நீங்கள் விரும்பிய பலன்கள் கிடைக்காது, இதனால் உங்களுக்கு விரக்தியையும் மற்றும் பதட்டத்தையும் ஏற்படுத்தும். இது தவிர இந்த கிரகணம் உங்களுக்கு சாதகமற்றதாக இருக்கும். எனவே எந்தவிதமான தோற்று நோயும் குறிப்பாக நீர் மூலம் ஏற்படும் தொற்றுநோயை தவிர்க்க சில தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டம். இதனுடவே இந்த கிரகத்தின் பொது குடும்பம் மற்றும் நிதி தொடர்பான விஷியன்களில் மிகவும் திறமையாக கையாளவேண்டும். பணம் சம்பாதிக்க குறுக்கு வழிகள் பயன் படுத்தக்கூடாது. இருப்பினும், ஜோதிடம், அமானுஷ்ய போன்ற பாடங்களில் உங்கள் ஆர்வம் அதிகரிக்க கூடும். எனவே இந்த நேரத்தில் இந்த பாடங்களை படிக்க இந்த நேரம் மிகவும் நன்மையானது.
பரிகாரம்: கிரகணத்தின் பொது “ஓம் சோமயா நமஹ” மந்திரத்தை உச்சரிக்கவும்.
மிதுனம்
மிதுன ராசி ஜாதகக்காரர்களுக்கு இந்த சந்திர கிரகணம் உங்களுக்கும் மற்றும் உங்கள் வாழ்கை துணைவியாருக்கும் இடையே ஒரு புதிய பரிமாணம் தருவதாக நிகழும். அதே சிலர் உறவில் இனைய விரும்புவோருக்கு இந்த நேரம் மிகவும் உதவிகரமாக இருக்கும். இதனுடவே உங்கள் அன்றாட தொழில்களுடன் பக்க வணிகத்தில் ஈடுபட நினைப்பவர்களுக்கு இந்த கிரகணம் மிகவும் நல்ல செய்தி கொண்டு வரக்கூடும். இந்த நேரத்தில் உங்கள் பேச்சாற்றல் மற்றும் உங்கள் சமூக தைரியம் உச்சத்தில் இருக்கும், இதனால் உங்கள் வணிகம் அல்லது தொழில் வாழ்க்கையில் புதிய வாடிக்கையாளர்களை இணைக்க உதயவியாக இருக்கும். இருப்பினும் உங்கள் வாழ்க்கையில் எந்தவொரு வேலையிலும் இந்த நேரத்தில் அவசர படுவதை தவிர்க்கவும். மொத்தத்தில் இந்த கிரகம் உங்களுக்கு அணைத்து துறைகளிலும் நன்மை கொண்டு வரக்கூடும்.
பரிகாரம்: சந்திரன் கிரகணத்தின் பொது108 முறை புதன் மந்திரத்தை உச்சரிக்கவும்.
கடகம்
கடக ராசி ஜாதகக்காரர்களுக்கு இந்த கிரகணத்தின் பொது உங்களுக்குள் உணர்ச்சிபூர்வமான ஒரு புதிய உற்சாகத்தை உணருவீர்கள். நீங்கள் இந்த நேரத்தில் முடிந்த வரை உங்கள் உற்சாகத்தை ஆரோக்கிய மற்றும் தொழில் வாழ்க்கையில் தொடர்புடைய விஷியன்களில் புதிய மற்றும் நேர்மறையான மாற்றங்களை கொண்டு வரக்கூடும். உங்கள் பணி சூழ்நிலையில் ஏதேனும் வேலைகள் உங்களுக்கு நன்றாக இல்லையென்று தோன்றினால் அல்லது உங்களுக்கு தொந்தரவு செய்யும் வகையில் இருந்தால், இந்த நேரத்தில் அவற்றிற்கு மறுசீரமைக்க இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த நேரத்தில் உடற்பயிற்சி தொடங்க மிகவும் நன்மையனதாக இருக்கும். ஏனென்றால் இந்த நேரம் உங்கள் உணர்வுகள் மற்றும் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிக சமநிலையாக உணர மிகவும் உதவியாக இருக்கும். தொழில் ஜாதகக்காரர்களுக்கு இந்த நேரம் புதிய வேலை கிடைக்க வாய்ப்புள்ளது அல்லது உங்களின் சிலருக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும். இருப்பினும் இந்த கிரகணத்தின் பொது எந்த விதமான வாக்குவாதமும் மற்றும் வாய்ச்சண்டை ஈடுபடுபவர்களுக்கு இந்த நேரம் மிகவும் நன்மையற்றதாக இருக்கும், இதனால் இவற்றை தவிர்க்கவும்.
பரிகாரம்: கிரகணத்தின் பொது மஹாகௌரி மந்திரத்தை தியானம் அல்லது படிக்கவும்.
சிம்மம்
சிம்ம ராசி ஜாதகக்காரர்களுக்கு இந்த கிரகணத்தின் பொது உங்கள் குடும்பத்தை மேலும் மேம்படுத்துவது பற்றி நினைத்திருந்தால், இந்த நேரம் அவர்களுக்கு மிகவும் நன்மையனதாக இருக்கும். இந்த ராசியின் காதல் ஜாதகக்காரர்களுக்கு இந்த நேரத்தில் உறவில் வருத்தம் அளிக்க கூடும். ஆனால் இந்த நேரம் உங்களுக்கு உங்கள் பிரியமானவருக்கு இடையே உறவு மேலும் வலுவடையக்கூடும். இந்த நேரத்தில் திருமண ஜாதகக்காரர் முடிந்த வரை உங்கள் குழந்தைகளுடன் நேரம் செலவிட அறிவுறுத்தப்படுகிறது. ஏனென்றால் இந்த கிரகணத்தின் பொது உங்கள் வாழ்க்கையில் அதிகமான ஏற்ற தாழ்வு சூழ்நிலை வரக்கூடும். தொழில் ரீதியாக உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தவும் மற்றும் பகிர்ந்து கொள்ளவும் மிகவும் சிறந்த நேரமாகும், ஏனென்றால் இந்த நேரத்தில் உங்களுக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும்.
பரிகாரம்: சந்திர கிரகணத்தின் பொது 108 முறை காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கவும்.
கன்னி
கன்னி ராசி ஜாதகக்காரர்களுக்கு இந்த கிரகணத்தின் பொது, சில சொந்த பிரச்சனைகள் மேற்பரப்பில் கொண்டு வரக்கூடும், முக்கியமாக உங்கள் தாய் தொடர்பான ஏதுனும் பிரச்சனைகள் மற்றும் இதுனுடவே அவற்றில் உங்களுக்கு தீர்வுகாண வாய்ப்பு கிடைக்கும். சொத்து தொடர்பான சில விற்பனை மற்றும் வாங்குதலில் சிக்கல்கள் தீவிரமடைய வாய்ப்புள்ளது, இதற்காக நீங்கள் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். தொழில் ரீதியாக, நீண்ட காலமாக நிறுத்தப்பட்டிருக்கும் எந்தவொரு பெரிய தொழில் திட்டங்களையும் முடிக்க இது ஒரு நல்ல நேரம் என்பதை நிரூபிக்கும்.
பரிகாரம்: சந்திர கிரகணத்தின் பொது குரு மந்திரத்தை உச்சரிப்பது நல்ல பலன் அளிக்கும்.
துலாம்
துலா ராசி ஜாதகக்காரர்களுக்கு இந்த சந்திர கிரகணத்தின் பொது உங்கள் கடுமையான உழைப்பு மற்றும் முயற்சிகள் வீண்போகாது. எனவே உங்கள் அணுகுமுறையால் உறுதியானதாகவும் மற்றும் சிறந்தாகவும் இருப்பது நன்மை தரும். இருப்பினும், எந்தவொரு முடிவையும் விரைவில் பெற தேவையற்ற ஆபத்தை எடுக்க வேண்டாம், இல்லையெனில், நீங்களே ஒரு சிக்கலை உருவாக்கலாம். உங்கள் பணியிடத்தில் உள்ளவர்களுடன், குறிப்பாக உத்தியோகபூர்வ பதவிகளில் உள்ளவர்களுடன் அதிகம் பேச முயற்சிக்கவும். இந்த கிரகணத்தின் போது, உடன்பிறப்புகளுக்கும் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம். ஒட்டுமொத்தமாக, பேசினால், இந்த கிரகணம் துலாம் ராசியின் மக்களுக்கு வாழ்க்கையில் நேர்மறையான மற்றும் சரியான திசையை வழங்க உதவும்.
பரிகாரம்: சந்திர கிரகணத்தின் பொது சுக்கிரன் மந்திரத்தை உச்சரித்து கொண்டு தியானம் செய்யவும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி ஜாதகக்காரர்களுக்கு சந்திர கிரகணத்தின் பொது குடும்ப மற்றும் நிதி ஆகியவற்றை குறிக்கிறது. இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் நிதி பிரச்சனைகளால் கவலை பட்டு கொண்டிருப்பீர்கள். ஏனென்றால் இந்த நேரத்தில் உங்கள் குடும்பத்தின் காரணமாக உங்கள் செலவுகள் அதிகரிக்க கூடும். இதனால் நீங்கள் உங்கள் செலவுகளை சிக்கனபடுத்த மற்றும் அவற்றில் கவனம் செலுத்த அறிவுறுத்த படுகிறது. இதனுடவே இந்த நேரத்தில் உங்கள் வருமானம் மற்றும் செலவுக்கு இடையே ஒரு சமமான நிலையை பராமரிக்க வேண்டும். இந்த நேரத்தில் உங்கள் கண்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தவும் மற்றும் அதன் தொடர்பான எதாவது பிரச்சனை ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகவும்
பரிகாரம்: இந்த கிரகணத்தின் பொது 108 முறை லட்சுமி மந்திரத்தை உச்சரிக்கவும், ஏனென்றால் இதனால் உங்களுக்கு நிதி பார்வையால் நல்ல பலன் கிடைக்க உதவியாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசி ஜாதகக்காரர்களுக்கு இந்த கிரகணத்தின் பொது உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. உங்கள் உடல் ஆரோக்கியத்தில் ஏற்படும் சிறிய பிரச்சனைகளிலும் கவனக்குறைவாக இருக்க வேண்டாம், ஏனென்றால் இது எதிர்காலத்தில் பெரிய நோயாக திகழக்கூடும். இதனுடவே கவனமாக இருக்கவும், ஏனென்றால் இந்த நேரத்தில் நிதி போன்ற சில பிரச்சனைகள் வரக்கூடும் மற்றும் உங்களின் கடந்தகால முதலீடு, நிலுவைத் தொகை போன்றவற்றைப் பெறுவதில் தேவையற்ற தாமதங்களையும் நீங்கள் சந்திக்க நேரிடலாம், இது சில சிக்கல்களை ஏற்படுத்தி திட்டங்களை தாமதப்படுத்தக்கூடும். எனவே இந்த சிக்கல்களை எதிர்கொள்ள முன்கூட்டியே தயாராக இருக்கவும், அதற்கேற்ப உங்கள் வரவு செலவு திட்டமிடுங்கள், மன அழுத்தத்தை எடுத்துக் கொள்ளாதீர்கள் மற்றும் இதற்காக கவலைப்பட வேண்டாம்.
பரிகாரம்: “ஓம் நமோ பகவதே வாசுதேவயா” மந்திரத்தை உச்சரித்து கொண்டே தியானம் செய்யவும்.
மகரம்
மகர ராசி ஜாதகக்காரர்களுக்கு சந்திரன் கிரகணத்தின் பொது உங்கள் குடும்ப வாழ்கை பாதிப்பதாக குறிப்பிடுகிறது, இதனுடவே உங்கள் வாழ்கை துணைவியாருடன் சில பிரச்சனைகள் உருவாகக்கூடும். ஆரோக்கியம் மற்றும் பொருளாத ரிதியாக இந்த கிரகணம் மிகவும் சாதகமற்றதாக இருக்கும். இந்த நேரத்தில் மன அழுத்தமும் குழப்பமும் உங்களைத் தொந்தரவு செய்யும். இருப்பினும், இந்த கிரகணம் வெளிநாடுகளில் வாய்ப்புகளை எதிர்பார்ப்பவர்களுக்கு நல்லது என்பதை நிரூபிக்கும், இந்த நேரத்தில் அவர்கள் அதைப் பற்றி சில சாதகமான செய்திகளைப் பெறலாம்.
பரிகாரம்: சந்திர கிரகணத்தின் பொது சனி மந்திரத்தை படிக்கவும்.
கும்பம்
கும்ப ராசி ஜாதகக்காரர்களுக்கு சந்திர கிரகணத்தின் பொது உங்களின் வருமானம் மற்றும் மரியாதை அதிகரிப்பதால் உங்களுக்கு மிகவும் நன்மையானதாக இருக்கும், ஏனென்றால் இந்த நேரத்தில் உங்களுக்கு புதிய நல்ல வாய்ப்பு கிடைக்கும். இந்த நேரத்தில், புதிய வாடிக்கையாளர்கள் மற்றும் ஒப்பந்தங்களைப் பெறுவதற்கு உங்கள் நெட்வொர்க்கிங் மற்றும் சமூக திறன்கள் உங்களுக்கு உதவும். இது தவிர, புதிய பகுதிகளை விரிவுபடுத்துவதற்கும் ஆராய்வதற்கும் இது ஒரு சிறந்த நேரம். மேலும், உங்கள் கடன்களையும் திரும்ப செலுத்த இந்த நேரம் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
பரிகாரம்: சந்திர கிரகணத்தின் பொது பகவான் விநாயகரின் மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவும்.
மீனம்
மீன ராசி ஜாதகக்காரர்களுக்கு சந்திர கிரகணத்தின் பொது உங்கள் பணி தொடர்பான விசியங்களிலும் மற்றும் உங்கள் தொழில் குறிக்கோள்களையும் மதிப்பாய்வு செய்ய இந்த நேரம் குறிக்கிறது. ஏனெனில் இந்த நேரத்தில், உங்கள் செயல்திறன் உச்சத்தில் இருக்கும். உங்கள் பத்தாவது வீட்டில் நடக்கும் இந்த கிரகணம் உங்கள் வாழ்க்கையில் வெற்றிபெறவும் முன்னேறவும் சரியான திசையை வழங்கும். மேலும், உங்கள் அபிலாஷைகளையும் லட்சியங்களையும் உணர இதுவே சரியான தருணம், எனவே உங்கள் சிறந்த செயல்திறனைக் கொடுத்து உங்கள் திறனைக் காட்ட தயாராக இருங்கள்.
பரிகாரம்: சந்திர கிரகணத்தின் பொது “ ஓம் நமஹ சிவாய” மந்திரத்தை உச்சரித்து கொண்டே தியானம் செய்யவும்.




