தை அமாவாசை 31 ஜனவரி 2022: முக்கியத்துவம் மற்றும் வழிபாட்டு முறை
தமிழ் நாட்காட்டியில் தை மாதம் என்பது தமிழர்களின் முக்கியமான மாதமாக கருதப்படுகிறது. இந்த ஆங்கில மாதத்தின் ஜனவரி 14 அன்று தை மாதத்தின் முதல் நாள் தொடங்கும். இந்த மாதம் தை பொங்கல், தை பூசம் மற்றும் தை அமாவாசை போன்ற தமிழர்களின் முக்கியமான பண்டிகை ஆகும். தை அமாவாசை இந்து மக்களின் மிகவும் புனிதமும் சிறப்பானதுமான தினமாகும். தை மாதத்தில் வருகின்ற அமாவாசை தை அமாவாசை விரதம் எனச் சிறப்புப் பெறுகின்றது.
தமிழ் மாதங்களில் எல்லா மாத அமாவாசை நாட்களுமே சிறப்பானவை என்பதால் தாய், தந்தையரை இழந்தோர் தங்களின் பெற்றோர் மற்றும் மூதாதையரை கருத்தில் நினைத்து அமாவாசை நாட்களில் விரதம் கடைபிடிப்பர். இதை அமாவாசை விரதம் என்பர். ஆனால் குறிப்பிட்ட சில மாதங்களில் வரும் அமாவாசை நாட்கள் சிறப்பு வாய்ந்தன.
இந்த கட்டுரையில் தை அமாவாசை சிறப்பு என்ன, தை அமாவாசை 2022ம் ஆண்டு எப்போது வருகிறது. திதி நேரம் எப்போது, முன்னோர்களுக்குத் தர்ப்பணம், கொடுக்க சரியான நேரம் எப்போது என்பதை விரிவாக அறிந்து கொள்வோம்.
இந்த அமாவாசை தினத்தன்று முன்னோர்களுக்கு விரதம் இருந்து தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம். இந்த நாளன்று கண்களுக்கு தெரியாத நிலவு வளர்வது போல, நம் முன்னோர்களின் ஆசிர்வாதம் பெற்று முன்னேற்றத்திற்கு வெற்றியை தரும்.
முன்னோர்களை வணங்குவது என் ?
பண்டைக்கால சாஸ்திரத்தின் படி ஒருவரின் பெற்றோர், உடன்பிறப்பு மற்றும் முன்னோர்களை வணங்குவது மிகவும் அவசியம் என்று கூறப்படுகிறது. ஒருவர் தன் பெற்றோருக்கும், தன் முன்னோர்கள், குல தெய்வத்தையும் வணங்காவிட்டால், அவர்கள் மற்ற தெய்வங்களை வணங்கினாலும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் முன்னேற்றமும் அடைவதில் தடை ஏற்பட்டு கொண்டே இருக்கும். அவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த முன்னோர்களை தர்ப்பணம் கொடுத்து வழிபட வேண்டிய முக்கிய திதி தான் அமாவாசை. ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை திதியில் நாம் விரதமிருந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க முடியாவிட்டாலும், பெற்றோரை இழந்தவர்கள் தை, ஆடி, மகாளய அமாவாசை தினத்திலாவது நாம் விரதமிருந்து தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது அவசியம்.
தை அமாவாசை 2022 எப்போது?
தை அமாவாசை தமிழ் பிலவ ஆண்டின் மாதம் தை 18 அதாவது ஆங்கில ஆண்டின் ஜனவரி மாதம் 31ம் தேதி பிறபகல் 1.59 மணிக்கு அமாவாசை திதி தொடங்கி பிப்ரவரி 1ம் தேதி 12.02 வரை உள்ளது. அதனால் ஜனவரி 31ம் தேதி முழுவதும் முன்னோர்களுக்குத் திதி, தர்ப்பணம் கொடுக்கலாம். பூஜை, பரிகாரத்திற்கு ராகு காலம், எமகண்ட காலத்தைத் தவிர்த்துக் கொள்வது நல்லது. தை அமாவாசை தினத்திற்காக இப்போதே திட்டமிட்டுக் கொள்வது நல்லது.
முக்கியமான வழிபாட்டு தளங்கள்
இராமேசுவரம்,திருச்செந்தூர், முக்கடல் கூடும் கன்னியாகுமரி, மற்றும் காவிரியின் முக்கூடல் தலமான பவானி இங்கெல்லாம் மக்கள் கூட்டம் கூடுதலாக இருக்கும். இராமேசுவரத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ராமநாத சுவாமி மற்றும் அம்பாள் திருச்சிலைகள் தை அமாவாசை தினத்தன்று அங்குள்ள அக்னி தீர்த்தத்திற்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு புனித நீராடல் நடைபெறும். கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடைபெறுகின்றன. தை அமாவாசையை முன்னிட்டு இராமேசுவரம் வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடுவர். இராமேசுவரம் கடற்கரையில் தங்களின் மூதாதையருக்கு தர்ப்பணம் செய்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுதோறும் தை அமாவாசை தினத்தன்று லட்ச தீபம் ஏற்றப்படுகிறது. அன்றைய தினம் அருள்மிகு நெல்லையப்பர் - காந்திமதியம்மன் கோயிலில் காணும் இடமெல்லாம் ஒளிச்சுடர்களாகவே காணப்படும். பல்லாயிரக்கணக்கானோர் சுற்றுவட்டாரங்களில் இருந்து வந்து மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கோயிலின் பிரகாரங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தீபங்களை ஏற்றிவைத்து வழிபடுவார்கள்.
அனைத்து ஜோதிட தீர்வுகளுக்கும் கிளிக் செய்யவும்: ஆஸ்ட்ரோசேஜ் ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோர்
எங்களின் இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருக்கும் என்று நம்புகிறோம். அத்தகைய சூழ்நிலையில், இந்த கட்டுரையை உங்கள் மற்ற நலம் விரும்பிகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். நன்றி!