மிதுன ராசியில் புதன் பெயர்ச்சி மற்றும் அதன் விளைவுகள்

புதன் கிரகம், அணைத்து கிரகத்தின் இளவரசன் என்று குறிப்பிட படுகிறது. 24 மே 2020, 23:57 மணிக்கு மிதுன ராசியில் நுழைவார். புதன் பெயர்ச்சி, தர்க்கரீதியான திறன், கவனிப்பு போன்றவற்றின் காரணி கிரகம் ஆகும். இது ராசிக்காரர்களுக்கு வணிக குணங்களையும் தருகிறது. ஜாதகத்தில் அதன் வலுவான நிலை காரணமாக, மேலே உள்ள அனைத்து குணங்களும் ராசிக்காரரிடம் காணப்படுகின்றன. இந்த நேரத்தில் புதன் பெயர்ச்சி சொந்த வீட்டில் மிதுன ராசியில் நுழையும் பொது, இந்த பெயர்ச்சியால் உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் விளைவுகளை அறிந்து கொள்வோம்.

இந்த ராசிபலன் சந்திரன் ராசி அடிப்படை கொண்டது. உங்கள் சந்திர ராசி அறியவும்.

மேஷம்

மேஷ ராசியில் புதன் பெயர்ச்சி மூன்றாவது வீட்டில் இருக்கும், இந்த வீடு உலகம், இளைய சகோதர சகோதரிகள் மற்றும் தைரியத்தின் காரணியாகும். ஏனென்றால் இந்த வீடு உங்கள் தைரியத்தை குறிக்கிறது, இதனால் புதன் பெயர்ச்சியின் பொது மேஷ ராசி ஜாதகக்காரர்களுக்கு, குணத்தில் பார்க்கக்கூடும், இந்த ராசியின் ஜாதகக்காரர் ஆற்றல் உடையவராக இருப்பார்கள் மற்றும் இந்த நேரத்தில் அவர்களின் லட்சியத்தை அடைவதில் குறிக்கோளாக இருப்பார்கள். இந்த ராசி ஜாதகக்காரர் எந்தவிதமான முயற்சிகளிலும் பின் வாங்க மாட்டார்கள். முன்றாவது வீட்டில் உங்கள் இளைய சகோதர சகோதரிகளை பற்றி பார்க்கும் பொழுது, இந்த நேரத்தில் மேஷ ராசி ஜாதகக்காரர் சகோதர சகோதரிகளுடன் நேரம் செலவிடுவார்கள், இதனால் குடும்ப சூழ்நிலை மிகவும் நேர்மறையானதாக இருக்கும். புதன் பெயர்ச்சியின் பொது உலகத்தில் சாதனங்களில் சமூகவலைத்தளம், இணையதளம் மற்றும் ஊடகம் போன்ற தொடர்பாக மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த நேரத்தில் நற்செய்தி கிடைக்க வாய்ப்புள்ளது. இதனுடவே எழுத்தாளர் அல்லது வெளியீட்டுத் தொழிலில் இருப்பவர்கள் தங்கள் தொழில் துறையில் முன்னேற நல்ல வாய்ப்புகளைக் காணலாம். இந்த நேரம் பயணத்திற்கு மிகவும் நன்மையானதாக இருக்கும், இந்த ராசிகக்காரர் சிலர் நீண்ட தூரம் பயணத்திற்கு திட்டமிட்டு கொண்டிருந்தாள், அது இந்த நேரத்தில் நிறைவேறக்கூடும். இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் வாங்கிகடன் மற்றும் கடன் திரும்ப செலுத்தக்கூடும். புதன் பார்வை உங்கள் ராசியின் ஒன்பதாவது வீட்டில் இருக்கும் மற்றும் இந்த வீடு தந்தை வீடு என கூறப்படுகிறது, இதனால் உங்கள் தந்தையின் உடல் ஆரோக்கியம் பாதிக்க படுவதால் நீங்கள் கவலை படக்கூடும், இதனுடவே மேஷ ராசி சில ஜாதகக்காரர்களுக்கு தந்தையுடன் வாக்குவாதம் ஏற்படக்கூடும். உங்கள் காதல் வாழ்க்கையில் அதிகப்படியான காதல் இந்த இடமாற்றத்தின் போது காணப்படும், உங்கள் உணர்வுகளை உங்கள் அன்புக்குரியவருடன் சுதந்திரமாக பகிர்ந்து கொள்வீர்கள். அதே நேரத்தில், திருமணமானவர்கள் இந்த காலகட்டத்தில் தங்கள் மனைவியின் முழு ஆதரவைப் பெறுவார்கள். இந்த பெயர்ச்சி ஆரோக்கியத்தின் அடிப்படையில் கூட நல்லது.

பரிகாரம்: புதன் கிழமை அன்று விநாயகரை வணங்குவதால் உங்களுக்கு நன்மை அளிக்கும்

மேலும் விபரங்களுக்கு மேஷம் அடுத்த வாராந்திர ராசி பலன் படிக்கவும்.

உங்கள் வாழ்க்கையின் ராஜ யோகத்தை தெரிந்து கொள்ள ராஜ யோக அறிக்கை பதிவிறக்கம் செய்யவும்

ரிஷபம்

ரிஷப ராசி ஜாதகக்காரர்களுக்கு செல்வம் வீடு என்று அழைக்கும் இரெண்டாவது வீட்டில் புதன் பெயர்ச்சி இருக்கும். இந்த வீடு உங்கள் பேச்சுக்கள் மற்றும் குடும்பத்தை பற்றி குறிக்கிறது. இந்த பெயர்ச்சி உங்களுக்கு கலவையான பலன் தரக்கூடும். உங்கள் காதல் வாழ்க்கையில் அதிகப்படியான காதல் இந்த இடமாற்றத்தின் போது காணப்படும், உங்கள் உணர்வுகளை உங்கள் அன்புக்குரியவருடன் சுதந்திரமாக பகிர்ந்து கொள்வீர்கள். அதே நேரத்தில், திருமணமானவர்கள் இந்த காலகட்டத்தில் தங்கள் மனைவியின் முழு ஆதரவைப் பெறுவார்கள். இந்த பெயர்ச்சி ஆரோக்கியத்தின் அடிப்படையில் கூட நல்லது. இரண்டாவது வீடு பணம் வீடாக கருதப்படுகிறது. இந்த புதனின் பெயர்ச்சியின் போது உங்கள் திரட்டப்பட்ட செல்வம் அதிகரிக்கக்கூடும். புதிய வங்கிக் கணக்குகளைத் திறக்க, நீண்ட கால முதலீட்டிற்கு இது ஒரு நல்ல நேரம். பொருளாதார முன்னேற்றம் உங்கள் முன்னுரிமையாக இருக்கும், இதன்மூலம் உங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தை நீங்கள் பாதுகாக்க முடியும். இந்த ராசியின் மாணவர்களைப் பற்றி பேசினால், படிப்படியாக நீங்கள் கல்வித்துறையில் முன்னேறுவீர்கள். இந்த பெயர்ச்சியின் பொது உங்களைச் சுற்றி சுத்தமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம், இல்லையெனில் உங்களுக்கு வாய் மற்றும் பற்கள் தொடர்பான ஏதேனும் சிக்கல் இருக்கலாம். இந்த ராசியின் ஜாதகக்காரர்களுக்கு தைராய்டு போன்ற ஹார்மோன்கள் தொடர்பான ஏதேனும் சிக்கல் இருந்தால், அவர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

பரிகாரம்: தினமும் துளசி செடிக்கு பூஜை செய்யவும் மற்றும் தண்ணீர் ஊற்றவும்.

மேலும் விபரங்களுக்கு ரிஷப அடுத்த வாராந்திர ராசி பலன் படிக்கவும்

மிதுனம்

மிதுன ராசி ஜாதகக்காரர்களுக்கு லக்கினம் அதாவது முதலாவது வீட்டில் புதன் பெயர்ச்சி இருக்கும். இந்த வீட்டினால் உங்கள் ஆளுமை காட்டுகிறது. புதன் உங்கள் நான்காவது வீட்டின் அதிபதியும் ஆகும், இது ஆடம்பர, ஆறுதல், தாய் மற்றும் வீட்டின் ஒரு காரணியாகக் கருதப்படுகிறது, இது புதனின் பெயர்ச்சி உங்களுக்கு சாதகமான முடிவுகளைத் தரும் என்பதைக் குறிக்கிறது. உங்கள் முதல் வீட்டில் புதனின் நிலை காரணமாக, இந்த காலகட்டத்தில் நீங்கள் மிகவும் துடிப்பாகவும் உற்சாகத்துடன் இருப்பீர்கள். நீங்கள் இளமை வீரியம் நிறைந்தவராக இருப்பீர்கள், புதன் உங்களுக்கு நல்ல தகவல்தொடர்பு திறன்களை வழங்கும், இது அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்க உதவும். வணிக மற்றும் தொழிலில் உள்ளவர்களின் வாழ்க்கையில் பல புதிய வாய்ப்புகள் வர வாய்ப்புள்ளது, இது இந்த நேரத்தில் வருமானத்தையும் ஆறுதலையும் அதிகரிக்கும். இந்த பெயர்ச்சியின் போது புதன் ஒரு ஆழமான நிலையில் இருக்கும், இதன் காரணமாக நீங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்கள் நிறைந்திருப்பீர்கள், மேலும் உங்கள் அறிவுசார் திறனும் நன்றாக இருக்கும். இந்த புதன் நிலை மிதுன ராசிக்காரர்களுக்கு எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கான நல்ல உணர்வைத் தரும், இதனால் நீங்கள் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும், இது உங்களுக்கு வெற்றிகளையும் திருப்தியையும் தரும். ஆனால் புதனின் இந்த பெயர்ச்சியின் போது, ​​நீங்கள் ஒரே நேரத்தில் பல விஷயங்களைச் செய்ய முயற்சி செய்யலாம், ஏனென்றால் நீங்கள் விரைவில் ஒரு வேலையில் சலித்துக்கொள்வீர்கள், எனவே மற்ற வேலைகள் குறித்த உங்கள் மீது கவனம் செலுத்தவும். நீங்கள் இதைச் செய்வது சரியல்ல, ஏனெனில் இது உங்கள் வேலையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும். எனவே நீங்கள் முதலில் செய்கிற வேலையை முடித்துவிட்டு, அடுத்த பணியை கையில் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த ராசியின் காதலர்களுக்கு புதனின் இந்த பெயர்ச்சி இனிமையாக இருக்கும். இதுவரை தனிமையில் இருந்தவர்கள் இந்த பெயர்ச்சியின் போது ஒன்றிணைக்கலாம். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் திருப்தியும் இருக்கும்.

பரிகாரம்: புதன் கிரகத்தின் பீஜ் மந்திரத்தை படிக்கவும்.

மேலும் விபரங்களுக்கு மிதுன அடுத்த வாராந்திர ராசி பலன் படிக்கவும்.

கடகம்

கடக ராசி ஜாதகக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி வீட்டில் இருக்கும். இந்த வீடு வணிகம் மற்றும் வெளிநாட்டு பயணத்தை குறிக்கிறது. இந்த வீட்டில் புதன் பெயர்ச்சியால் கலவையான பலன் கிடைக்கும். இந்த பெயர்ச்சியின் பொது உங்கள் வளங்களை நிர்வகிப்பது மிக முக்கியமானதாக இருக்கும். இந்த நேரத்தில் சில சூழ்நிலைகள் ஏற்படக்கூடும், இதனால் உங்களுக்கு செலவு அதிகரிக்க கூடும். கடக ராசி ஜாதகக்காரர்களுக்கு இந்த நேரத்தில்உடல் ஆரோக்கிய பிரச்சனை ஏற்படக்கூடும், இதனால் யோகா தியானம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும், அழுதலிருந்து முடிந்த வரை விலகி இருக்கவும். ஏனென்றால் புதன் பார்வை உங்கள் ராசியின் ஆறாவது வீட்டில் இருப்பதால் போட்டிகள், எதிரிகள், தடைகள் போன்றவற்றை குறிக்கிறது, இதனால் வாதம் விவாதம் போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது, இந்த நேரத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், இல்லையெனில் உங்கள் நடத்தை பதிப்படையக்கூடும். மேலும், நீதிமன்றத்தில் சிக்கித் தவிக்கும் எந்த வேலையும் செய்ய வேண்டாம், இது நடந்தால் உங்கள் செலவுகள் அதிகரிக்கக்கூடும். இந்த நேரத்தில், நீங்கள் கடன் பெறுவதையோ அல்லது கடன் வாங்குவதையோ தவிர்க்க வேண்டும். இருப்பினும் இந்த காலகட்டத்தில் கடக ராசி ஜாதகக்காரர்களுக்கு குடும்ப சூழ்நிலை அமைதியானதாக இருக்கும், இதனால் உங்கள் வீட்டில் மகிழ்ச்சியியான சூழ்நிலை இருக்கும். பனிரெண்டாவது வீடு வெளிநாட்டை குறிக்கிறது, புதனின் இந்த பெயர்ச்சி பொது தனது சொந்த வீட்டில் அமைந்துள்ளது. எனவே இந்த நேரத்தில் கடக ராசி சிலருக்கு எதிர்காலத்தில் வெளிநாட்டில் குடியேற வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம் என்பதை இது குறிக்கிறது.

பரிகாரம்: புதன் கிழமை அன்று மாட்டிற்கு பச்சை புள் சாப்பிட கொடுப்பது உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

மேலும் விபரங்களுக்கு கடக அடுத்த வாராந்திர ராசி பலன் படிக்கவும்.

சிம்மம்

சிம்ம ராசியில் புதன் பெயர்ச்சி பதினொன்றாவது வீட்டில் இருக்கும், இது லாபம் மற்றும் வெற்றியின் வீடாக கூறப்படுகிறது. புதன் பெயர்ச்சி சிம்ம ராசி ஜாதகக்காரர்களுக்கு நன்மைஅளிக்கும். இந்த ராசி ஜாதகக்காரர் வேலை செய்பவர்களுக்கு உயர் அதிகாரிகளிடமிருந்து மரியாதை கிடைக்கும், மேலும் இந்த துறையில் ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். அதே நேரத்தில், வேலை தேடுவோர் அவர்கள் விரும்பிய நிறுவனத்தில் வேலை பெறலாம். உங்கள் இரண்டாவது வீட்டின் அதிபதியாக இருப்பது, உங்கள் பதினொன்றாவது வீட்டில் உட்கார்ந்துகொள்வது, ராசிக்காரர்களுக்கு மிக அழகான செல்வத்தை உருவாக்குகிறது. இந்த யோகா காரணமாக நீங்கள் பணத்தையும் பெயரையும் சம்பாதித்து பல துறைகளில் வெற்றியைப் பெறலாம். நீங்கள் வியாபாரத்திலும் லாபம் பெறுவீர்கள். இது மட்டுமல்லாமல், உங்கள் நண்பர்கள் மற்றும் சமூக தொடர்புகளிலிருந்தும் நீங்கள் பயனடையலாம். இந்த நேரத்தில், நீங்கள் அதிகமானவர்களைச் சந்திக்கும்போது, ​​சமூக ஊடகங்கள் மூலம் நீங்கள் மக்களுடன் எவ்வளவு அதிகமாக இணைவீர்களோ அதன் அடிப்படையில் பயனடைவீர்கள். இந்த நேரத்தில் பயணம் செய்வது உங்களுக்கு நன்மை அளிக்கும், ஆனால் தோற்று நோயால் பாதிப்படைய வாய்ப்புள்ளது, இதனால் நீங்கள் பயணம் செய்வதை தவிர்ப்பது நல்லது. இந்த நேரத்தில் உங்கள் எண்ணங்கள் நிறைவேறக்கூடும். காதல் மற்றும் அன்பிற்கு இந்த நேரம் மிகவும் நன்மையானதாக இருக்கும், ஆனால் உங்கள் வாழ்கை துணைவியார் அல்லது பிரியமானவருடன் நேரம் அவசியம் செலவிடவும், இதனால் உங்கள் உறவு மேலும் வலுவடையும்.

பரிகாரம்: வீட்டில் உள்ள பூஜை அறையில் கற்பூரம் ஏற்றுவதால் உங்களுக்கு புதன் கிரகத்தின் நல்ல பலன் கிடைக்கும்

மேலும் விபரங்களுக்கு சிம்ம அடுத்த வாராந்திர ராசி பலன் படிக்கவும்.

கன்னி

கன்னி ராசியில் புதன் பெயர்ச்சி பத்தாவது வீட்டில் இருக்கும். பத்தாவது வீடு உங்கள் தொழில் மற்றும் கர்மாவை பற்றி குறிக்கிறது. இதனால் கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சியின் பொது நல்ல பலன் கிடைக்கும். இந்த பெயர்ச்சியின் பொது உங்களுக்குள் அர்ப்பணிப்பு உணர்வு விருத்தியடையும், இதனுடவே நீங்கள் உற்சாகமாக இருப்பீர்கள் மற்றும் தடை பட்டிருந்தால் உங்கள் வேலைகளும் எளிதில் செய்து முடிப்பீர்கள். இதனால் பணித்துறையில் மூத்த அதிகாரியின் பாராட்டு கிடைக்கும். இருப்பினும் புதனின் இந்த பெயர்ச்சியின் பொது நீங்கள் உங்கள் வேலைகளை தவறு செய்யாமல் இருக்க எண்ணி கொண்டிருப்பீர்கள், இதனால் உங்கள் வேலையில் அதிக நேரம் எடுத்து கொள்ளக்கூடும். இதனால் உங்கள் வேலையில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த பெயர்ச்சியின் போது, ​​எதுவும் காணவில்லை என்று நினைப்பதை விட, நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் மற்றும் உடனடியாக உங்கள் வேலையை அகற்ற வேண்டும். இந்த பெயர்ச்சியின் பொது, கன்னி ராசி ஜாதகக்காரர்களுக்கு தொழில் சார்ந்ததாக இருக்கும், இதன் காரணமாக அவர்கள் தங்கள் பிரியமானவருக்கு அல்லது வாழ்க்கைத் துணைவிற்கும் நேரம் கொடுக்க முடியாது. இதன் காரணமாக, உங்கள் உறவுகளில் ஏற்ற தாழ்வுகள் இருக்கலாம். எனவே உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கைக்கு இடையில் ஒரு சமநிலையை வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள், இது உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் மகிழ்ச்சியைத் தரும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இந்த ராசியின் மாணவர்கள் இந்த பெயர்ச்சியின் பொது வெற்றி பெறுவார்கள்.

பரிகாரம்: தினமும் சூரியன் உதயத்தின் பொது விஷ்ணு பகவானின் ஸ்டோற்றம் பாராயணம் செய்யவும்.

மேலும் விபரங்களுக்கு கன்னி அடுத்த வாராந்திர ராசி பலன் படிக்கவும்.

உங்கள் வாழ்க்கையில் நடவிருக்கும் எதிர்காலத்தின் நன்மை தீமைகளை அறிந்து கொள்ள பிருஹத் ஜாதகம் முன் பதிவு செய்யவும்.

துலாம்

துலா ராசி ஜாதகக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி பத்தாவது வீட்டில் இருக்கும். இந்த வீடு உங்களுக்கு அதிர்ஷ்ட்ட வீடாகும், ஆன்மிகம் மற்றும் உயர் கல்வி குறிக்கிறது. புதனின் இந்த பெயர்ச்சியின் பொது, துலா ராசி ஜாதகக்காரர்களுக்கு ஆன்மிக வழியில் முன்னேறக்கூடும் மற்றும் உங்கள் வாழ்க்கையில் ரகசியமான விசியங்களை அறிந்து கொள்ள முயற்சி செய்விர்கள். இந்த நேரத்தில் நீங்கள் ஆன்மிக மற்றும் மத புத்தகம் படிக்க விரும்புவீர்கள். ஒன்பதாவது வீடு உங்கள் குருவை குறிக்கிறது, இதனால் நீங்கள் இந்த நேரத்தில் உங்கள் ஆசிரியர்களின் சந்திப்பு மற்றும் நீண்ட நேரம் உரையாடல் உங்களுக்கு ஏற்பட கூடும். உலக முழுவதும் பரவி வாரும் கொரோனா தோற்று நோயால் சந்திப்புகள் இனையதளத்தின் மூலம் ஏற்படுகிறது. உங்கள் தொழில் வாழ்க்கையில் பற்றி பார்க்கும் பொது பணித்துறையில் உங்களுக்கு பதவி உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. ஏனென்றால் இந்த நேரத்தில் உங்கள் வேலையின் அதிர்ஷ்டம் முழுமையாக கிடைக்கும். உங்கள் சக ஊழியர்கள் உங்களுடன் நன்றாக நடந்து கொள்ளக்கூடும் மற்றும் உங்கள் மூத்த அதிகாரிகளுடன் நல்ல நேரம் செலவிடக்கூடும். புதனின் இந்த நிலை நல்ல செல்வ யோகம் கிடைக்க கூடும், இதனால் துலா ராசி பல ஜாதகக்காரர்களின் வருமானம் அதிகரிக்க கூடும். புதன் கிரகம் துலா ராசியில் இரெண்டாவது வீட்டின் அதிபதி ஆகும், இதனால் இந்த பெயர்ச்சியின் பொது வெளிநாடு தொடர்புடைய வியாபாரத்தில் பலன் கிடைக்கும். நீங்கள் குடும்ப வாழ்க்கையைப் பற்றி பார்க்கும் பொழுது, இந்த புதனின் பெயர்ச்சியின் போது உங்கள் தந்தையுடன் சில வேறுபாடுகள் இருக்கலாம். நீங்கள் ஒரே வணிகத்தில் இருந்தால் இந்த வேறுபாடு இன்னும் அதிகமாக இருக்கும். உங்கள் தந்தையுடனான உரையாடலின் போது உங்கள் எல்லைகளைத் தாண்டுவதைத் தவிர்க்க வேண்டும். உங்கள் காதல் வாழ்க்கையைப் பார்த்தால், திருமண ஆனவர்களுக்கு இந்த காலகட்டத்தில் மகிழ்ச்சியும் திருப்தியும் கிடைக்கும். மறுபுறம், காதல் உறவில் இருப்பவர்கள் தங்கள் உறவுகளுக்கு புதிய உயரங்களை பெற முடியும். இந்த பெயர்ச்சியின் பொது, மாணவர்களின் புரிந்து கொள்ளும் திறன் அதிகரிக்கும், உயர் கல்வியைப் பெறும் இந்த ராசி மாணவர்களுக்கு இந்த காலகட்டத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும்.

பரிகாரம்: தேவைப்படும் குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கு புத்தகங்களை நன்கொடையாக வழங்குங்கள். கொரோனா தொற்றுநோயின் போது உருவாக்கப்பட்ட அளவுகோல்களின்படி இந்த நன்கொடைகளைச் செய்யுங்கள்.

மேலும் விபரங்களுக்கு துலாம் அடுத்த வாராந்திர ராசி பலன் படிக்கவும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி ஜாதகக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி எட்டாவது வீட்டில் இருக்கும். இந்த வீடு மாற்றம், தேடல் மற்றும் வாழ்க்கையில் எதிர்பாராதவிதமாக நடக்கும் விபத்து காரணியாக கருதப்படுகிறது. புதன் மிக வேகமாக நகரும் கிரகம் என்பதால், இது உங்கள் வாழ்க்கையில் சில விரைவான மற்றும் வேகமாக மாற்றங்களைக் கொண்டு வரக்கூடும், இது ஆரம்பத்தில் கவலை மற்றும் பதட்டத்தையும் ஏற்படுத்தும். ஆனால் இந்த மாற்றம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஆறுதல் மண்டலத்திலிருந்து வெளியேறவும், அவர்கள் தங்களுக்குள் உருவாக்கிய எல்லைகளுக்கும் உதவும். இருப்பினும், புதன் உங்கள் திரட்டப்பட்ட செல்வத்தின் இரண்டாவது வீட்டை நேரடியாகக் கண்காணிக்கிறது, எனவே இந்த காலகட்டத்தில் உங்கள் செலவுகள் அதிகரிக்கக்கூடும், இது திரட்டப்பட்ட செல்வத்தைக் குறைக்கலாம். எனவே, இந்த பெயர்ச்சியின் போது உங்கள் வளங்களை நன்கு பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறீர்கள். எட்டாவது வீட்டிலிருந்து பரிசுகளும் திடீர் ஆதாயங்களும் கருதப்படுகின்றன, எனவே புதனின் எட்டாவது வீட்டின் போது நீங்கள் திடீர் ஆதாயங்களைப் பெற வாய்ப்புள்ளது. ஆனால் இந்த பெயர்ச்சியின் போது நீங்கள் ஊகத்தைத் தவிர்க்க வேண்டும். வேலையில் இருப்பவர்கள் வேலைகளை மாற்றுவதை விட அவர்களின் தகுதிகளை மேம்படுத்த வேண்டும். இந்த பெயர்ச்சியின் போது நீங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும், குறிப்பாக ஒவ்வாமை அல்லது தோல் தொடர்பான நோய்களுக்கு ஆளாகக்கூடியவர்கள். உங்களுக்கு ஏதேனும் உடல்நலப் பிரச்சினை இருந்தால், உடனடியாக மருத்துவரிடம் செல்லுங்கள். யோகா, தியானம் மற்றும் உடல் வேலைகளைச் செய்வது உங்களுக்குள் இருக்கும் எதிர்மறை மற்றும் மன அழுத்தத்தையும், ஆரோக்கியத்தில் நல்ல மாற்றங்களையும் நீக்கும். புதிய பாடத்திட்டத்தில் சேர விரும்பும் மாணவர்களுக்கு இந்த பெயர்ச்சி நல்லதாக இருக்கும், புதிய பாடங்களைப் புரிந்து கொள்ள புதன் நிலை உங்களுக்கு உதவும். காதல் வாழ்க்கை மற்றும் உறவுகளைப் பற்றி பேசுகையில், உரையாடலின் போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். பொய் சொல்வதைத் தவிர்க்கவும், இல்லையெனில் உறவில் ஏற்ற தாழ்வுகள் இருக்கலாம்.

பரிகாரம்: சூரிய உதயத்தின் பொது தினமும் ஓம் நமோ வாசுதேவயா மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்யவும்.

மேலும் விபரங்களுக்கு விருச்சிக அடுத்த வாராந்திர ராசி பலன் படிக்கவும்.

தனுசு

தனுசு ராசி ஜாதகக்காரர்களுக்கு ஏழாவது வீட்டில் புதன் பெயர்ச்சி கொண்டிருப்பார்கள். இந்த வீட்டின் வாழ்க்கையில் கூட்டணி பற்றி காட்டுகிறது. புதனின் இந்த பெயர்ச்சி இந்த ராசிக்காரர்களுக்கு நல்லதாக இருக்கும். புதன் உங்கள் கர்மா வீட்டின் அதிபதியும், எனவே தனுசு ராசிக்காரர் இந்த நேரத்தில் பதவி உயர்வு பெறலாம். புதன் கிரகம் உங்கள் கண்காணிப்பு திறனை அதிகரிக்கும், இதனால் நீங்கள் உங்கள் வேலையை நன்றாக முடிக்க முடியும், மேலும் நீங்கள் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். இதற்கிடையில் உங்கள் மூத்தவர்கள் உங்கள் வேலையைப் பாராட்டலாம். இந்த ராசியின் வர்த்தகர்களுக்கு புதன் புனிதமாக இருக்கும், ஆனால் கூட்டாக வியாபாரம் செய்கிறவர்களுக்கு அதிக லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. காதல் உறவுகளிலும் நல்ல மாற்றங்கள் இருக்கும், ஏனென்றால் இந்த நேரத்தில் நீங்கள் நிறைய அன்பு பார்க்க முடியும். அன்பின் உறவை திருமணத்தின் உடைக்க முடியாத பிணைப்பில் இணைக்க விரும்புவோருக்கு, இந்த பெயர்ச்சி நன்றாக இருக்கும். திருமணமான ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையிலும் மகிழ்ச்சி இருக்கும். இந்த காலகட்டத்தில் இந்த ராசியின் மாணவர்கள் கல்விக்கு மிகவும் தீவிரமாக இருப்பார்கள், இது கல்வித்துறையில் நல்ல முடிவுகளுக்கு வழிவகுக்கும்.

பரிகாரம்: தினமும் புதனின் ஹோரை பொது புதன் மந்திரத்தை பாராயணம் செய்யவும்.

மேலும் விபரங்களுக்கு தனுசு அடுத்த வாராந்திர ராசி பலன் படிக்கவும்.

மகரம்

மகர ராசியில் புதன் பெயர்ச்சி ஏழாவது வீட்டில் இருக்கும். போட்டியாளர்கள், எதிரிகள் மற்றும் நோய்கள் இந்த வீட்டை குறிக்கின்றன. இந்த ராசியின் நிபுணர்களுக்கு இந்த பெயர்ச்சி நல்லதாக இருக்கும். இந்த நேரத்தில் உங்கள் போட்டி வலிமை அதிகரிக்கும், இதனால் நீங்கள் உங்கள் எதிரிகளை வெல்ல முடியும். இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் சகாக்களிடமிருந்து ஆதரவைப் பெறுவீர்கள், இதனால் பணித்துறையில் உங்கள் உற்பத்தித்திறனை அதிகரிக்கும். வேலைகளை மாற்ற முயற்சிப்பவர்கள் தங்களுக்கு பிடித்த துறையில் அல்லது நிறுவனத்தில் வேலை பெறலாம். இந்த ராசியின் வியாபாரிகளுக்கு இந்த புதன் பெயர்ச்சியின் போது லாபம் கிடைக்கும், மேலும் வணிகத்தை பரப்புவதற்கு நீங்கள் கடன் போன்றவற்றை எடுக்க விரும்பினால், இந்த நேரத்தில் அவற்றை அங்கீகரிக்க முடியும். உங்கள் குடும்ப வாழ்க்கையைப் பற்றி பேசும் பொது, இந்த நேரத்தில் உங்கள் தாயின் தரப்பிடமிருந்து பரிசுகளைப் பெறலாம். இந்த காலகட்டத்தில் நீதிமன்ற சிக்கல்களில் நீங்கள் வெற்றியைப் பெறலாம். இருப்பினும், காதல் வாழ்க்கையில் இந்த பெயர்ச்சி உங்களை மிகவும் தீவிரமாக ஆக்குகிறது, இது உறவில் சிக்கல்களை ஏற்படுத்தும். எனவே நீங்கள் உங்கள் பிரியமானவருடன் தரமான நேரத்தை செலவிட வேண்டும், இந்த நேரத்தில், அவர்களின் உணர்வுகளை நீங்கள் புரிந்து கொள்ள முடியும், மேலும் உங்கள் உறவு வலுப்பெறும். இந்த ராசியின் மாணவர்களைப் பற்றி பேசும்போது, இந்த காலகட்டத்தில் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இந்தராசியின் மாணவர்கள் வெற்றியைப் பெற முடியும். இந்த நேரத்தில் உங்கள் ஆற்றல் மாற்றமும் அதிகரிக்கும், எனவே விளையாட்டு, உடல்பயிற்சி அல்லது யோகா போன்ற உடல் செயல்பாடுகளைச் செய்வதன் மூலம் நீங்கள் உங்களைப் வலுவாக மாற்றிக் கொள்ளலாம் மற்றும் உங்கள் ஆரோக்கியத்தில் சாதகமான மாற்றங்களைக் கொண்டு வரலாம்.

பரிகாரம்: மாட்டிற்கு பச்சை புள் சாப்பிடகொடுக்கவும்.

மேலும் விபரங்களுக்கு மகரம் அடுத்த வாராந்திர ராசி பலன் படிக்கவும்.

கும்பம்

கும்ப ராசியில் புதனின் பெயர்ச்சி ஐந்தாவது வீட்டில் இருக்கும், இந்த வீட்டில் உங்கள் புத்திசாலித்தனம், குழந்தைகள், காதல் போன்றவை கருதப்படுகின்றன. புதனின் ஐந்தாவது வீட்டில் பெயர்ச்சி உங்களுக்கு நல்ல பலனைத் தரும். இந்த ராசியின் வல்லுநர்கள் இந்த காலகட்டத்தில் தங்கள் கருத்துக்களை நன்றாக வடிவமைக்க முடியும். இதன் காரணமாக அவர்களின் வருமானமும் செழிப்பும் இந்த கால கட்டத்தில் அதிகரிக்கும். இந்த ராசியின் வர்த்தகர்கள் தங்கள் திட்டங்களிலிருந்து பயனடைவார்கள். இருப்பினும், இந்த நேரத்தில் நீங்கள் சம்பாதித்த பணத்தை முதலீடு நீங்கள் செய்ய வேண்டும், இதனால் எதிர்காலத்தில் உங்களுக்கு பயனளிக்கும், இது உங்கள் எதிர்காலத்திற்கு நல்லது. உங்கள் குடும்ப வாழ்க்கையைப் பற்றி பேசும்போது, இந்த ராசி திருமண ஜாதகக்காரர்களுக்கு இந்த நேரம் மிகவும் புனிதமானது, இந்த பயணத்தின் போது உங்கள் மனைவியின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். காதல் வாழ்க்கையில் கூட, இந்த ராசியின் ஜாதகக்காரர்களுக்கு நல்ல பலன்களைப் பெறுவார்கள், உங்கள் நடத்தை நெகிழ்வானதாக இருக்கும், தேவையற்ற விஷயங்களுக்கு நீங்கள் கவனம் செலுத்த மாட்டீர்கள். இது காதல் உறவை தீவிரப்படுத்தும். குழந்தைகளைக் கொண்ட இந்த ராசியின் ஜாதகக்காரர்கள் உங்கள் குழந்தைகளின் முன்னேற்றத்தைக் கண்டு மகிழ்ச்சியடைவார்கள். இந்த ராசியின் மாணவர்கள் கடந்த காலங்களில் சிக்கல்களைக் கொண்டிருந்த சிக்கலான தலைப்புகளையும் புரிந்து கொள்வார்கள். இதன் காரணமாக மாணவர்கள் கல்வித்துறையில் சிறப்பாக செயல்பட முடியும். உங்கள் உடல் ஆரோக்கியத்தை பற்றி பார்க்கும் பொழுது, உங்களுக்கு வயிற்று பிரச்சினைகள் இருக்கலாம். எனவே, நீங்கள் ஒரு உணவு கவனம் மற்றும் வழக்கமான உடற்பயிற்சி செய்ய மிகவும் முக்கியம்.

பரிகாரம்: சரஸ்வதி தேவிக்கு பூஜை செய்யவும்.

மேலும் விபரங்களுக்கு கும்ப அடுத்த வாராந்திர ராசி பலன் படிக்கவும்.

மீனம்

மீன ராசியில் புதன் பெயர்ச்சி நான்காவது வீட்டில் இருக்கும். தாய், வீடு, வசதிகள் போன்றவை இந்த வீட்டின் அடையாளமாக கருதப்படுகின்றன. புதனின் இந்த நிலை மீன ராசிக்காரர் குடும்ப வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களைக் கொண்டு வரும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி உங்கள் மனதில் அமைதி உணர்வைத் தரும். வீட்டின் நல்ல நிலை காரணமாக, நீங்கள் தொழில் வாழ்க்கையிலும் சிறப்பாக செயல்பட முடியும். இருப்பினும், புதனின் நான்காவது வீட்டில் உள்ள நிலையும் உங்களை சற்று நிம்மதியடையச் செய்யலாம், ஏனென்றால் இந்த வீடு உங்கள் மகிழ்ச்சிக்குரியது. இதன் காரணமாக, மீன ராசிக்காரர் உங்கள் ஆறுதல் மண்டலத்தில் வாழ விரும்புவார்கள், இதன் காரணமாக உங்கள் எதிர்காலத்தை நீங்கள் கெடுக்கலாம். எனவே, இந்த நேரத்தில் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருப்பது முக்கியம், ஏனென்றால் அவ்வாறு செய்வது எதிர்காலத்தில் உங்களை வெற்றிகரமாக ஆக்கும். குடும்ப வாழ்க்கையைப் பற்றி பேசும் பொது, இந்த காலகட்டத்தில் தாயுடன் உங்கள் உறவு மேம்படும். மீன சில ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் நிலம் அல்லது வாகனங்களை வாங்கலாம். இருப்பினும், எதையும் வாங்குவதற்கு முன், நீங்கள் உங்கள் செலவுகளிலும் கவனம் செலுத்த வேண்டும், பின்னர் மட்டுமே ஒரு முடிவை எடுக்க வேண்டும். இந்த பெயர்ச்சியின் போது உங்கள் வாழ்கை துணைவியாருக்கு பணித்துறையில் மரியாதை, பாராட்டு கிடைக்கும். இது குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கும். மகிழ்ச்சியின் சூழ்நிலையில், உங்கள் மனைவியின் வாழ்க்கையில் நீங்கள் எதை மதிக்கிறீர்கள் என்று சொன்னால், அது உங்கள் உறவை இன்னும் பலப்படுத்தும்.

பரிகாரம்: தினமும் துளசி செடிக்கும் பூஜை செய்யவும்.

மேலும் விபரங்களுக்கு மீனம் அடுத்த வாராந்திர ராசி பலன் படிக்கவும்.

ரத்தினம், ருத்ரக்ஷ்: ஆஸ்ட்ரோசேஜ் ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோர் உள்ளிட்ட அனைத்து ஜோதிட தீர்வுகளுக்கும் கிளிக் செய்க

Astrological services for accurate answers and better feature

33% off

Dhruv Astro Software - 1 Year

'Dhruv Astro Software' brings you the most advanced astrology software features, delivered from Cloud.

Brihat Horoscope
What will you get in 250+ pages Colored Brihat Horoscope.
Finance
Are money matters a reason for the dark-circles under your eyes?
Ask A Question
Is there any question or problem lingering.
Career / Job
Worried about your career? don't know what is.
AstroSage Year Book
AstroSage Yearbook is a channel to fulfill your dreams and destiny.
Career Counselling
The CogniAstro Career Counselling Report is the most comprehensive report available on this topic.

Astrological remedies to get rid of your problems

Red Coral / Moonga
(3 Carat)

Ward off evil spirits and strengthen Mars.

Gemstones
Buy Genuine Gemstones at Best Prices.
Yantras
Energised Yantras for You.
Rudraksha
Original Rudraksha to Bless Your Way.
Feng Shui
Bring Good Luck to your Place with Feng Shui.
Mala
Praise the Lord with Divine Energies of Mala.
Jadi (Tree Roots)
Keep Your Place Holy with Jadi.

Buy Brihat Horoscope

250+ pages @ Rs. 599/-

Brihat Horoscope

AstroSage on MobileAll Mobile Apps

Buy Gemstones

Best quality gemstones with assurance of AstroSage.com

Buy Yantras

Take advantage of Yantra with assurance of AstroSage.com

Buy Feng Shui

Bring Good Luck to your Place with Feng Shui.from AstroSage.com

Buy Rudraksh

Best quality Rudraksh with assurance of AstroSage.com
Call NowTalk to
Astrologer
Chat NowChat with
Astrologer