ராசி பலன் 2021 - Horoscope 2021 in Tamil
ராசி பலன் 2021(Rasi palan 2021) உங்கள் வாழ்க்கையில் எதாவது புதிய மாற்றத்தை கொண்டு வருகிறத? அனைவரும் வருகின்ற புதிய ஆண்டு நமக்கு எவ்வாறு இருக்கும் என்று மிகுந்த ஆவலுடன் ஏதிர்பார்த்து கொண்டிருப்பார்கள். ஏனென்றால் புதிய ஆண்டு நம்பிக்கை மட்டுமின்றி பல சவால்களையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கும், இதற்காக முன்கூட்டியே தயாராக இருக்க முயற்சியில் ஈடுபடக்கூடும்.
புதிய ஆண்டு வருவதற்கு முன் தனது பிற்காலகட்டத்தின் வேலைகளை முடிக்க முழு செயலுடன் ஈடுபடக்கூடும். ஏனென்றால் புதிய ஆண்டில் புதிய வேலைகளை தொடங்க விரும்புவார்கள். இதனுடவே மக்கள் தனது பழைய லட்சியங்களை அடைய மற்றும் புதிய லட்சியங்களை நோக்கி செயல்திறனில் வேகத்தை அதிகரிக்க கூடும். இதற்காக திட்டங்கள் வகுக்கபடக்கூடும்.
எனவே அவர்களின் மனதில் புதிய ஆண்டின் பல விதமான சவால்கள் எழக்கூடும், அவர்களின் தடைபட்டிருக்கும் அணைத்து வேலைகளும் இந்த ஆண்டு முடிவடையுமா? வாழ்க்கையில் பல துறைகளில் அவர்களின் குடும்பத்தின் ஆதரவு கிடைக்குமா அல்லது கிடைக்காத? காதல் வாழ்க்கை இந்த ஆண்டு நன்றாக இருக்குமா அல்லது இருக்காத? இந்த ஆண்டு அவர்களுக்கு மிகவும் உண்மையான வாழ்கை துணைவி கிடைக்குமா அல்லது அவர்களுக்கு இந்த ஆண்டும் ஏமாற்றம் மற்றுமே கிடைக்குமா? தொழில் வாழ்க்கையில் வேகம் அதிகரிக்குமா அல்லது இல்லையா? பொருளாதாரம் இந்த ஆண்டு பிரச்சனை ஏற்படுத்துமா அல்லது வாழ்க்கையில் பண வரவு அதிகரிக்குமா? எனவே வருகின்ற புதிய ஆண்டு 2021 தொடர்புடைய இதுபோன்ற ஒவ்வொரு விசியமும் இயல்பாகவே ஒவ்வொரு ஜாதகத்தினரின் மனதிலும் எழக்கூடும்.
உங்கள் இந்த கேள்விக்கு பதில் அளிக்கவே, ஒவ்வொரு ஆண்டும் உலகத்தின் முதல் இடம் வகிக்கும் ஜோதிட இணையத்தளம் உங்களுக்காக, ஆஸ்ட்ரோசேஜ் ராசி பலன் 2021 (Rasi palan 2021), நங்கள் இவற்றின் முலமாக உங்கள் புதிய ஆண்டுகளின் கேள்விகளுக்கு மகிழ்ச்சியான பதில் அளிக்ககூடும். இந்த கட்டுரையில் எங்கள் வருடாந்திர ராசிபலன் 2021 அல்லது எதிர்காலகட்டத்தின் பலன் 2021 ஆஸ்ட்ரோசேஜ் ஜோதிட வித்துவான்களின் அணைத்து கிரகம் நட்சத்திரம் கணிப்பு மற்றும் சரியானமுறையில் கணக்கிட்டு உங்கள் எதிர்காலத்தின் அணைத்து நன்மை தீமைகளை எடுத்துகாட்டுகிறோம்.
இந்த வருடாந்திர ராசிபலன் (varudanthira rasi palan) உங்களுக்கு தெரிய படுத்துவோம்:
ராசி பலன் 2021 (Rasi palan 2021) உங்கள் ராசிக்கு என்ன குறிப்பிடுகிறது?
தொழில் (Career Rasi palan 2021) இல் உங்களுக்கு பணித்துறையில் எவ்வாறு பலன் கிடைக்கும்?
பொருளாதார (Finance Rasi palan 2021) இல் உங்கள் பணத்திற்கு குறைபாடு ஏற்படக்கூடுமா அல்லது இந்த ஆண்டு உங்கள் பணத்தை சேமிப்பதில் சாத்தியமடைவீர்களா?
காதல் வாழ்கை (Love Rasi palan 2021) உங்கள் உண்மையான தேடல் இல் நிறைவடையுமா?
திருமண வாழ்கை (Married Life 2021) இல் வாழ்கை துணைவியாருடன் மோதல் ஏற்படுமா?
குடும்ப வாழ்கை (Family Life 2021) இல் உங்கள் பெற்றோர்களின் உடல் ஆரோக்கியம் எவ்வாறு இருக்கும்?
உங்கள் இந்த அணைத்து கேள்விகளுக்கும் இந்த ஆண்டு ராசி பலன் முலம் முழு விபரங்களையும் தெரிந்து கொள்ள முடியும்.
இங்கு உங்களுக்கு உங்கள் ராசியின் அடிப்படியில் வருடாந்திர பலன் கிடைக்கும், இதனுடவே உங்களுக்கு உங்கள் காதல் ராசி பலன் 2021 (Love Horoscope 2021), பொருளாதார ராசி பலன் 2021 (Finance Horoscope 2021), குடும்ப ராசி பலன் 2021 (Family Horoscope 2021) மற்றும் தொழில் ராசி பலன் 2021 (Career Horoscope 2021) இன் முழு விபரங்கள் அளிக்க கூடும். வாருங்கள் அனைத்து 12 ராசிகளுக்கு வருகின்ற புதிய ஆண்டு 2021 எவ்வாறு இருக்கும் தெரிந்து கொள்வோம்.
உங்கள் ராசியின் படி வருடாந்திர ராசிபலன் 2021 படிக்கவும் :-
மேஷ ராசி பலன் 2021
மேஷ ராசி பலன் 2021 படி, இந்த ஆண்டு சனி பகவான் மேஷ ராசியில் பத்தாவது வீட்டில் அமர்ந்திருப்பார். இந்த ஆண்டின் நடுவிலிருந்து கடைசி வரை குரு பெயர்ச்சி உங்கள் ராசியில் பதினொன்றாவது வீட்டில் அமர்ந்திருப்பார். இதனுடவே நிழல் கிரகம் ராகு உங்கள் ராசியின் இரெண்டாவது வீட்டிலும், அதே கேது உங்கள் ராசியின் எட்டாவது வீட்டிலும் அமர்ந்திருப்பார். சிவப்பு கிரகம் செவ்வாய் இந்த ஆண்டு தொடக்கத்தில் உங்கள் ராசியின் சொந்த வீட்டில் நுழைவார், இது உங்கள் லக்கின வீடாகும். பொருள் இன்பங்களின் கடவுள் கூட, குருவுடன் இணைந்து இரண்டாவது மாதத்தில், உங்கள் பதினொன்றாவது வீட்டில் நுழைவார்.
இதனால் உங்களுக்கு உங்கள் தொழில் வாழ்க்கையில் நல்ல பலன் கிடைக்கும், அதே நீங்கள் உங்கள் பொருளாதார நிலையில் பல பிரச்சனைகள் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். பணித்துறையில் ஆரம்பத்தில் உங்களுக்கு சாதகமற்ற பலன் கிடைக்கும், ஆனால் 15 பிப்ரவரி முதல் மார்ச் நடுவில் வரை நேரம், பணியில் இருக்கும் ஜாதகக்காரர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இருப்பினும் வியாபார ஜாதகக்காரர்களுக்கு இந்த நேரம் மிகவும் நன்றாக இருக்கும். அவர்களுக்கு வருமானம் அதிகரிக்க பல வாய்ப்பு கிடைக்கும். இதனுடவே வெளிநாட்டு மூலத்திலிருந்து பணம் லாபம் பெறுவதில் வெற்றி அடைவீர்கள்.
இதனுடவே இந்த ஆண்டு உங்கள் பெற்றோர்களின் உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் தொந்தரவு செய்யக்கூடும், இவற்றில் உங்கள் பணம் நன்றாக செலவாக கூடும். முக்கியமாக செப்டம்பர் முதல் நவம்பர் நடுவில், உங்களுக்கு பொருளாதார பிரச்சனைகள் எதிர் கொள்ள வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு இந்த ஆண்டு கலவையான பலன் கொண்டு வரக்கூடும், ஏனென்றால் அவர்களுக்கு ஜனவரி, மார்ச், மே, ஜூலை மற்றும் நவம்பர் மாதம் மிகவும் சாதகமானதாக இருக்கும், அதே பிப்ரவரி, ஏப்ரல், ஜூன், ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதம் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
குடும்ப வாழ்க்கையில் சனி மற்றும் செவ்வாய் உங்களுக்கு சில சவால்களை தரக்கூடும், இதனால் உங்களுக்கு குடும்பத்தின் ஆதரவு கிடைப்பதில் சிரமம் ஏற்படக்கூடும். இருப்பினும் செப்டம்பர் முதல் நவம்பர் வரை நேரம் குடும்ப வாழ்க்கைக்கு மிகவும் நன்றாக இருக்கும். எனவே நீங்கள் திருமணம் ஆனவராக இருந்தால், உங்களுக்கு சனி மற்றும் சுக்ரன் பார்வை கவலை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும், இதனால் உங்களுக்கும் உங்கள் வாழ்கை துணைவியாருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்படக்கூடும்.
குழந்தைகளுக்கு இந்த நேரம் மிகவும் நன்றாக இருக்கும் மற்றும் அவர்களுக்கு ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதத்தின் பொது அதிர்ஷ்டம் கைகொடுக்க கூடும்., இதனால் அவர்கள் முன்னேற்றம் அடைவதில் வெற்றி பெறக்கூடும். எனவே நீங்கள் யாரையாவது காதலித்து கொண்டிருந்தாள், உங்களுக்கு இந்த ஆண்டு 2021 மிகவும் நன்றாக இருக்கும். இந்த ஆண்டு நீங்கள் காதல் திருமணம் செய்ய வாய்ப்புள்ளது. உடல் ஆரோக்கிய ரீதியாக பார்க்கும் பொழுது, உங்களுக்கு சாதாரணமாகவே நல்ல பலன் கிடைக்கும். இருப்பினும் களைப்பு மற்றும் சின்ன சின்ன பிரச்சனைகள் இருக்கக்கூடும்.
மேலும் விரிவாக மேஷ ராசி பலன் படிக்க - மேஷ ராசி பலன் 2021 கிளிக் செய்யுங்கள்
ரிஷப ராசி பலன் 2021
ரிஷப ராசி பலன் 2021 படி, இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் ஒன்பதாவது வீட்டில் அமர்ந்திருப்பார். இதனுடவே ராகு மற்றும் கேதுவும் உங்கள் ராசியின் முதலாவது மற்றும் ஏழாவது வீட்டில் அமர்ந்திருப்பார். அதே ஆண்டின் தொடக்கத்தில் சிவப்பு கிரகம் செவ்வாய் உங்கள் ராசியின் பனிரெண்டாவது வீட்டில் அமர்ந்திருப்பார், 2 ஜூன் முதல் 6 செப்டம்பர் நடுவில் தனது பெயர்ச்சியால் உங்கள் ராசியின் மூன்றாவது மற்றும் நான்காவது வீட்டில் விளைவை ஏற்படுத்துவார். ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்திலிருந்து செப்டம்பர் நடுவில் வரை குரு பெயர்ச்சியால் உங்கள் ராசியின் நான்காவது வீட்டை பார்வை இடக்கூடும். இதனுடவே 4 மே முதல் 28 மே வரை சுக்கிரன் பெயர்ச்சி உங்கள் ராசியில் இருக்கும், இதனால் உங்கள் லக்கின வீடு பதிப்படையக்கூடும். இதனுடவே சூரியன் மற்றும் புதன் இந்த ஆண்டு உங்களின் பெயர்ச்சினால், உங்கள் ராசியின் வெவ்வேறு வீட்டில் நீங்கள் செயல் படுத்துவீர்கள்.
இதனால் உங்களுக்கு தொழில் வாழ்க்கையில் அதிர்ஷடம் கைகொடுக்கும் மற்றும் உங்களுக்கு பதவி உயர்வு ஏற்படக்கூடும். வியாபார ஜாதகக்காரர்களுக்கு உங்கள் கடின உழைப்பின் அடிப்படையில் நல்ல பலன் பெறக்கூடும். இருப்பினும் பொருளாதார வாழ்க்கையில் குறைவான பலன் கிடைக்கும், ஏனென்றால் இந்த ஆண்டு உங்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இருப்பினும் உங்களுக்கு இடையில் உங்களுக்கு செல்வம் வெவ்வேறு இடத்திலிருந்து கிடைக்க கூடும், இதன் லாபத்தினால் உங்களுக்கு பொருளாதார நிலை விலக கூடும். மாணவர்களுக்கு இந்த ஆண்டு கடினமாக உழைக்க வேண்டி இருக்கும்.
ஆண்டின் தொடக்கத்தில் கல்வியில் நல்ல பலன் கிடைக்காது, ஆனால் சீராக நிலைமை கட்டுக்குள் வரக்கூடும். இதனால் மாணவர்களுக்கு வெளிநாடு சென்று கல்வி கற்க வாய்ப்பு கிடைக்கும். குடும்ப மகிழ்ச்சி குறைவாக காணக்கூடும், ஆனால் குடும்பத்தில் எதாவது மங்களகரமான நிகழ்ச்சி ஏற்பாடு செய்வதால் குடும்ப சூழ்நிலை மகிழ்ச்சியாக இருக்ககூடும். திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகள் வரக்கூடும், இதனால், உங்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கும்.
எனவே நீங்கள் யாரையாவது காதலித்து கொண்டிருந்தாள், உங்களுக்கு இந்த நேரம் மிகவும் நன்றாக இருக்கும். இந்தநேரம் உங்கள் பிரியமானவரின் முழு ஆதரவு கிடைக்கும் காரணத்தினால், பணித்துறையில் சிறப்பாக செயல் பட வாய்ப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கிய ரீதியாக பார்க்கும் பொழுது இந்த நேரம் உங்களுக்கு கவலை தரக்கூடியதாக இருக்கும், ஏனென்றால் ராகு கேது நிலை உங்கள் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படுத்தும்.
மேலும் விரிவாக ரிஷப ராசி பலன் படிக்க - ரிஷப ராசி பலன் 2021 கிளிக் செய்யுங்கள்
மிதுன ராசிபலன் 2021
மிதுன ராசி பலன் 2021 படி, இந்த ஆண்டு தொடக்கத்தில் உங்கள் ராசியின் பத்தாவது வீட்டின் அதிபதி, குரு ஆண்டின் முதல் மாதத்தில் உங்கள் ராசியின் எட்டாவது வீட்டில் இருக்கும், இதற்கு பிறகு இந்த பெயர்ச்சியின் விளைவால் உங்கள் ராசியின் ஒன்பதாவது வீட்டில் பாதிப்பு ஏற்படுத்துவார். சனி பகவானும் இந்த ஆண்டு முழுவதும் உங்கள் ராசியின் எட்டாவது வீட்டில் அமர்ந்திருப்பார். அதே நிழல் கிரகம் கேது மற்றும் ராகு உங்கள் ராசியின் ஆறாவது மற்றும் இரெண்டாவது வீட்டில் அமர்ந்திருப்பார். சிவப்பு கிரகம் செவ்வாய் உங்கள் நான்காவது மற்றும் ஐந்தாவது வீட்டை ஆண்டின் இறுதியில் செயல்படுத்தும். ஆரம்பத்தில் சூரியனும் புதனும் உங்கள் ஏழாவது வீட்டில் இருக்கும்போது, அவை ஆண்டு முழுவதும் உங்கள் ராசியின் வெவ்வேறு வீட்டை பாதிக்கும்.
இதனால் கிரகத்தின் இந்த நிலை காரணமாக உங்கள் தொழில் வாழ்க்கையில் பல ஏற்றத்தாழ்வுகள் எதிர்கொள்ள கூடும். இந்த நேரத்தில் வேலை ஜாதகக்காரர்களுக்கு, தங்களின் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்காத காரணத்தினால் கவலை படக்கூடும். இந்த நேரத்தில் உங்களுக்கு பதவி உயர்வு ஏற்படக்கூடும், ஆனால் கொஞ்சம் காத்திருக்க வேண்டி இருக்கும். வியாபாரி ஜாதகக்காரர்களுக்கு இந்த நேரம் மிகவும் நன்றாக இருக்கும். ஆனால் இந்த நேரத்தில் எதாவது கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும்.
பொருளாதார வாழ்கையில் ஏமாற்றம் ஏற்படக்கூடும், ஏனென்றால் உங்கள் செல்வம் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மாணவர்களுக்கு இந்த ஆண்டு கடின உழைப்பு மற்றும் முயற்சிக்கு பிறகு மட்டுமே வெற்றி அடையக்கூடும். இதனால் உங்கள் லட்சியத்தில் குறிக்கோள் கொண்டு கடினமாக முயற்சி செய்ய வேண்டும். குடும்ப வாழ்க்கையில் வீட்டின் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். எனவே நீங்கள் திருமண ஆனவராக இருந்தால், வாழ்கை துணைவியாருக்கும் மற்றும் உங்களுக்கும் மோதல் ஏற்படக்கூடும்.
குழந்தைகளுக்கு கலவையான பலன் கிடைக்கும், ஆனால் காதல் ஜாதகக்காரர் வாழ்க்கையில் இந்த ஆண்டு முக்கியமான மாற்றம் வாரக்கூடும். உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் கவலை தரக்கூடியதாக இருக்கும். இதனால் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
மேலும் விரிவாக மிதுன ராசி பலன் படிக்க - மிதுன ராசி பலன் 2021 கிளிக் செய்யுங்கள்
கடக ராசி பலன் 2021
கடக ராசி பலன் 2021 படி, இந்த ஆண்டு தொடக்கத்தில் சிவப்பு கிரகம் உங்கள் ராசியின் பத்தாவது வீட்டில் இருக்கும். இதற்கு பிறகு இதன் பெயர்ச்சி உங்கள் ராசியின் பதினொன்றாவது மற்றும் பனிரெண்டாவது வீட்டில் இருக்கும். இதனுடவே இந்த ஆண்டு முழுவது சனி பகவான் உங்கள் ராசியின் ஏழாவது வீட்டில் ஆமர்ந்து கொண்டு உங்கள் ராசியின் நான்காவது வீட்டை பார்வை இடுவார். அதே ராகு மற்றும் கேது இந்த ஆண்டு முழுவதும் உங்கள் ராசியின் ஐந்தாவது மற்றும் மூன்றாவது வீட்டில் குடிகொண்டிருப்பார். இதனுடவே இந்த ஆண்டு தொடக்கத்தில் சூரியன் மற்றும் புதன் உங்கள் ராசியின் ஏழாவது வீட்டில் அமர்ந்து வெவ்வேறு வீட்டில் விளைவை ஏற்படுத்தக்கூடும்.
இதனுடவே இந்த ஆண்டு முழுவதும் சுக்கிரன் பெயர்ச்சி உங்கள் ராசியின் விளைவை ஏற்படுத்துவார். இதனால் உங்கள் தொழில் வாழ்க்கையில் வேகமாக செயல்பட வாய்ப்பு கிடைக்கும், இதனால் நீங்கள் முன்னேற்றம் அடைவீர்கள் மற்றும் உங்களுக்கு பதவி உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. வியாபார ஜாதகக்காரர்களுக்கு இந்த ஆண்டு முதலீட்டிற்கு மிகவும் நன்மையனதாக இருக்கும். பொருளாதார வாழ்க்கைக்கு சில பிரச்சனைகள் வரக்கூடும், ஆனால் நீங்கள் உங்கள் கடின உழைப்பின் காரணத்தினால் உங்கள் கவலையிலிருந்து விடுபடக்கூடும்.
மாணவர்களுக்கும் இந்த நேரம், அவர்களின் ஒவ்வொரு விசியத்தையும் புரிந்து கொள்ள வெற்றி கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் கலவையான பலன் கிடைக்கும், இதன் அடிப்படையில் உங்களுக்கு இன்னொரு குடும்பத்தின் ஆதரவு கிடைக்கும், எனவே, உங்கள் முடிவின் காரணமாக, குடும்பம் உங்களுக்கு எதிராகக் காணப்படும்.
திருமண ஜாதகக்காரர்களுக்கு உங்கள் வாழ்கை துணைவியாருடன் எதாவது காரணத்தினால் சண்டை வரக்கூடும். இந்த நேரத்தில் உங்கள் வாழ்கை துணைவியார் ஆன்மிக மத விசியங்களில் அதிகமாக ஈடுபடக்கூடும். தாம்பத்திய வாழ்கையில் சூழ்நிலை நன்றா இருக்காது, எனவே நீங்கள் யாரையாவது காதலித்து கொண்டிருந்தால், உங்களுக்கு இந்த ஆண்டு மிகவும்நன்றாக இருக்கும். இந்த ஆண்டு உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த அறிவுறுத்த படுகிறது.
மேலும் விரிவாக கடக ராசி பலன் படிக்க - கடக ராசி பலன் 2021 கிளிக் செய்யுங்கள்
சிம்ம ராசி பலன் 2021
சிம்ம ராசி பலன் 2021 படி, இந்த ஆண்டு நிழல் கிரகம் ராகு மற்றும் கேது உங்கள் ராசியில் ஆறாவது மற்றும் நான்காவது வீட்டில் அமர்ந்திருக்கும். இதனுடவே இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் உங்கள் ராசியின் ஆறாவது வீட்டில் அமர்ந்திருப்பார். ஆண்டின் தொடக்கத்தில் சனி பகவான் குருவுடன் ஆறாவது வீட்டில் அமர்ந்திருப்பதால், புதிய விளைவு ஏற்படுத்தக்கூடும். அதே இந்த ஆண்டு செவ்வாய் உங்கள் ராசியின் ஒன்பதாவது வீட்டில் இருப்பதால், உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும் மற்றும் பிறகு ஏப்ரல் முதல் மே உடையில் பதினொன்றாவது மற்றும் பனிரெண்டாவது வீட்டில் நுழைவார்.
இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் தொழில் வாழ்க்கையில் எதிரிகளிடம் மிகவும் கவனமாக இருக்கவும். இருப்பினும் நீங்கள் அவர்கள் மீது மிகவும் ஆக்ரோஷமாக இருக்க கூடும், இதனால் நீங்கள் அனைத்து வேலைகளும் நேரத்திற்கு ஏற்ப முடிக்ககூடும். பொருளாதார வாழ்க்கை பார்க்கும் பொழுது, செலவு அதிகரிக்க கூடும், இதன் விளைவு உங்கள் பொருளாதார வாழ்க்கையில் ஏற்படக்கூடும். மாணவர்களுக்கு தேர்ச்சியில் வெற்றி பெற முந்தயவிட அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். வெளிநாடு செல்ல விரும்பும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு ஏமாற்றம் இருக்கக்கூடும்.
குடும்ப வாழ்க்கையில் சாதகமற்றதாக இருக்கும், இதனால் உங்கள் குடும்பத்தில் சண்டை வரக்கூடும். திருமண ஜாதகக்காரர்களுக்கு உங்கள் வாழ்கை துணைவியாரின் ஆதரவு கிடைக்கும் மற்றும் தொழில் வாழ்க்கையில் சிறப்பாக செயல்படக்கூடும். தாம்பத்திய ஜாதகக்காரர்கள் குழந்தைகளின் பலவீனமான உடல் ஆரோக்கியத்தினால் கவலை அதிகரிக்க கூடும். காதலர்களின் அயோக்கியத்தனத்தை காதலர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
எனவே நீங்கள் இப்போது வரை தனியாக இருந்தால், உங்கள் சந்திப்பு யாராவது மிக முக்கியமானவருடன் ஏற்படக்கூடும். இந்த ஆண்டு உங்கள் உடல் ஆரோக்கியத்தில் முழு கவனமாக இருக்க வேண்டும், இல்லையெனில் உங்களுக்கு சிறுநீரகங்கள் தொடர்பான எந்த நோயும் ஏற்படுத்தும்.
மேலும் விரிவாக சிம்ம ராசி பலன் படிக்க - சிம்ம ராசி பலன் 2021 கிளிக் செய்யுங்கள்
கன்னி ராசி பலன் 2021
கன்னி ராசி பலன் படி, இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் உங்கள் ராசியின் ஐந்தாவது வீட்டில் நுழைவார். இதனுடவே தொடக்கத்தில் செவ்வாய் பகவான் உங்கள் ராசியின் எட்டாவது வீட்டில் அமர்ந்து கொண்டு ஒன்பதாவது மற்றும் பத்தாவது வீட்டில் விளைவை ஏற்படுத்தக்கூடும். இதனுடவே ராகு மற்றும் கேது உங்கள் ராசியின் ஒன்பதாவது மற்றும் மூன்றாவது வீட்டில் அமர்ந்திருப்பார். குரு உங்கள் ராசியின் ஐந்தாவது வீட்டிலிருந்து ஆறாவது மற்றும் ஏழாவது வீட்டில் பெயர்ச்சி கொள்ளக்கூடும் மற்றும் உங்களுக்கு அதிக விளைவை ஏற்படுத்தக்கூடும்.
எனவே இந்த நேரத்தில் உங்களுக்கு பணித்துறையில் மிகவும் ஏற்றத்தாழ்வு சூழ்நிலையில் செல்லக்கூடும். இந்த நேரத்தில் வேலை இருக்கும் ஜாதகக்காரர்களுக்கு இடமாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. வியாபாரம் செய்பவர்களுக்கு நேரம் நன்றாக இருக்கும். இருப்பினும், வணிக கூட்டாளிகள் ஒவ்வொரு ஒப்பந்தத்தையும் வேண்டுமென்றே செய்ய வேண்டும். நிதி வாழ்க்கையில் சிக்கல் இருக்கலாம், ஆனால் ராகுவின் புனிதமான பார்வை உங்களுக்கு நல்ல பலன்களைக் கொடுக்கும் அதே வேளையில் பணம் சம்பாதிக்க பல வாய்ப்புகளைத் தரும்.
மாணவர்களுக்கு கல்வியில் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும், தற்போது தான் உங்களுக்கு கடின உழைப்பின் அடிப்படையில் உங்களுக்கு பலன் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் வீட்டின் உறுப்பினரின் ஆதரவு கிடைக்காத காரணத்தினால் அழுத்தம் அதிகரிக்கும். திருமண ஜாதகக்காரர்களுக்கு உங்கள் வாழ்க்கையின் துணைவியின் ஆதரவால் பணித்துறையில் நல்ல பலன் கிடைக்கும், அதே குழந்தைகளுக்கு உடல் ஆரோக்கியம் பதிப்படைய வாய்ப்புள்ளது. நீங்கள் இன்னும் தனிமையில் இருந்தால், இது உங்களுக்கு ஒரு நல்ல நேரம், ஆனால் இந்த ஆண்டு காதலிக்கும் மக்களின் வாழ்க்கையில் பல சிறப்பு மாற்றங்கள் இருக்கும். இந்த ஆண்டு ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும். உங்கள் தைரியம் மற்றும் வலிமை அதிகரிப்பதால் உங்களுக்கு எந்த உடல்நலப் பிரச்சினையும் ஏற்படாது.
மேலும் விரிவாக கன்னி ராசி பலன் படிக்க - கன்னி ராசி பலன் 2021 கிளிக் செய்யுங்கள்
துலா ராசி பலன் 2021
துலா ரா சிபலன் படி, இந்த ஆண்டு உங்கள் ராசியின் எட்டாவது மற்றும் இரெண்டாவது வீட்டில் ராகு - கேது அமர்ந்திருப்பார். இதனுடவே சனி பகவான் இந்த ஆண்டு உங்கள் ராசியின் நான்காவது வீட்டில் அமர்ந்து கொண்டு பத்தாவது வீட்டை பார்வை இடுவார். செவ்வாய் கிரகம் தொடக்கத்தில் உங்கள் ராசியின் ஏழாவது வீட்டில் அமர்ந்திருப்பார், பெயர்ச்சி கொண்டே உங்கள் ராசியின் எட்டாவது, ஒன்பதாவது, மற்றும் பத்தாவது வீட்டில் அதிகமாக விளைவு ஏற்படுத்தக்கூடும்.
இதனுடவே சுக்கிரன், குரு, சூரியன் மற்றும் புதன் பெயர்ச்சி உங்கள் ராசியில் வெவ்வேறு வீட்டில் இந்த ஆண்டு இருக்ககூடும், இதனால் உங்களுக்கு பணித்துறையில் சாதகமான பலன் கிடைக்கும். நீங்கள் வளருவீர்கள், அதே போல் வணிக நபர்களும் சில ரகசிய மூலங்களிலிருந்து பயனடைவார்கள். நிதி வாழ்க்கையில் செல்வம் கிடைக்கும், இதன் காரணமாக உங்கள் பணத்தை மத வேலைகளில் செலவிடுவீர்கள். இந்த ஆண்டின் நடுப்பகுதி மாணவர்களுக்கு சிறந்ததாக இருக்கும். இந்த நேரத்தில் மாணவர்கள் தங்கள் சிறந்த செயல்திறனை வழங்குவதில் வெற்றி பெறுவார்கள். குடும்ப வாழ்க்கையில் சில காரணங்களால் நீங்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டியிருக்கும்.
அத்தகைய சூழ்நிலையில், குடும்ப உறுப்பினர்களின் பற்றாக்குறையை நீங்கள் உணருவீர்கள். நீங்கள் திருமணமானவராக இருந்தால், உங்களுக்கும் உங்கள் வாழ்க்கைத் துணைவியாரும் இடையேயான அன்பின் பற்றாக்குறை உங்களைத் தொடர்ந்து வேட்டையாடும். இந்த நேரம் குழந்தைகளுக்கு நன்றாக இருக்கும். குழந்தையின் சிறந்த எதிர்காலத்திற்காக நீங்களும் உங்கள் வாழ்க்கைத் துணைவியாரும் ஒரு பெரிய முடிவை எடுப்பீர்கள்.
நீங்கள் உண்மையிலேயே ஒருவரை நேசிக்கிறீர்கள் என்றால், இந்த ஆண்டு உங்களுக்கு நன்மையாக இருக்கும். இந்த நேரம் நீங்கள் காதல் திருமணம் செய்ய வாய்ப்புள்ளது. இருப்பினும், நீங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறப்பு கவனம் செலுத்த வேண்டும், இல்லையெனில் ராகு-கேதுவைப் பார்ப்பது உங்களுக்கு சில பெரிய நோய்களைத் தரும்.
மேலும் விரிவாக துலா ராசி பலன் படிக்க - துலா ராசி பலன் 2021 கிளிக் செய்யுங்கள்
விருச்சிக ராசி பலன் 2021
விருச்சிக ராசி பலன் படி, சனி பகவான் உங்கள் ராசியின் மூன்றாவது வீட்டில் ஆண்டு முழுவதும் அமர்ந்திருப்பார். மேலும் ராகு-கேது ஆண்டு முழுவதும் உங்கள் ஏழாவது மற்றும் முதல் வீட்டை பாதிக்கும். இதனுடன், செவ்வாய், சுக்கிரன், புதன், குரு மற்றும் சூரிய பகவான் ஆகியவையும் 2021 ஆம் ஆண்டில் வெவ்வேறு வழிகளில் உங்களைப் பாதிக்கும்.
இதன் காரணமாக நீங்கள் வாழ்க்கையில் நிறைய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் துறையில் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். மேலும், வணிகர்கள் ஒரு பயணத்தின் மூலம் பயனடைவார்கள். நிதி நிலைமை நன்றாக இருக்கும், ஆனால் திடீர் செலவுகள் காரணமாக உங்களுக்கு சிக்கல் இருக்கலாம். தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். இந்த விஷயத்தில், உங்கள் கடின உழைப்பைத் தொடரவும்.
இந்த ஆண்டு உங்களுக்கு குடும்ப மகிழ்ச்சி கிடைக்கும். அதே நேரம், திருமண ராசி ஜாதகக்காரர்களுக்கு தங்கள் மனைவியின் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் குழந்தை தரப்பில் நன்றாக இருக்கும், அவர்களுடனான உங்கள் உறவு மேம்படும். காதலில் உள்ளவர்கள் ஒருவருக்கொருவர் அதிக நம்பிக்கை காட்ட வேண்டும், இல்லையெனில் உறவு முறிந்து போகக்கூடும். உங்கள் உடல் ஆரோக்கியத்தை பார்க்கும் பொது, இந்த ஆண்டு உங்களுக்கு திடீரென்று சில சிறப்பு பிரச்சினைகள் வரக்கூடும்.
மேலும் விரிவாக விருச்சிக ராசி பலன் படிக்க - விருச்சிக ராசி பலன் 2021 கிளிக் செய்யுங்கள்
தனுசு ராசி பலன் 2021
தனுசு ராசி பலன் படி, இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் உங்கள் ராசியின் பனிரெண்டாவது வீட்டில் அமர்ந்து நான்காவது வீட்டை பார்வை இடுவார். இதனுடன், நிழல் கிரகமான கேது உங்கள் ராசியின் பனிரெண்டாவது வீட்டிலும் மற்றும் உங்கள் ராசியின் ஆறாவது வீட்டில் ராகு அமர்ந்திருப்பார். ஆரம்பத்தில், குரு உங்கள் ராசியின் இரண்டாவது வீட்டில் இருப்பதால் சனியுடன் ஒன்றிணைவார். ஆண்டின் நடுப்பகுதியில் செவ்வாய் ஆறாவது வீட்டிலிருந்து ஏழாவது வீட்டிற்கு பெயர்ச்சி கொள்ளக்கூடும்.
அத்தகைய சூழ்நிலையில், இந்த அனைத்து முக்கிய கிரகங்களின் நிலை காரணமாக, சக ஊழியர்களின் உதவியுடன் உங்கள் வாழ்க்கையில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். இந்த ஆண்டு வணிகர்களுக்கும் நல்லது. அவர்கள் வியாபாரத்தில் மகத்தான வெற்றியைப் பெறுவார்கள், இது அவர்களின் நிதி நிலையை பலப்படுத்தும். இந்த ஆண்டு மாணவர்கள் கல்வியில் வெற்றி பெறுவார்கள்.
மேலும், வெளிநாட்டில் படிக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். குடும்ப மகிழ்ச்சி அதிகரிக்கும், மற்றும் இளைய உடன்பிறப்புகள் உங்களுக்கு ஆதரவளிப்பார்கள். திருமணமானவர்களிடையே வாழ்க்கைத் துணைவர்களின் உடல்நிலை சரியில்லாததால், அவர்களின் வாழ்க்கையில் மன அழுத்தம் அதிகரிக்கும். ஆனால் இந்த ஆண்டு நீங்கள் குழந்தைகளிடம் அதிக விழிப்புடன் இருப்பீர்கள்.
இந்த ஆண்டு காதலர்களுக்கு மிகவும் உணர்ச்சிவசப்படும், ஆனால் உங்கள் காதலியுடன் ஒரு காதல் பயணம் மேற்கொள்ள உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். இருப்பினும், ஆரோக்கியத்தில், நீங்கள் வழக்கத்தை விட குறைவான நல்ல பலன்களை பெறுவீர்கள், எனவே காய்ச்சல் போன்ற சிறிய பிரச்சினைகளிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
மேலும் விரிவாக தனுசு ராசி பலன் படிக்க - தனுசு ராசி பலன் 2021 கிளிக் செய்யுங்கள்
மகர ராசி பலன் 2021
மகர ராசி பலன் படி, உங்கள் ராசியின் அதிபதி சனி உங்கள் ராசியின் சொந்த வீட்டில் நுழைவார். இதனுடன், ஆரம்பத்தில் குரு, உங்கள் ராசியின் சொந்த வீட்டில் அமர்ந்திருக்கும்போது, சனியுடன் ஒன்றிணைந்து, பிறகு உங்கள் ராசியின் இரண்டாவது வீட்டில் நுழைவார். ராகு உங்கள் ஐந்தாவது வீட்டிலும், கேது உங்கள் பதினொன்றாவது வீட்டிலும் பெயர்ச்சி செய்வார். இந்த ஆண்டு செவ்வாய் உங்கள் நான்காவது வீட்டின் வழியாக உங்கள் வெவ்வேறு வீட்டை பாதிக்கும். ஜனவரி மாத இறுதியில், சுக்கிரனும் உங்கள் ராசியின் சொந்தவீட்டில் அமர்ந்திருப்பார்.
குடும்ப வாழ்க்கையில் உங்கள் தாயின் உடல் ஆரோக்கியம் பதிப்படையக்கூடும். இந்த நேரத்தில், வீட்டில் மகிழ்ச்சியின் பற்றாக்குறை இருக்கும். நீங்கள் திருமண ராசி ஜாதகக்காரர் பற்றி பேசும் பொது, உங்கள் திருமண வாழ்க்கையில் நீங்கள் மந்தமாக இருப்பீர்கள். இருப்பினும், பின்னர் உங்கள் வாழ்க்கை துணையுடன் வெளியே செல்ல உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். காதலர்கள் தங்கள் வாழ்க்கையில் பரிசுகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கும். மேலும், ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், இந்த ஆண்டு உங்களுக்கு நல்லதாக இருக்கும்.
மேலும் விரிவாக மகர ராசி பலன் படிக்க - மகர ராசி பலன் 2021 கிளிக் செய்யுங்கள்
கும்ப ராசி பலன் 2021
கும்ப ராசி பலன் 2021 படி, இந்த ஆண்டு உங்கள் ராசியில் பனிரெண்டாவது வீட்டில் சனி பகவான் நுழைவார். இதனுடன், குரு ஏப்ரல் வரை உங்கள் ராசியின் சொந்த வீட்டில் இருக்கும், அதன் பிறகு, உங்கள் ராசியின் பத்தாவது வீட்டிற்கு பெயர்ச்சி கொள்வார். சனியுடன் ஒன்றிணைக்கும். ராகு உங்கள் ராசியின் நான்காவது வீட்டையும், பத்தாவது வீட்டில் கேதுவையும் இருக்கும். பொருள் இன்பங்களின் பகவான் சுக்கிரன் ஆரம்பத்தில் உங்கள் ராசியின் சொந்த வீட்டில் அமர்ந்திருப்பார், பிறகு உங்கள் ராசியின் இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது வீட்டின் பெயர்ச்சியின் மூலம் உங்கள் மாறுபட்ட உணர்ச்சிகளை செயல்படுத்தும்.
அத்தகைய சூழ்நிலையில், இந்த ஆண்டு முழுவதும் இந்த முக்கிய கிரகங்களின் விளைவுக்கு ஏற்ப நீங்கள் பலன்களை பெறுவீர்கள். இந்த ஆண்டு தொழில் வாழ்க்கையில் மிகவும் சிறப்பாக இருக்காது. நேரம், குறிப்பாக நடுத்தரத்திற்குப் பிறகு, உங்களுக்கு சாதகமாக இருக்காது. தொழில் துறை தொடர்பாக ஒரு பயணத்தில் செல்ல வாய்ப்பு கிடைக்கும். பொருளாதார வாழ்க்கையில் செலவினங்களில் திடீர் அதிகரிப்பு ஏற்படும், இதன் காரணமாக நிதி நெருக்கடி உணரப்படும்.
இந்த நேரம் மாணவர்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும், அவர்கள் கடின உழைப்புக்கு ஏற்ப பலன்களை பெறுவார்கள். குடும்ப வாழ்க்கையில் வேலையின் சுமை இருப்பதால், குடும்ப உறுப்பினர்களின் அன்பின் உணர்வு குறையும். நீங்கள் திருமணமானவராக இருந்தால், உங்கள் வாழ்க்கை துணையின் உதவியுடன் உங்களுக்கு நன்மை கிடைக்கும். இந்த ஆண்டு குழந்தைகளுக்கு நன்றாக இருக்கும். நீங்கள் ஒருவரை நேசிக்கிறீர்கள் என்றால், இந்த ஆண்டு உங்கள் காதலி உங்களை நோக்கி மிகவும் அன்பு கொண்டவராக இருப்பார். இருப்பினும், இந்த ஆண்டு ஆரோக்கிய வாழ்க்கை ஓரளவு பலவீனமாக இருக்கலாம். இத்தகைய சூழ்நிலையில், வாயு, அமிலத்தன்மை, மூட்டு வலி, குளிர் போன்ற பிரச்சினைகளிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் விரிவாக கும்ப ராசி பலன் படிக்க - கும்ப ராசி பலன் 2021 கிளிக் செய்யுங்கள்
மீனம் ராசி பலன் 2021
மீன ராசி பலன் படி, இந்த ஆண்டு சனி உங்கள் ராசியின் பதினொன்றாவது வீட்டில் அமர்ந்து கொண்டு உங்கள் ராசியின் ஐந்தாவது வீட்டை பார்வை இடுவார். இதனுடன், செவ்வாய் இந்த ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசியின் இரண்டாவது வீட்டில் அமர்ந்திருப்பார், பிறகு உங்கள் ராசியின் மூன்றாவது மற்றும் நான்காவது வீட்டில் பெயர்ச்சி செய்வார். அதே நேரத்தில், குரு உங்கள் ராசியின் வீட்டில் அமர்ந்து, சனியைப் போலவே உங்கள் ராசியின் ஐந்தாவது வீட்டையும் பார்ப்பார். உங்கள் ராசியின் மூன்றாவது வீட்டில் நிழல் கிரகம் ராகு, கேது உங்கள் ராசியின் ஒன்பதாவது வீட்டில் அமர்ந்திருப்பார். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் வாழ்க்கையில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள்.
இந்த நேரம் உங்கள் தொழில் வாழ்க்கையில் வேகம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது. இதனுடன், வணிகர்களும் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள். நிதி வாழ்க்கையில் வருமானத்திற்கு பல வாய்ப்புகள் இருக்கும், ஆனால் அதனுடன் உங்கள் செலவுகளும் அதிகரிக்கும். இந்த ஆண்டு, மாணவர்கள் தங்கள் பாடங்களைப் புரிந்து கொள்வதில் சிரமங்களை சந்திக்க நேரிடும்.
குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். உங்களது எந்தவொரு பரம்பரை சொத்திலிருந்தும் நீங்கள் பயனடைவீர்கள். திருமண ஜாதகக்காரர்களுக்கு தங்கள் மனைவியுடன் சிறந்த உறவைக் கொண்டிருப்பார்கள், மேலும் அன்பையும் சொந்தத்தையும் அதிகரிக்கும். குழந்தை தரப்பினரும் தங்கள் படிப்பில் சிறப்பாகச் செயல் பட ஒரு வாய்ப்பைப் பெறுவார்கள்.
எனவே நீங்கள் ஒருவரை நேசிக்கிறீர்கள் என்றால், இந்த ஆண்டு உங்கள் காதலனுடன் ஒரு பெரிய முடிவை எடுக்கலாம். நீங்கள் ஒரு காதலியுடன் காதல் திருமணம் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த ஆண்டு குறிப்பாக ஆரோக்கியத்திற்கு நல்லது.
மேலும் விரிவாக மீன ராசி பலன் படிக்க - மீன ராசி பலன் 2021 கிளிக் செய்யுங்கள்
Astrological services for accurate answers and better feature
Astrological remedies to get rid of your problems
AstroSage on MobileAll Mobile Apps
- Rashifal 2025
- Horoscope 2025
- Chinese Horoscope 2025
- Saturn Transit 2025
- Jupiter Transit 2025
- Rahu Transit 2025
- Ketu Transit 2025
- Ascendant Horoscope 2025
- Lal Kitab 2025
- Shubh Muhurat 2025
- Hindu Holidays 2025
- Public Holidays 2025
- ਰਾਸ਼ੀਫਲ 2025
- ରାଶିଫଳ 2025
- രാശിഫലം 2025
- રાશિફળ 2025
- రాశిఫలాలు 2025
- রাশিফল 2025 (Rashifol 2025)
- Astrology 2025