ராசி பலன் 2018 - Rasi Palan 2018 - 2018 Horoscope In Tamil
Rasi Palan 2018 is now available at AstroSage. Rasi palan or Rasi Palangal 2018 will get you the predictions on your finance, education, love, marriage, family, health and other issues of life. With aal Tamil zodiac signs, this rasi palan will guide you to take necessary steps throughout the year for your betterment. Tamil is one of the vital languages spoken in India. It is also the official languages of few countries including Sri Lanka and Singapore. With our Tamil horoscope, you will be able to find the results of major events happening in your life. Along with the 2018 Rasi Palan, you will also get some remedies which will further ward off bad energies to reach you. To know more, read on your Tamil horoscope.
கிரஹங்களின் கோச்சாரம் அன்றாடம் நடக்கும் ஒரு நிகழ்ச்சி. இவர்களது சஞ்சாரம் நமது வாழ்க்கையில் எந்த விதமான திருப்பங்கள் மற்றும் மாற்றங்கள் கொண்டு வரும் என்பதை இந்த 2018 ராசி பலன் மூலம் நாங்கள் உங்களுக்கு தெரிவிக்கிறோம். இந்த ராசி பலன் தொகுப்பு ஜனவரி முதல் டிசம்பர் 2018 வரை உள்ளது.
உங்கள் வாழ்க்கையின் முக்கிய சமாசாரங்களான படிப்பு, பணம், ஆரோக்கியம், வேலை, கல்யாணம், உறவு, நட்பு, குடும்பம், கேளிக்கை மற்றும் ஆன்மீக விஷயங்களை அலசி ஆராய்ச்சி செய்திருக்குகிறோம். மேலும் உங்களுக்கு வருகிற பிரச்சனைகள் மற்றும் அதனை சமாளிக்கும் பரிகார முறைகளை பற்றியும் தெரிவித்திருக்கிறோம். மேஷம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும் என்பதை இந்த தொகுப்பில் நீங்கள் காணலாம்.
இந்த 2018 ராசி பலன் கிரஹ கோச்சாரத்தின் முக்கிய விஷயங்களை உங்கள் ஜாதக பலன்கள், அம்சங்கள் மற்றும் தசா-புக்தி விவரத்துடன் கலந்து கொடுத்துள்ளோம். இந்த தொகுப்பை உங்கள் ஜாதக பலன்களுடன் ஒருங்கிணைத்து ஆராயவும், ஏற்கவும்.மேஷம் (Mesham)
செவ்வாய் கிரஹத்தை ராசிநாதன் ஆக கொண்டிருக்கும் மேஷ ராசிக்காரர்களே, இந்த வருடம் மிஸ்ர பலன்களை குறிப்பிட்டாலும், கிட்டத்தட்ட அனைத்து பலன்களும் நல்லதாகவே இருக்கும். சனி 9ஆம் வீடு தனுசில், குரு 7ஆம் வீடு துலாவில், ராகு 4ஆம் வீடு கடகத்தில், கேது 10ஆம் வீடு மகரத்தில் உள்ளன. ராசி அதிபதி செவ்வாய் வருடத்தின் மத்தியில் ஆரம்பித்து இறுதி வரைக்கும் 10ஆம் வீடு மகரத்தில் கேதுவுடன் இருக்கிறார். இது ராசிநாதனுக்கு உச்ச வீடு என்பதால் எல்லா கவனமும் செய்யும் வேலையில் முன்னேறுவதில் இருப்பீர்கள். வருடத்தை உற்சாகத்துடனும் ஆரம்பிப்பீர்கள். சாகசமாகவும், தைர்யமாகவும் எல்லா முடிவுகளையும் எடுப்பீர்கள். பதவி உயர்வு, ஊதிய உயர்வு நிச்சயம் உண்டு. வெளிநாட்டு வ்யாபாரிகளுடன் கூட்டு ஒத்துழைப்பு பெருமளவில் நன்மை தரும். கார்ய சம்பந்த தூர பிரயாணங்கள் பயனுள்ளதாக இருக்கும். வாழ்க்கை துணையுடன் நெருக்கம் இருந்தாலும், வீட்டில் நிம்மதியும் சந்தோஷமும் குறைவாக இருக்க காண்பீர்கள். தாய் தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனக்குறைவு பெரிய பிரச்னையாகலாம்.
- வில்வ மரத்திற்கு பூஜை செய்யவும். வில்வத்தின் வேர்களை அணிந்து பயன் பெறவும்.
- அதிகாலையில் சூர்ய பகவானை வணங்கி, தாம்பிர செம்பில் ஜலம் அர்பணிக்கவும். நன்மை உண்டாகும்.
ரிஷபம் (Rishabam)
சுக்கிர கிரஹத்தை ராசிநாதன் ஆக கொண்டிருக்கும் ரிஷப ராசிக்காரர்களே, இந்த வருடம் முழுவதும் பல்வேறு பிரச்னைகள் தலை தூக்கும். சனி 8ஆம் வீடு தனுசில், குரு 6ஆம் வீடு துலாவில், ராகு 3ஆம் கடகத்தில் மற்றும் கேது 9ஆம் மகரத்தில் சஞ்சாரம் செய்கின்றனர். அஷ்டம சனியின் பிடியில் வருடம் முழுவதும் இருக்கிறீர்கள். குரு வருட இறுதியில் 6ஆம் வீட்டிலிருந்து 7ஆம் வீடு வ்ருச்சிகத்திற்கு வரும் உங்கள் நிலைமை பெரிதளவில் சரியாகும். ராகுவின் வலுவான ஸ்திதியினால் எந்த வித பிரச்னைகளையும் துணிவுடன் சந்திப்பீர்கள். அரும்பாடுபட்டு எடுத்த கார்யங்களை முடிப்பீர்கள். இருந்தாலும் செய்யும் வேலையில் அடிக்கடி தடங்கல்கள் வந்து கொண்டு இருக்கும். வீண் அலைச்சல் மற்றும் வேண்டாத பிரச்னைகள் இருக்கும். உங்கள் எதிர்பார்ப்பிற்கு மாறாக விளைவுகள் இருக்கும். வியாபாரிகள் பண சம்பந்தமான எந்த விஷயமும் பல முறை யோசித்து செய்தால் நல்லது. புதிய கூட்டோ அல்லது முதலீடோ வருட இறுதியில் உங்களுக்கு சாதகமாக இருக்கும். தந்தையுடன் மனஸ்தாபம் வரலாம்; அல்லது தந்தைக்கு அசௌகரியம் ஏற்படலாம்.
- ஆஞ்சநேயருக்கு தினமும் பூஜை, ஆராதனை செய்யுங்கள். செவாய்க்கிழமை, சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயருக்கு கோவிலில் விளக்கு ஏற்றவும்.
- சனிக்கிழமை தோறும் நவகிரஹ சன்னதியில் சனீஸ்வரனுக்கு எண்ணெய் தீபம் ஏற்றுங்கள்.
மிதுனம் (Midhunam)
புதன் கிரஹத்தை ராசிநாதன் ஆக கொண்டிருக்கும் மிதுன ராசிக்காரர்களே, பல்வேறு பிரச்னைகள் தலை தூக்கினாலும் சமயோஜித அறிவையும் நேர்மறை சிந்தனையையும் பிரயோகித்து வாழ்க்கையில் முன்னேறுவீர்கள். சனி 7ஆம் வீட்டில், குரு 5ஆம் வீட்டில், ராகு 2ஆம் வீட்டில் மற்றும் கேது 8ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார்கள். உங்கள் வாய் வார்த்தைகளினால் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் சிற்சில விஷயங்களில் சண்டை சச்சரவுகள் வரலாம். கவனமாக கையாளுங்கள். உங்கள் ஆரோக்கிய விஷயத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும்; திடீர் நோய் வர வாய்ப்பும் இருக்கிறது, அதிகமாக கவனம் தேவை. சிலர் தங்களுக்கு பிடித்தவர்களுடன் மண வாழ்க்கையில் இணைவார்கள். முதலில் மண-வாழ்க்கை பிரமாதமாக இருந்தாலும், வருட இறுதியில் சிறு வேறுபாடுகள் தலைதூக்கலாம். ஒருத்தரை ஒருவர் விட்டு கொடுக்காமல் நிலைமையை கையாளுங்கள். வேலை விஷயமாக சிலர் குடும்பத்தை விட்டு வெகு தூரம் செல்லலாம்; வெளிநாட்டு பயணம் கூட மேற்கொள்ளலாம். பாடுபட்டு உழைத்த பணம் விரயமாகும்; இந்த விஷயத்தில் சற்று கவனமாக இருக்கவும். வருட பிற்பகுதியில் உத்யோகஸ்தர்கள் கடினமாக உழைத்து முன்னேறுவார்கள்.
- தினந்தோறும் விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம் சொல்லுங்கள். பைரவ பூஜை நன்மை செய்யும்.
- அரவாணிகளுக்கு, திருநங்கைகளுக்கு உங்களால் முடிந்த உதவி செய்யவும்.
கடகம் (Kadagam)
சந்திரனை ராசிநாதன் ஆக கொண்டிருக்கும் கடக ராசிக்காரர்களே, வருடம் 2018 நிறைய சவால்களும் சில புதிய திருப்பங்களும் கொண்டு வரும். சனி 6ஆம் வீட்டில், குரு 4ஆம் வீட்டில், ராகு ஜென்மத்தில் மற்றும் கேது 7ஆம் வீட்டில் சஞ்சரிக்கிறார்கள். மனம் ஒரு நிலை இல்லாமல் தவிக்கும். வீட்டில், குடும்பத்தில் சந்தோசம் நிலவும். ஆனால் வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடுகள் இருக்கும். சிறிய பிரச்னையானாலும் உடனே தீர்வு காண முயலுங்கள். இந்த வருடம் முழுவதும் ஒரு புது விதமான உணர்வு பாய்வதை உடலிலும் உள்ளத்திலும் பாய்வதை உணர்வீர்கள். உங்கள் புரட்சிகரமான படைப்பாற்றலை மற்றவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள் அல்லது தப்பாக புரிந்து கொள்வார்கள். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். வேலை செய்யும் இடத்தில் விடா முயற்சியுடன் கார்யங்களை செய்து முடிப்பீர்கள். உங்கள் உடல் ஆரோக்கியமாக இருந்தாலும், உண்ணும் உணவில் கட்டுப்பாடு இருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். சின்ன பிரச்னை விஸ்வரூபம் எடுக்க வாய்ப்பிருக்கிறது.
- மஹாதேவரை தினமும் வணங்குங்கள். ருத்ர காயத்ரி, மஹா ம்ருத்யுஞ்சய மந்திரம் ஜெபியுங்கள். எல்லா விதத்திலும் நன்மை உண்டாகும்.
- பசு-பக்ஷிகள், நாய்களுக்கு தீனி கொடுங்கள். சனிக்கிழமை அன்ன தானம் மற்றும் ஏழை-எளியோர்களுக்கு தேவையான பொருள்கள் கொடுக்கவும்.
சிம்மம் (Simmam)
சூர்யனை ராசிநாதன் ஆக கொண்டிருக்கும் சிம்ம ராசிக்காரர்களே, மொத்தத்தில் ஒரு பிரமாதமான வருடம். குரு 3ஆம் வீட்டில், சனி 5இல், கேது 6இல் மற்றும் ராகு 12இல் கோச்சாரம் செய்கின்றன. மனம் சமயம், மதம் சம்பந்தமான அல்லது நல்ல செயல்கள் செய்வதிலும் லயிக்கும். புனித யாத்திரையும் மேற்கொள்ளலாம். கூட பிறந்தோர் மற்றும் நண்பர்களின் உதவி, ஆதரவு மற்றும் சஹயோகம் உங்களுக்கு கட்டாயம் கிடைக்கும். காதல் சம்பந்தங்களில் சில இன்பமான அனுபவங்களுடன் சிற்சில சிக்கல்களும் வரலாம். ஜாக்கிரதையாகவும் கவனமாகவும் இருக்கவும். வாழ்க்கை துணையுடன் சந்தோஷத்துடன் இருப்பீர்கள், இருந்தாலும் வருட மத்தியில் அனாவசிய பிரச்னைகளை பெரிது படுத்தாமல் தீர்வு காண முயலுங்கள். தந்தையின் அந்தஸ்து சமூகத்தில் உயரும், ஆனால் உடல் அசௌகர்யப்படலாம். செய்யும் வேலையில் கடுமையாக போட்டி இருந்தாலும், அயரா உழைப்புடன் காரியத்தில் இறங்கி, வேலையை செய்து முடிப்பீர்கள். வீடு, மனை வாங்கும் யோகம் வருடத்தின் இறுதியில் இருக்கிறது. அதற்குமுன் முயற்சி எடுக்காதீர்கள், வீண் அலைச்சலும் பண விரயமும் தான் மிஞ்சும்.
- சூர்ய பூஜை செய்யுங்கள். தந்தைக்கும், தந்தை சமான பெரியவர்களுக்கும் மரியாதையுடன் அன்பு சேவை செய்யுங்கள்.
- தார்மீக ஸ்தலத்தில் தர்மம், சேவை செய்யுங்கள். வறுமையில் இருக்கும் ஊனமுற்றோர், நோயாளிகளுக்கு உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள்.
கன்னி (Kanni)
புதன் கிரஹத்தை ராசிநாதன் ஆக கொண்டிருக்கும் கன்யா ராசிக்காரர்களே, அவ்வப்பொழுது வரும் அற்பமான பிரச்னைகளை தவிர்த்து இந்த வருடம் பிரமாதமாக இருக்கும். குரு 2இல், சனி 4இல், கேது 5இல் மற்றும் ராகு 11இல் சஞ்சாரம் செய்கிறார்கள். வாய்ப்புகள் ஏராளமாக வரும், சாதனையும் நிறைய செய்வீர்கள். இந்த வருடம் தன லாபத்தை குறிக்கிறது. உங்கள் புத்தி கூர்மையும், வாக்கு சாதுர்யமும் உங்களுக்கு பல்வேறு வெற்றிகளை தேடித்தரும். செய்யும் வேலையில் வேகமாக முன்னேறுவீர்கள். சமுகத்தில் அந்தஸ்து அதிகரிக்கும் மற்றும் உங்கள் வாழ்க்கையில் புதிய நண்பர்கள் வருவார்கள், மற்றும் புதிய தொடர்புகள் உண்டாகும். வீடு புதுப்பித்தல், அலங்கரித்தல், சீரமைப்பு போன்றவற்றில் உங்கள் தியானம் செல்லும். புது வீடு, மனை வாங்கும் முயற்சியில் முழு மூச்சுடன் சிலர் இறங்குவார்கள். இந்த மாதிரி விஷயங்களுக்கு இது உகந்த சமயம். குழந்தைகள், குறிப்பாக அவர்கள் படிப்பு மற்றும் ஆரோக்கியம் சம்பந்த விஷயங்களில், ரொம்பவே ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய சமயம். வாழ்க்கை துணை மூலம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் நல்லது நடக்கும்.
- விஷ்ணு காயத்ரி, சஹஸ்ரநாமம் மற்றும் விஷ்ணு பூஜை நன்மை தரும்.
- ராகு-கேது பரிகாரம் நல்லது. பல வண்ண விரிப்புகள் ஏழை-எளியோர்களுக்கு தானம் செய்யவும்.
துலாம் (Thulaam)
சுக்ர கிரஹத்தை ராசிநாதன் ஆக கொண்டிருக்கும் துலா ராசிக்காரர்களே, உங்கள் விருப்பம்படி சில விஷயங்கள் உருவாகவில்லை என்றாலும், ஒட்டுமொத்தமாக இந்த வருடம் முன்னேற்றத்தை குறிக்கிறது. வருடத்தை ஒரு புத்துணர்ச்சியுடன் ஆரம்பிப்பீர்கள். ஆனால் கூடவே ஒரு ஆக்ரோஷமும் கலந்து இருக்கும். உங்கள் வற்புறுத்தலும், வலியுறுத்தலும் சில சமயங்களில் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். மற்றபடி உங்கள் குடும்பத்தில் இதனால் வீண் பிரச்னைகள் உருவெடுக்கும். தக்க சமயத்தில் நிலைமை கெடாமல் பார்த்துக்கொள்வீர்கள். இருந்தாலும், உங்கள் அந்தரங்க வாழ்க்கையில் உங்கள் மனம் லயிக்காது. மனதில் இருக்கும் கோவம் வாய் வார்த்தை மூலம் வெளியே வரும் பொழுது மிகவும் கவனமாக நிலைமையை கையாளவும். செய்யும் வேலையில் மாற்றங்கள் திடீரென வரும், நீங்களும் உங்கள் படைப்பாற்றல், உத்வேகம் மூலம் பல விதமான சவால்களை கையாள்வீர்கள். குழந்தைகள் தங்கள் படிப்பிலோ, வேலையிலோ பிரமாதமாக பிரகாசிப்பார்கள். மாணவர்களுக்கு மிகவும் சிறப்பான காலம் இது. சிறிய பயணம் மேற்கொள்வீர்கள். பண சேகரிப்பதில் மும்முரமாக இருப்பீர்கள்.
- வியாழக்கிழமை தோறும் அரச மரத்திற்கு ஜலம் அர்ப்பணம் செய்யுங்கள். மரத்தை தொடாமல் சுற்றி வருதல் பயன் தரும்.
- உங்களால் முடிந்த அளவு கோ சேவை செய்யுங்கள்.
விருச்சிகம் (Viruchigam)
செவ்வாய் கிரஹத்தை ராசிநாதன் ஆக கொண்டிருக்கும் விருச்சிக ராசிக்காரர்களே, இந்த வருடம் கலந்த பலன்களை குறிப்பிட்டாலும் கெடு பலன்கள் சிறிதளவு அதிகமாக இருக்கும். சனி 2ஆம் வீட்டில், கேது 3இல், ராகு 9இல் மற்றும் குரு 12ஆம் வீட்டில் சஞ்சரிக்கின்றன. பண தட்டுப்பாடு, வீண் விரையம், தன நாசம் போன்ற பிரச்னைகள் அடிக்கடி தலைதூக்கும். ராசிநாதன் வருடத்தின் பாதிக்கு மேல் சமயம் ராகு-கேதுவிற்கு மத்தியில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியம் கெடும் மற்றும் மன உளைச்சல் அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்தபடி வாழ்க்கை நிகழ்வுகள் நடக்காதலால் ஏமாற்றம் கலந்த கோவம் உங்களுக்குள் நிறைய இருக்கும். எந்த விஷயத்திலும் நிதானம் உங்களுக்கு நன்மை தரும். வெளிநாட்டு கல்வி விரும்புகிற மாணவர்களுக்கு இது ஒரு அனுகூலமான நேரம். படிப்பில் கவனம் சிதறாமல் பார்த்துக்கொள்ளவும். தாம்பத்திய உறவில் கவனம் செலுத்துங்கள். தந்தையுடனும், வீட்டில் இருக்கும் பெரியவர்களுடனும் உறவு கெடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். உத்யோகத்தில் இருப்பவர்கள் தங்கள் வேலையில் வரும் சவால்களை தைர்யமாக சந்தித்து முன்னேற வழி தீருவார்கள்.
- சிவனுக்கு ஸ்ரத்தையுடன் பூஜை, ஆராதனை செய்யுங்கள். ருத்ராபிஷேகம் சுபம் தரும்.
- ஆலமரத்தின் வேர்களின் மேல் பால் கலந்த ஜலம் ஊற்றுங்கள்.
தனுசு (Dhanusu)
குரு கிரஹத்தை ராசிநாதன் ஆக கொண்டிருக்கும் தனுசு ராசிக்காரர்களே, சில விஷயங்களை தவிர்த்து இந்த வருடம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். ஜென்மத்தில் சனி, 2இல் கேது, 8இல் ராகு மற்றும் 11ஆம் வீட்டில் குரு சஞ்சரிக்கிறார்கள். வாழ்க்கையில் மேலும் மேலும் வளருவதற்கு நிறைய வாய்ப்புகள் வரும். பண வரவு இருந்து கொண்டே இருக்கும். இரண்டுக்கும் மேற்பட்ட வருவாய் ஆதாரங்கள் உள்ளன. கடினமாக உழைக்கவும் செய்வீர்கள். அளவுக்கு அதிகமாக எதுவும் நல்லதில்லை. ஆதலால் அதிகமாக வேலைப்பளு எடுத்துக்கொண்டு வாழ்க்கையில் மற்ற முக்கிய விஷயங்களை புறக்கணிக்காதீர்கள். உங்கள் அணுகுமுறை மற்றும் பேசும் தோரணையினால் குடும்பத்திலும், வேலை செய்யும் இடத்திலும் பிரச்னைகள் உருவாகலாம். வேலை செய்யும் பரபரப்பில் உங்கள் உடல் நலத்தின் மேல் கவனக்குறைவாக இருக்காதீர்கள். வருட முடிவில் இது உங்களுக்கு ஒரு பெரிய பிரச்னையாக உருவெடுக்கும். தொழில்-நுட்ப-ரீதியாக படிக்கும் மாணவர்களுக்கு நல்ல காலம். அவ்வப்போது வரும் இடையூறுகளை கவனித்து கொண்டீர்களானால், உங்கள் குடும்ப வாழ்க்கை அமைதியாக இருக்கும்.
- சனிக்கிழமை தோறும், சாயங்கால சமயம், அரச மரத்தின் அருகில் எண்ணெய் விளக்கு ஏற்றி வழிபடவும்.
- உங்கள் எடைக்கு சரிசமமான சப்த-தான்யங்கள் தானம் செய்யவும்.
மகரம் (Magaram)
சனி கிரஹத்தை ராசிநாதன் ஆக கொண்டிருக்கும் மகர ராசிக்காரர்களே, இந்த வருடம் முழுவதும் வாழ்க்கை சம்பந்த பல விதமான அனுபவங்களை நீங்கள் எதிர்பார்க்கலாம். சனி 12இல், கேது ஜென்மத்தில், ராகு 7இல் மற்றும் குரு 10ஆம் வீட்டில் சஞ்சரிக்கின்றன. உடல் ஆரோக்கியக்குறைவும், பண தட்டுப்பாடும் எதிர்பாராத விதமாய் உங்களுக்கு தொல்லை கொடுக்கலாம். வெளிநாடு மூலம் உங்களுக்கு பல விதத்தில் ஆதாயம் கிடைக்க இருக்கிறது. இருந்தாலும் சாமான்ய வாழ்க்கை விட ஆன்மீகத்திலும் தார்மீகத்திலும் உங்கள் சாய்வு அதிகம் இருக்க காண்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் உங்கள் அதிகாரம் ஓங்கும், ஆனால் அது உங்களை சர்சையிலோ, விவாதத்திலோ கொண்டு போகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். மேல் அதிகாரிகளின் ஆதரவும், சஹாயோகமும் உங்களுக்கு நிச்சயம் உண்டு. குடும்ப வாழ்க்கையில் சில பிரச்னைகள் திடீரென கிளம்பினால் கூட, நிம்மதி காண்பீர்கள். தாம்பத்திய உறவில் சற்று நிதானமாக விவரங்களை கவனிக்கவும். சண்டை-சச்சரவுக்கு இடம் தராதீர்கள். வருட இறுதியில் கணவன்-மனைவி உறவில் நெருக்கம் அதிகமாகும். சுய முன்னேற்றத்திற்கு ரொம்பவே நல்ல வருடம் இது.
- தினமும் கணபதி அதர்வஸீர்ஷ ஸ்தோத்ர பாராயணம் செய்யவும். கணேஷ் பூஜை உகந்தது.
- அன்ன தானம், பக்ஷிகளுக்கு தான்யம் போடுவது, தெரு நாய்களுக்கு ரொட்டி-பிஸ்கெட் துண்டங்கள் போடுவது உங்களுக்கு நன்மை தரும்.
கும்பம் (Kumbam)
சனி கிரஹத்தை ராசிநாதன் ஆக கொண்டிருக்கும் கும்ப ராசிக்காரர்களே, இந்த வருடம் உங்களுக்கு எல்லா விதத்திலும் சிறந்தது. சனி 11இல், கேது 12இல், ராகு 6இல் மற்றும் குரு 9ஆம் வீட்டில் சஞ்சரிக்கிறார்கள். நீங்கள் எடுக்கும் முடிவுகள் எல்லாம் உங்களுக்கு பிரமாதமாய் முடியும். பணம் சம்பாதிப்பதிலும், சேகரிப்பதிலும் உங்கள் கவனம் முழுவதும் செலுத்துவீர்கள். வெகு தூர பிரயாணம் உங்களுக்கு சாதகமாக முடியும். வாழ்க்கையை நன்றாக அனுபவிப்பீர்கள். ஆன்மீகம் உட்பட, எல்லா விஷயத்திலும் ஆர்வம் காண்பிப்பீர்கள். தார்மீக காரியங்களில் ஈடுபாடு பெருகும். மேல் அதிகாரிகள் இடமிருந்து பாராட்டும் புகழும் பெறுவீர்கள். தாம்பத்திய உறவில் அன்பும், ஒருதொருக்கு ஒருவர் புரிந்து கொள்ளுதலும், கேளிக்கை விஷயங்களில் ஜோடியாக சேர்ந்து கொண்டு இன்பம் அனுபவிக்கிறதுமாய் இந்த வருடம் கழியும். குழந்தைகள் அவர்கள் வாழ்க்கையில் சந்தோஷமாய் முன்னேறுவார்கள். காதலர்கள் ஆரம்பத்தில் சிரமங்களை சந்தித்தாலும், புரிந்து கொண்டு சந்தோஷமாக இருப்பார்கள். எதிர்ப்புகளும், தடைகளும் உங்களை அசைக்க முடியாது. சகல சுகத்தையும் பெற்று ஆடம்பரமாக வாழ்வீர்கள்.
- தான தர்மம் செய்யுங்கள். வாழ்க்கையில் அவதி படுகிறவர்களுக்கு உங்களால் முடிந்த உதவி செய்யவும்.
- லட்சுமி-நாராயண பூஜை செய்யுங்கள்.
மீனம் (Meenam)
குரு கிரஹத்தை ராசிநாதன் ஆக கொண்டிருக்கும் மீன ராசிக்காரர்களே, சோதனைகளும் சாதனைகளும் கலந்த வருடம் இந்த 2018. சனி 10இல், கேது, 11இல், ராகு 5இல் மற்றும் குரு 8இல் சஞ்சரிக்கிறார்கள். வருடம் முழுவதும் உங்கள் உடல் நலனிலும், ஆரோகியத்திலும் கவனம் செலுத்தவேண்டியது மிகவும் அவசியம். செய்யும் வேலையில் உங்கள் கவனம் முழுவதும் இருக்கும், ஒரு வெறியில் கார்யம் செய்வீர்கள். இதன் விளைவு, உங்கள் உடல் அசௌகர்யப்படலாம் மற்றும் அந்தரங்க வாழ்க்கை குலையலாம். வேலை செய்யும் இடத்தில் அதிகாரிகள் கடுமையான உழைப்பை எதிர்பார்க்கலாம். சக ஊழியர்கள் ஆதரவு, சஹயோகம் உங்களுக்கு கிட்டாமல் இருந்தாலும், பொறுமையாய் இருங்கள். அலை பாயும் மனதை ஒரு நிலையில் வைத்து கார்யம் செய்யவும். குழந்தைகளுக்கு உங்கள் அன்பும், அதைவிட முக்கியம், உங்கள் வழிகாட்டலும் அவசியம். வருட இறுதியில் உங்கள் வாழ்க்கையில் சிறப்பான திருப்பங்கள் வரும். அதுவரைக்கும் நிலமையையம், பிரச்னைகளையும் சமாளியுங்கள். பண வரவு சீராக இருக்கும். வேண்டாத அலைச்சலை தவிர்க்கவும்.
- மஹா விஷ்ணுவிற்கு சந்தன அபிசேகம் அல்லது சந்தன திலகமிட்டு பூஜை செய்யவும்.
- வியாழக்கிழமை விரதம் நன்மை தரும். அன்று மட்டும் வாழைப்பழத்தை உட்கொள்ளாமல், நெய்வேத்தியமாக பகவானுக்கு அர்ப்பணித்து, ப்ரசாதமாய் உட்கொள்ளவும்.
விவரமாக விஷயங்கள் தெரிந்து கொள்வதற்கு ஆஸ்ட்ரோஸேஜ் வெப் தளத்தில் செல்லுங்கள். எங்கள் குண்டலி ஆப் டவுன்லோட் செய்து உங்கள் ஜாதக சம்பந்தமான விஷயங்களை அறியுங்கள் ஆராயுங்கள். குண்டலி ஆப் மூலம் நீங்கள் 50 பக்க ஜாதகம் இலவசமாக பெறலாம். இந்த ப்ரோக்ராம் உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் அல்லது ஷேர் செய்யுங்கள், எங்கள் அஸ்ட்ரோஸேஜ் டிவிக்கு சப்ஸ்க்ரைப் பண்ணுங்கள்.
நன்றி. வணக்கம். நமஸ்காரம்.