கும்ப ராசியில் குரு பெயர்ச்சி 5 ஏப்ரல் 2021
வேத ஜோதிடத்தில் குரு மிகவும் லாபகரமான கிரகமாக நம்பப்படுகிறது மற்றும் ஆன்மிகம், வெற்றி, இருப்பு, சமுத்திரம், சௌபாக்கியம் மற்றும் ஒவ்வொரு நபரின் அதிர்ஷ்டம் மற்றும் தொழில் காரணியாக நம்பப்படுகிறது. தற்போதைய காலகட்டத்தில் கும்ப ராசியில் குரு பெயர்ச்சி இருக்கும், இந்த பெயர்ச்சி ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்திலிருந்து செப்டம்பர் 2022 வரை இருக்கும். குரு அனைத்து கிரகங்களை விட பெரிய கிரகமாகும். இதன் பெயர்ச்சி கிட்டத்தட்ட 13 மாதத்திற்கு இருக்கும். இது சூரியன், சந்திரன்,செவ்வாய் புதன் மற்றும் சனி போன்ற கிரகங்கள் ஒப்பிடும்போது இது மிக நீண்ட காலத்திற்கு ஒரே ராசியில் பெயர்ச்சி கொண்டிருக்கும். இதனால் குரு ஒரு ராசியில் கிட்டத்தட்ட ஒரு ஆண்டு வரை பெயர்ச்சி கொண்டிருப்பார், இதனால் மனிதர்களின் வாழ்க்கையில் ஏதாவது விளைவு அவசியம் ஏற்படுத்தக்கூடும். குரு மிகவும் லாபகரமான கிரகமாகும் மற்றும் ஞானம், புத்தி, சட்டம், குரு, ஆன்மிகம், மத, தர்சனம், இலக்கியம் மற்றும் வயதானவர்கள் போன்றவற்றின் காரணியாக நம்பப்படுகிறது. ஒரு பெண்ணிற்காக குரு மிகவும் முக்கியத்துவம் ஆகும்.
உங்கள் ஜாதகத்தில் குரு கிரகத்தின் விளைவு என்ன அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளவும்
குரு கும்ப ராசியில் பெயர்ச்சி கொள்ள போகிறார். இந்த ராசி சக்கரத்தில் பதினொன்றாவது ராசியாகும், இதனால் இது ஜாதகத்தில் பதினொன்றாவது வீட்டில் தொடர்புடைய பொருட்களால் லாபம், விருப்பங்கள், ஆசைகள் போன்றவற்றை காரணியாக நம்பப்படுகிறது. இது மட்டுமின்றி கும்ப அறிஞர்கள் சிந்தனை மற்றும் ஆராய்ச்சி, சமூகத்தின் முன்னேற்றம், உயர்ந்த லட்சியம் மற்றும் பரிசுகள் போன்றவற்றை குறிப்பிடுகிறது.
கும்ப ராசியில் குரு பெயர்ச்சி 5 ஏப்ரல் 2021 முதல் 15 செப்டம்பர் வரை மற்றும் பிறகு 20 நவம்பர் 2021 முதல் 13 செப்டம்பர் 2022 வரை இருக்கும்.
கும்ப ராசியில் குரு பெயர்ச்சி 5 ஏப்ரல் 2021 அன்று மாலை 06 மணிக்கு 00 நிமிடம் முதல் 15 செப்டம்பர் 2021 அன்று காலை 4 மணிக்கு 22 நிமிடம் வரை இருக்கும்.
உங்கள் ராசியில் குரு கும்ப ராசியில் பெயர்ச்சி என்ன விளைவு ஏற்படுத்தும் அறிக:
இந்த ராசி பலன் சந்திரன் ராசி அடிப்படை கொண்டது. அதுமட்டுமின்றி ஒரு நபரின் எதிர்காலத்தை அறிய ஜோதிடர்களிடம் தொலைபேசி அல்லது அரட்டை மூலம் தொடரவும்.
மேஷம்
மேஷ ராசி ஜாதகக்காரர்களுக்கு குரு பதினொன்றாவது வீட்டில் பெயர்ச்சி கொண்டிருப்பார். தொழில்நுட்ப துறையில் தொடர்புடைய இந்த ராசி ஜாதிக்காரர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மேஷ ராசி ஜாதகக்காரர்களுக்கு ஏப்ரல் மற்றும் மே மாதம் பங்கு சந்தையில் லாபம் சம்பாதிப்பதை காணக்கூடும். மேஷ ராசி ஜாதிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி சாதகமான பலன் தரக்கூடும். இதனுடவே எந்த ஜாதகக்காரர்களுக்கு ஜாதக கட்டத்தில் குரு பலவீனமான நிலையில் இருப்பவர்களுக்கு, அவர்களுக்கு இந்த நேரத்தில் சாதகமற்ற பலன் கிடைக்கும். இது தொழில் முன்னேற்றத்திற்கு உறுதியான நேரமாக இருக்கும், இதனால் உங்கள் ஒவ்வொரு துறையிலும் முன்னேற்றம் அடைவீர்கள். இருப்பினும் அரசாங்க துறையில் தொடர்புடையவர்களுக்கு சமூக மற்றும் பொருளாதார விஷியன்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். இதனுடவே நடனம் மாற்று சங்கீத உத்தியோகத்தில் உங்கள் தொழிலாக கொள்ளும் இந்த ராசிக்காரர் ஏப்ரல் மே மற்றும் ஜூன் நல்ல நேரம் அனுபவிக்க கூடும். சுருக்கமாக கூறினால் நடிகர்களுக்கு மற்றும் பாடகர்களுக்கு மிகவும் நல்ல பலன் கொண்டு வரக்கூடும். பொருளாதார ரீதியாக உங்களுக்கு உங்கள் உடல் நலத்தில் அதிக செலவு செய்ய வேண்டி இருக்கும். பங்கு சந்தையில் முதலீடு செய்வதால் ஏப்ரல் முதல் மே மாதம் நல்ல லாபம் தரக்கூடும். உங்கள் வாழ்வாதாரத்திற்கு யாரை நம்பி இருந்தீர்களோ, அவர்களுக்கு இந்த நேரத்தில் சில பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். எனவே நீங்கள் உங்கள் பணத்தை வங்கியில் சேமிக்க அறிவுறுத்தப்படுகிறது. ஆகஸ்ட் மாதம் முதலீடு செய்வது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த ராசியின் திருமண ஜாதகக்காரர் இந்த நேரத்தில் மகிழ்ச்சி கொள்வார்கள், அதே இப்போது வரை தனிமையில் இருப்பவர்கள் இந்த நேரத்தில் முக்கியமான நபரைப் சந்திக்கக்கூடும். மேஷ ராசி ஜாதககரக்ளுக்கு உடல் ஆரோக்கிய ரீதியாக மிகவும் நன்மையாக இருக்கும். இருப்பினும் வயதானவர்களுக்கு கால் வலி, மூட்டு வலி அல்லது வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் இருக்ககூடும். குரு பெயர்ச்சி உங்கள் ராசியின் பதினொன்றாவது வீட்டில் இருக்கும் போது உங்கள் குடும்ப உறுப்பினர்களை கவனித்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
பரிகாரம்: உங்கள் நெற்றியில் மஞ்சள் அல்லது சந்தன போட்டு வைப்பது குருவின் நன்மையான பலன் உங்களுக்கு கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசி ஜாதகக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி பத்தாவது வீட்டில் இருக்கும். இந்த நேரம் உங்கள் தொழில் வாழ்க்கைக்கு மிகவும் நன்றாக இருக்காது. இதனால் நீங்கள் உங்கள் தற்போதைய உங்கள் வேலை தொடர்ந்து செய்ய அறிவுறுத்தப்படுகிறது. இந்த நேரத்தில் உங்கள் தைரியம் மற்றும் அமைதியை கடைபிடிக்கவும் இல்லையெனில் உங்கள் குணம் பாதிப்படையக்கூடும். இந்த நேரத்தில் அவசரமாக முடிவு எடுப்பதை தவிர்க்கவும் இல்லை என்றால் சூழ்நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருக்காது. இருப்பினும் மூத்தவர்களின் வழிகாட்டுதல் படி ஆலோசனை பெறுவது உங்களுக்கு உதவியாக இருக்கும். அதே அரசாங்க வேலையில் நுழைவுத்தேர்வு கொடுப்பவர்களுக்கு, சாதகமான பலனுக்காக கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பொருளாதாரத்திற்கு தடைப்பட்டிருக்கும் வேலை முடிக்க மற்றும் பரம்பரை சொத்து மூலம் லாபம் சம்பாதிக்க மிகவும் நன்மையானது ஆகும். உங்கள் உறவை பற்றி பார்க்கும் போது, இந்த பெயர்ச்சியின் போது சில பிரச்சனைகள் நீங்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். ஏனென்றால் நீங்கள் உங்கள் குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, உங்கள் பணி துறையில் அதிக கவனம் செலுத்த முயற்சி செய்வீர்கள். உடல் ஆரோக்கிய ரீதியாக பார்க்கும் போது, பருவகால மாற்றத்தால் உங்களுக்கு சின்ன சின்ன உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படக்கூடும். கடை விதி தெருவில் விற்கும் உணவுப் பண்டங்களை சாப்பிடுவதை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. இல்லையென்றால் உங்களுக்கு வயிறு வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
பரிகாரம்: வயதானவர்களுக்கு மற்றும் குருவிற்கு வாழைப்பழம் மற்றும் மிட்டாய் வழங்கவும்.
மிதுனம்
மிதுன ராசி ஜாதகக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி ஒன்பதாவது வீட்டில் இருக்கும். இது தொழில் மற்றும் வணிக வாழ்க்கைக்கு மிகவும் நன்றாக இருக்கும். இந்த பெயர்ச்சியின் போது உங்களுக்கு புதிய விஷயங்கள் உங்கள் வாழ்க்கையில் வருவதற்கு வாய்ப்புள்ளது, இதனால் உங்கள் அனுபவத்தை முன்னேற்ற வழிவகுக்கும். முக்கியமாக அரசாங்க வேலைக்கான போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வியாபார தொடர்பான ஜாதகக்காரர்களுக்கு வெளிநாட்டு பயணம் மற்றும் உங்கள் வணிகத்தை விரிவுபடுத்த வாய்ப்பு கிடைக்கும். பொருளாதார ரீதியாக இந்த பெயர்ச்சி மிகவும் நன்றாக இருக்கும், ஏனென்றால் வங்கி மற்றும் பொருளாதார முலீட்டில் வேலை செய்பவர்களுக்கு மாற்றி தொழில் அதிபர்களுக்கு சந்தையின் முதலீட்டில் நல்ல லாபம் சம்பாதிப்பீர்கள். இந்த நேரத்தில் புதிய சொத்து வாங்க அல்லது விற்போதோ உங்களுக்கு சாதகமாக இருக்கும் மற்றும் இதனால் உங்களுக்கு நீண்ட காலத்திற்கு லாபம் கிடைக்கும். திருமண ஜாதகக்காரர்களுக்கு ஆன்மீக பயணத்தில் செல்லக் கூடும், எனவே தனிமையில் இருக்கும் ஜாதகக்காரர் உங்களுக்கு காதல் கிடைக்கும் மற்றும் அதே காதல் உறவில் இருப்பவர்களுக்கு உறவு வலுவடையும். உங்கள் உடல் ஆரோக்கியம் பார்க்கும் போது, இந்த பெயர்ச்சியால் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் வீட்டிலேயே தயார் செய்த உணவை சாப்பிட உங்களை அறிவுறுத்த படுகிறது, ஏனென்றால் உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சிறந்த வழியாகும்.
பரிகாரம்: தங்கத்தில் ஆபரணங்கள் மோதிரமோ அல்லது சங்கிலி அணிவது குரு கிரகத்தை வலுவடைய செய்யக்கூடும்
கடகம்
கடக ராசி ஜாதகரார்க்ளுக்கு குரு பெயர்ச்சி எட்டாவது வீட்டில் இருக்கும். இந்த நேரம் நிதி மற்றும் உறவுகள் விஷயங்களுக்கு கடக ராசிக்காரர்களுக்கு வலுவை சேர்க்கக்கூடும், இருப்பினும் இந்த நேரத்தில் உங்களுக்கு உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்களுக்கு உங்கள் தொழிலில் குறிப்பிடத்தக்க வாய்ப்பு கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கக்கூடும் மற்றும் உங்கள் முந்தைய முதலீடு உங்களுக்கு லாபம் சம்பாதிக்க உதவக்கூடும். திருமண ஜாதகக்காரர் பற்றி பார்க்கும் போது வாழ்க்கை துணைவியாருடன் நல்ல நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். இதுனுடவே கும்ப ராசியில் குரு பெயர்ச்சியால் உங்கள் உடன் பிறப்புகளுடன் உறவுக்கு நல்ல நேரமாகும். பொருளாதார ரீதியாக இந்த பெயர்ச்சியின் போது சில பிரச்சனைகள் ஏற்படக்கூடும். இதனால் எந்த முக்கியமான முதலீடு செய்வதற்கு முன் மூத்தவர்களின் வழிகாட்டுதல் படி செல்லவும். முந்தைய கால கட்டத்தின் முதலீட்டில் உங்களுக்கு ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை லாபம் பெற உதவக்கூடும். சொத்து அல்லது மற்ற விலை உயர்ந்த பொருட்கள் வாங்க கடன் வாங்க இது மிகவும் உகந்த நேரமாகும். ஆரோக்கிய வாழ்க்கை பார்க்கும் போது, சில பிரச்சனைகள் ஏற்படக்கூடும் மற்றும் இதனால் உங்கள் ஆரோக்கியத்தை வலுவாக வைத்துக் நல்ல மருத்துவரை அணுகவும்.
பரிகாரம்: எனவே குரு பலவீனமாக அல்லது சாதகமற்ற நிலையில் இருந்தால் நீங்கள் உங்கள் உடன் பிறப்புகள் மற்றும் இளைய சகோதரர்களுக்கு ஆதரவு அளிக்கவும்.
சிம்மம்
சிம்ம ராசி காரர்களுக்கு குரு பெயர்ச்சி ஏழாவது வீட்டில் இருக்கும், இந்த பெயர்ச்சி உங்களுக்கு நேர்மறையான பயன் தரக்கூடும். உங்கள் பணித்துறையில் நேர்மையாக செய்த முயற்சிகள் உங்கள் லட்சியத்தை விரைவில் அடைய உதவக்கூடும். சிம்ம ராசி மாணவர்களுக்கு ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் உங்கள் படிப்பை முடிக்க வெளிநாட்டுக்கு செல்ல வாய்ப்பு கிடைக்கும். நிதி ரீதியாக பங்கு சந்தையில் எந்த விதமான முதலீடு செய்வது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்காது. எனவே நீங்கள் முக்கியமான முதலீடு செய்ய வேண்டுமென்றால் சிந்தித்து செயல்படவும். குடும்ப வாழ்க்கையில் திருமண ஜோடிகள் நல்ல உறவின் முன்னேற்றத்திற்கு வாதம் விவாதம் செய்வதை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. இந்த ராசி ஜாதகக்காரர் காதல் உறவில் இருப்பவர்கள் இந்த நேரம் மிகவும் நன்றாக இருக்க வாய்ப்புள்ளது. உடல் ஆரோக்கிய ரீதியாக பார்க்கும் போது, இந்த ராசி ஜாதகக்காரர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். இருப்பினும் இந்த ராசி ஜாதகக்காரர் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த அறிவுறுத்த படுகிறது. ஏனென்றால் மாசுபாடு பிரச்சினைகள் ஏற்படக்கூடும் அல்லது காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. சாதாரணமாக இரும்பல் மற்றும் காய்ச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த பெயர்ச்சியின் போது அழகான இடத்திற்கு சுற்று பயணம் அல்லது ஆன்மீக பயணம் செல்ல வாய்ப்புள்ளது.
பரிகாரம்: நீங்கள் தினமும் குங்குமம் பயன்படுத்தவும்.
கன்னி
கன்னி ராசி ஜாதகக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி உங்கள் ராசியின் ஆறாவது வீட்டில் இருக்கும். இந்த பெயர்ச்சியின் போது உங்களுக்கு கலவையான பலன் கிடைக்கும். இந்த ராசி ஜாதகக்காரர் அவசரப்பட்டு வேலை விடுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அவர்களுக்கு இதற்கு பிறகு நல்ல வாய்ப்பு கிடைக்கும். நீண்ட கால முதலீட்டுக்கு ஜூன் மற்றும் ஜூலை மாதம் உங்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும். குடும்ப வாழ்க்கை பற்றி பேசும் போது, தாம்பத்திய வாழ்க்கையில் இந்த நேரத்தில் நேர்மறையான மாற்றம் காணக்கூடும். எனவே உங்கள் வாழ்க்கை துணைவியாருடன் ஏதாவது மோதல் ஏற்பட்டிருந்தால், இந்த நேரத்தில் விலக கூடும். திருமண ஜாதகக்காரர் இந்த பெயர்ச்சியின் போது, வாழ்க்கை துணைவியாருடன் இணக்கமான உறவு மகிழ்ச்சி அடைவீர்கள். தனிமையில் இருக்கும் ஜாதகக்காரர்களுக்கு விரும்பிய துணைவியார் கிடைக்க வாய்ப்புள்ளது. உடல் ஆரோக்கிய ரீதியாக பார்க்கும் போது, குரு பெயர்ச்சியால் உங்கள் வயிறு தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். இதனால் மருத்துவரின் ஆலோசனைப்படி செயல்பட அறிவுறுத்த படுகிறது.
பரிகாரம்: எட்டு நாட்கள் தொடர்ந்து மத தலத்தில் மஞ்சள் தானம் செய்வது உங்களுக்கு நன்மையான பலன் கிடைக்கும்.
துலாம்
துலா ராசி ஜாதகக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி ஐந்தாவது வீட்டில் இருக்கும். இந்த பெயர்ச்சியின் போது கலவையான பலன் கிடைக்கும். வணிகம் மற்றும் வேலை ஜாதகக்காரர்கள் கடினமாக உழைக்க அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் நீங்கள் தோல்வி ஏற்காதீர்கள், ஏனென்றால் மே மற்றும் ஜூன் மாதம் உங்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். போட்டி தேர்வுக்கு பங்கேற்கும் மாணவர்களுக்கு வெற்றி கிடைக்க கூடும். சந்தைப்படுத்தல் மாற்று விற்பனை துறையில் இருக்கும் ராசி ஜாதகக்காரர்கள் இலட்சியத்தை அடைய அதிக பயணம் செய்ய வேண்டி இருக்கும். பொருளாதார ரீதியாக துலா ராசி ஜாதகக்காரர் நல்ல விஷயங்களில் முதலீடு செய்வதற்கு சாதகமான நேரமாகும். இந்த நேரம் பங்கு சந்தையில் முதலீடு செய்வதால் பொருளாதார லாபம் அடைய உதவக்கூடும், ஆனால் இந்த நேரத்தில் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். உங்கள் காதல் உறவை பார்க்கும் போது துலா ராசி ஜாதகக்காரர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனென்றால் இந்த நேரத்தில் நீங்கள் சில பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் மற்றும் அவர்கள் உறவிலும் ஏற்றத்தாழ்வுகளை சந்திக்க நேரிடும். இவற்றிலிருந்து மீள்வது தோல்வி அடையக் கூடும். இதனால் பேச்சு வார்த்தையின் போது உங்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும். ஆரோக்கியமகா இருக்க நன்றாக தூங்க மற்றும் ஆரோக்கியமான உணவு உண்ண அறிவுறுத்த படுகிறது.
பரிகாரம்: உங்களுக்கு விஷ்ணு சஹஸ்ரணம் ஸ்டோற்ற படிக்கவும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி ஜாதகரார்க்ளுக்கு குரு பெயர்ச்சி நான்காவது வீட்டில் இருக்கும் மற்றும் இந்த பெயர்ச்சி உங்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். தொழில் அல்லது கல்விக்காக வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைக்கும். வணிக ஜாதகரர்களுக்கு வேலையில் அதிக பிரச்சனைகள் ஏற்படக்கூடும். ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் வேலை தேடுபவர்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். அரசாங்க துறை தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். பொருளாதார ரீதியாக இந்த நேரம் உங்களுக்கு சாதகமான பலன் தரக்கூடும் ஏனென்றால் இந்த நேரம் நல்ல முதலீட்டிற்கு வாய்ப்பு கிடைக்கும். குடும்ப வணிகத்தில் முதலீடு செய்வதற்கு இந்த நேரம் நன்றாக இருக்கும், இது உங்களுக்கு முக்கியமான முடிவுகள் எடுக்க உதவியாக இருக்க கூடும். பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கு பணத்தை சேமிக்க வேண்டும் மற்றும் ஜூன் மற்றும் ஜூலையில் சரியான முதலீடு செய்ய வேண்டும். கூட்டாண்மையில் வணிகம் செய்பவர்களுக்கு அதிகம் லாபம் கிடைக்கும். சிலர் இந்த பெயர்ச்சியின் போது வலுவான காதல் உறவை கொண்டிருப்பார்கள். திருமண ஜாதகக்காரர் குடும்பத்துடன் மகிழ்ச்சியான தருணத்தை அனுபவிக்கக்கூடும். சுகாதார பார்வையில் பார்க்கும் போது, இந்த நேரத்தில் உங்கள் வயிற்று பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். இந்த பெயர்ச்சியின் போது வயதானவர்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.
பரிகாரம்: உங்களுடன் எப்போதும் மஞ்சள் நிலையம் கைக்குட்டை வைத்திருப்பது குருவை அமைதி படுத்தும்.
தனுசு
தனுசு ராசி ஜாதகக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி மூன்றாவது வீட்டில் இருக்கும். இந்த ராசி வணிக ஜாதகக்காரர்கள் மற்றும் மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டிய அவசியமாகும். வேலை செய்யும் இந்த ராசி ஜாதகக்காரர்களுக்கு இந்த நேரத்தில் முன்னேற்றம் கிடைக்கும் மற்றும் உங்கள் தொடர்புகள் வலுவாக கொண்டிருப்பீர்கள். பணித்துறையில் தொடர்புடைய வேலைகள் செய்வதற்கு இந்த ராசி ஜாதகக்காரர் பயணங்கள் செய்ய வேண்டி இருக்கும். நிதி தொடர்பான விஷயங்கள் பற்றி பார்க்கும் போது, நீங்கள் முதலீடு செய்வதற்கு முன் அனுபவம் வாய்ந்தவர்களிடம் கலந்து ஆலோசிக்க அவசியம். இந்த நேரத்தில் நீங்கள் ஏற்றுமதி இறக்குமதி செய்வதை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. குடும்ப வாழ்க்கையில் திருமண தம்பதியர்கள் இந்த வாரம் சிறிய பயணத்திற்கு செல்ல திட்டமிடலாம், அதே தனிமையில் இருப்பவர்கள் ஒரு சிறப்பான வரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். அதுவே காதல் உறவில் இருப்பவர்கள் நல்ல மகிழ்ச்சி பெறக்கூடும் மற்றும் அனைத்து பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். ஆரோக்கிய பார்வையில் பார்க்கும் போது, நீங்கள் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். உங்கள் குழந்தைகளின் கழுத்தில் பிரச்சனைகள் இருக்கக்கூடும், இருப்பினும் பெரியவர்கள் கால்களில் வலி ஏற்படக்கூடும். உங்களுக்கு சரியான பரிசோதனை மற்றும் சுயமாகவே வலுவாக வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
பரிகாரம்: ஜாதகத்தில் பலவீனமான குருவை வலுவாக்க பகவான் சிவன், குரு, வாழை மரம், விஷ்ணு பகவானுக்கு பூஜை செய்யவும்.
மகரம்
மகர ராசி ஜாதகக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி இரண்டாவது வீட்டில் இருக்கும். இந்த நேரத்தில் உங்களுக்கு அதிர்ஷ்டம் கை கொடுக்கும் மற்றும் உங்கள் செல்வதை அதிகரிக்கும். நீங்கள் உங்கள் பணி துறையில் அதிக நேர்மறையாகவும் மற்றும் கவனம் செலுத்தக்கூடும், இதனால் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். இந்த ராசியின் வேலை ஜாதகக்காரர்களுக்கு மொத்தத்தில் நேரம் நன்றாக இருக்கும் மற்றும் இந்த நேரத்தில் நீங்கள் விரும்பிய துறையில் வேலை செய்ய வாய்ப்பு கிடைக்கும். உங்கள் கடுமையான உழைப்பிற்கான பரிசு ஏப்ரல் மற்றும் ஜூலை மாதத்தில் கிடைக்கும் மற்றும் இதனால் உங்களுக்கு எதிர்காலத்தில் நல்ல வழிகாட்டுதலாக இருக்கும். பொருளாதார ரீதியாக இந்த நேரம் மிகவும் சவாலாக இருக்கும், இதனால் நீங்கள் எந்த விதமான கடனையும் பெறுவதை தவிர்க்க வேண்டும். முதலீடு செய்ய அல்லது வங்கியில் சேமிக்க இந்த நேரம் மிகவும் நன்றாக இருக்கும், இதனால் உங்களுக்கு மூன்று மடங்கு லாபம் கிடைக்கும். நீங்கள் எந்தவிதமான சண்டையில் விலகி இருக்க அறிவுறுத்தப்படுகிறது, ஏனென்றால் இது உங்கள் உறவில் இழப்பை ஏற்படுத்தும் விதமாக இருக்கக்கூடும். இந்த நேரத்தில் காதல் ஜாதகக்காரர் தங்கள் துணைவியருடன் தவறான புரிதல் எதிர் கொண்டிருந்தால், இந்த நேரத்தில் புரிதலின் ஆற்றலால் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரக்கூடும். இந்த பெயர்ச்சியின் போது, நீங்கள் உங்கள் குடும்பம், நண்பர்கள் மற்றும் உடன்பிறப்புகளுக்கு மன சங்கடத்தை எதிர் கொள்ள வாய்ப்புள்ளது. இதனால் நீங்கள் அனைவருடனும் இனிமையான உறவை கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகிறது. ஆரோக்கிய ரீதியாக பார்க்கும் போது, இந்த ராசிக்காரர்களுக்கு சிறிய பிரச்சினைகள் இருக்கக்கூடும், இந்த நேரத்தில் உங்களுக்கு தசைகள் வலி பிரச்சனை இருக்கக்கூடும். இதனால் உங்களுக்கு சிறப்பான உணவு உண்ணவும் மற்றும் உடல் பயிற்சி எடுத்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
பரிகாரம்: ஸ்ரீ ருத்ரம், குரு ஸ்டோற்ற படிப்பதினால் குரு மகிழ்ச்சியடைவார் மற்றும் ஆண் தொடர்பான விளைவு குறைக்கவும்.
கும்பம்
கும்ப ராசி ஜாதகக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி லக்கினம் அதாவது முதலாவது வீட்டில் பெயர்ச்சி இருக்கும். இந்த பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்களுக்கு ஆளுமை விரிவுபடுத்த உதவக்கூடும். அதுமட்டுமின்றி இது உங்களுக்கு உங்கள் வாழ்க்கையில் சிக்கலான சவால்களை தவிர்க்க சௌபாக்கிய மற்றும் தன்னம்பிக்கை கொடுக்கும். தொழில் வாழ்க்கைக்கு பார்க்கும் போது, இந்த நேரத்தில் உங்களுக்கு தேவையான லட்சியத்தை அடைவதில் பல தடைகள் வரக்கூடும், ஆனால் இது உங்கள் லட்சியத்தில் நேர்மறையான வழியில் வெற்றி பெற உதவக்கூடும். வேலை ஜாதகக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி மிகவும் நன்றாக இருக்கும், முக்கியமாக ஏப்ரல் மற்றும் ஜூலை மாதத்தில் முன்னேற்றம் அடைவீர்கள். அரசாங்க வேலைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளது. பொருளாதார ரீதியாக இந்த நேரத்தில் தைரியமாக இருக்க அவசியமாகும் மற்றும் எந்தவிதமான முதலீடு செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது, ஏனென்றால் எதிர்காலத்தில் நீங்கள் பொருளாதார இழப்பை சந்திக்க வாய்ப்புள்ளது. பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கு புதிய முதலீட்டிற்கு வாய்ப்பு கிடைக்கும். இருப்பினும் மெதுவாக மற்றும் தொடர்ந்து நீங்கள் உங்கள் பொருளாதார லட்சியத்தை அடைவதில் வெற்றி பெறக்கூடும். இந்த பெயர்ச்சியின் போது உங்கள் துணைவியார் உங்கள் உறவில் காதலை தொடரக்கூடும். திருமணம் ஆகாத ஜாதகக்காரர்களுக்கு ஜூன் மற்றும் செப்டம்பர் மாதத்தில் நல்ல வரன் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் இந்த ராசி ஜாதகக்காரர்கள் கொஞ்சம் கவனமாக இருக்க அவசியமாகும், ஏனென்றால் இந்த நேரத்தில் இதயம் தொடர்பான பிரச்சனைகள் உங்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. இருப்பினும் இளைஞர்களின் செயல் மற்றும் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வாய்ப்புள்ளது.
பரிகாரம்: குரு தொடர்பான பொருட்கள் மஞ்சள், தங்கம், மஞ்சள் துணி கோவிலுக்கு தானமாக கொடுக்க வேண்டும் அல்லது வழங்கவும்.
மீனம்
மீன ராசி ஜாதகக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி பன்னிரண்டாவது வீட்டில் இருக்கும். இந்த பெயர்ச்சியால் மீன ராசி ஜாதகக்காரர்களுக்கு நேர்மறையான பலன் கிடைக்கும். தொழில் ரீதியாக இந்த ராசி ஜாதகக்காரர்களுக்கு போதுமான பலன் பெற முயற்சி செய்வீர்கள் மற்றும் வெற்றியும் பெறுவீர்கள். இந்த நேரத்தில் வேலை மாற்றம் சிந்தித்து கொண்டிருந்தால் அவற்றில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். வணிகம் செய்யும் இந்த ராசி ஜாதகக்காரர்களுக்கு வியாபாரத்தில் முன்னேற்றம் அடைய வாய்ப்பு கிடைக்கும். பொருளாதார ரீதியாக இந்த நேரம் உங்களுக்கு கலவையான பலன் தரக்கூடும் மற்றும் உங்களுக்கு வணிகத்திலும் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது, இதனால் உங்கள் பொருளாதார நிலை உங்கள் பிடியில் வைத்துக் கொள்ள உதவும். இருப்பினும் உங்களுக்கு இந்த நேரத்தில் தேவையற்ற செலவுகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் கடன் கொடுத்த மற்றும் மாட்டிக்கொண்டிருக்கும் பணம் பெற உதவியாக இருக்கும். இருப்பினும் இந்த பெயர்ச்சியின் போது, கடன் அல்லது யாருக்காவது தானம் செய்வதை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. கவனமாக இருக்கவும், ஏனென்றால் உங்களுக்கு ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதத்தில் செலவுகள் உச்சத்தை எட்டும். இந்த ராசி காதல் ஜாதகக்காரர்களுக்கு காதல் உறவில் தவறான புரிதல்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். இதனால் உங்கள் பிரியமானவருக்கு உண்மையாக இருக்க மற்றும் பெரியவர்கள் உதவியால் உறவின் பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சி செய்வது நன்மையாக இருக்கும். திருமண ஜாதகக்காரர் மாமியார் வீட்டின் தரப்பினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது, ஏனென்றால் இதனால் உங்களுக்கு மன சங்கடத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். தேவையற்ற செலவு உங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். இந்த பெயர்ச்சியின் போது நீங்கள் உங்கள் குழந்தை பற்றி கவலைப்படக்கூடும். ஆரோக்கிய ரீதியாக பார்க்கும் போது, இந்த ராசியின் வயதானவர்கள் மற்றும் பெண் ஜாதகக்காரர் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது, ஏனென்றால் உங்களுக்கு வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நீங்கள் அதிகம் மக்கள் கூட்டம் இருக்கும் இடத்திற்கு செல்வதை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது, ஏனென்றால் இதனால் நீங்கள் தொற்றுநோயால் பாதிப்படைய வாய்ப்புள்ளது.
பரிகாரம்: வியாழக்கிழமை அன்று விரதம் இருக்கவும்.
மேலும் விபரங்களுக்கு மீனம் வாராந்திர ராசி பலன் படிக்கவும்.
உங்களுக்கு இந்த கட்டுரை திருப்பதிகமானதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். ஆஸ்ட்ரோசேஜ் உடன் தொடர்பில் இருப்பதற்கு மிகவும் நன்றி!
Astrological services for accurate answers and better feature
Astrological remedies to get rid of your problems
AstroSage on MobileAll Mobile Apps
- Rashifal 2025
- Horoscope 2025
- Chinese Horoscope 2025
- Saturn Transit 2025
- Jupiter Transit 2025
- Rahu Transit 2025
- Ketu Transit 2025
- Ascendant Horoscope 2025
- Lal Kitab 2025
- Shubh Muhurat 2025
- Hindu Holidays 2025
- Public Holidays 2025
- ਰਾਸ਼ੀਫਲ 2025
- ରାଶିଫଳ 2025
- രാശിഫലം 2025
- રાશિફળ 2025
- రాశిఫలాలు 2025
- রাশিফল 2025 (Rashifol 2025)
- Astrology 2025