அனுஷம் நட்சத்திர பலன்கள்
கடவுள் மேல் அதிக பக்தி கொண்டவர்கள் நீங்கள். அதனால் எந்த கஷ்டமான சூழலையும் கண்டு கலங்க மாட்டீர்கள். வாழக்கையில் தடைகள் வரலாம் ஆனால் அது உங்களது முன்னேற்றப்பாதையை பாதிக்காது ஏனென்றால் நீங்கள் கடின உழைப்பால் அதலிருந்து விடிபட்டுவிடுவீர்கள். மிக சிறு வயதிலேயே சம்பாதிக்க ஆரம்பித்து விடுவீர்கள். போராட்ட குணம் கொணம் கொண்டவர் நீங்கள். மன அமைதி வேண்டி அதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நேர்மையானவரான னீங்கள் மனதில் பட்ட்தை வெளிப்படையாக பேசிவிடுவீர்கள். மனதில் எதையும் வைத்துக்கொள்ள தெரியாது உங்களுக்கும். உங்களது இந்த குணத்தால் சிலரை நீங்கள் காயப்படுத்தி விடக்கூடும். முழு மனதுடன் மற்றவர்களுக்கு உதவுவீர்கள்.தற்பெருமை பேச மாட்டீர்கள். உங்களது குறிக்கோளை நோக்கி செயல்பட்டு பல தடைகளை தாண்டி இலக்கினை அடைவீர்கள். வாய்ப்புக்கள் உங்களை தேடி வரும்போது அதனை முழுமையாக பயன்படுத்தி கொள்வீர்கள். பிறரிடம் வேலை செய்வதை விட சொந்தமாக தொழில் செய்ய விரும்புவீர்கள். சிறு வயதிலிருந்தே அதற்கான திறமையை பெற்றிருப்பீர்கள். எனவே அதில் வெற்றி பெறுவீர்கள். நீங்கள் பிறரிடம் பணியாற்ருபவராக இருந்தால் உங்களது மேலாளர்களை உங்கள் வசப்படுத்தி விடுவீர்கள். ஒழுக்கமாக வாழும் உங்களுக்கு உங்களது கொள்கைகளே முக்கியமானவையாகும். பணியிலும் ஒழுக்கத்தை பின்பற்றுவீர்கள். கொள்கைப்பிடிப்புடன் வாழ்பவர் ஆதலால் உங்களுக்கு அதிக நண்பர்கள் இருக்க மாட்டார்கள். நட்பு வட்டம் சிறியதாகவே இருக்கும். வாழ்க்கையின் பாடங்களை அனுபவித்த பின் உணர்ந்து கொள்வீர்கள். உங்களது குணதிசயங்களை அறிந்தவர்கள், நீங்கள் அனுபவம் வாய்ந்தவர் என்பதால் உங்களது ஆலோசனைகளை கேட்பார்கள். கஷ்டமான சூழல்களை கடந்து வர அருமையான வழிகளை தெரிந்து வைத்திருப்பீர்கள். செல்வத்தை பொறுத்த வரை போதுமான அளவுக்கு சேர்த்து வைத்திருப்பீர்கள் ஏனென்றால் பணத்தை முதலீடு செய்தல் அல்லது சேமித்து வைப்பதில் நாட்டம் உங்களுக்கு இருக்கும். முதலீடு செய்யும் பழக்கத்தால் பணக்காரராக இருப்பீர்கள்.
கல்வி மற்றும் வருமானம்
17 அல்லது 18 வயது முதலே பணம் சம்பாதிக்க தொடங்கிவிடுவீர்கள். உங்களுக்கு சாதகமான துறைகள் ஹிப்னாடிசம், மந்திரம் தந்திரம் செய்தல், ஜோதிடம், உளவு பார்த்தல், புகைப்படக்கலை, சினிமா, இசை மற்றும் கலை தொடர்பான தொழில், னிர்வாகம், கவுன்சிலிங், சைக்காலஜி, அறிவியல், எண்கணிதம், கணிதவியல், நிர்வாகம் தொடர்பான பணிகள், தொழிற்சாலை நட்த்துதல், சுற்றுலா துறை தொடர்பான பணிகள் ஆகியவை.
இல்லற வாழ்க்கை
தனிப்பட்ட வாழ்க்கையில் உங்களுக்கு குடும்பத்திலிருந்து ஆதரவு மிக குறைவாக இருக்கும். மேலும் தந்தையுடன் கருத்து மோதல்கள் ஏற்படலாம். பிறந்த ஊரிலிருந்து பொதுவாக தொலைவாக வசிப்பீர்கள். உங்களை விட உங்களது குழந்தைகள் வாழ்க்கையில் அதிக வெற்றிகளை பெறுவார்கள்.