கிருத்திகை நட்சத்திர பலன்கள்
நீங்கள் ஒரு சிறந்த ஆலோசகர் மற்றும் தன்னம்பிக்கை நிரம்பியவர்.. மதிப்பும் மரியாதையுடன் நடந்து நல்ல வாழ்க்கை வாழ்வீர்கள். உங்களது முகம் பொலிவாக இருக்கும் உங்களது நடை வேகமானதாக இருக்கும். ஆங்கிலத்தில் கிரிட்டிக்கல் என்ற சொல் கிருத்திகை என்ற சொல்லில் இருந்தே வந்ததாகும். அதாவது மனிதர்களை ஆழ்ந்து கவனித்து அவர்களின் குறைகளை சரி செய்வீர்கள். எந்த வேலையின் முடிவினை ஆராய்ந்து கணிப்பதிலும் அதில் மறைந்துள்ள நன்மை தீமைகளை கண்டறிவதில் நிபுணராக இருப்பீர்கள். உங்களது வார்த்தைகளுக்கு மிகுந்த மதிப்பு இருக்கும். சமூக சேவையில் நாட்டம் கொண்டிருப்பீர்கள். பெயர் மற்றும் புகழ் பெறுவதிலோ அல்லது மற்ரவர்களிடமிருந்து உதவிகளை பெறுவதிலோ ஆர்வம் காட்ட மாட்டீர்கள். உங்களது எல்லா வேலைகளையும் நீங்களே செய்து கொள்ள விரும்புவீர்கள். சூழலுக்கு தகுந்தாற்போல செயல்பட மாட்டீர்கள். நீங்கள் எடுத்த முடிவுகளில் உறுதியாக இருப்பீர்கள். வெளியே பார்ப்பதற்கு கடுமையானவராக இருந்தாலும் உங்களது அன்பும், காதலும் நேசமும் நிரம்பி இருக்கும். ஒழுக்கத்தை பின்பற்றாவிட்டால் கோபமடைவீர்கள். யாரையும் பயமுறுத்தி காரியம் சாதிக்க விரும்பமாட்டீர்கள். இது தவர உங்களுக்கு ஆன்மீகத்திலும் ஆர்வம் இருக்கும். ஜபம், தியானம், விரதங்கள் போன்றவற்றால் முன்னேற்றம் காண்பீர்கள். ஆன்மீகப்பாதையில் செல்ல நீங்கள் முடிவு செய்துவிட்டால் இந்த உலகில் யாராலும் உங்களை தடுக்க முடியாது. கடின உழைபாளியான நீகள் சில விஷயங்களை அடிக்கடி செய்ய விரும்புவீர்கள். கல்வி, வேலை அல்லது பிசினஸ் இப்படி எந்த துறையாக இருந்தாலும் மற்றவர்களை விட முன்னணியில் இருக்க விரும்புவீர்கள். பின்தங்குதல் மற்றும் பின்னடைவு ஏற்படுதல் ஆகியவற்றை உங்களால் தாங்கிக்கொள்ள முடியாது. உங்களது நேர்மையான குணத்தால் மற்றவர்களால் ஏமாற்றப்படும் சூழல் ஏற்படலாம். உங்களது பிறந்த ஊரிலிருந்து தள்ளி இருப்பது நன்மை பயக்கும். மற்றவர்களின் பிரச்சினைகளுக்கு தகுந்த ஆலோசனை வழங்குவதில் சிறந்தவர் நீங்கள். மற்றவரின் உதவியாலோ அல்லது தவறான வழியிலோ பெயர், புகழ மற்றும் பணத்தை சம்பாதிக்க விரும்பமாட்டீர்கள். பணம் சம்பாத்திக்க சிரந்த வழியை அறிந்தவர் நீங்கள். எந்த லட்சியத்தையும் கடுமையான உழப்பால் அடையும் பழக்கம் கொண்டிருப்பீர்கள். உங்களது பொது வாழ்க்கை சிறப்பாக இருக்கும். உங்களது வாழக்கையை பொறுத்த வரையில் நீகள் கடபிடிக்கும் சட்ட திட்டங்களே உங்களுக்கு முக்கியமாக இருக்கும். இசை மற்றும் கலைகளில் சிறந்த நாட்டம் கொண்டிருப்பீர்கள். மற்றவர்களுக்கு கற்பிப்பதிலும் சிறந்து விளங்குவீர்கள்.
கல்வி மற்றும் வருமானம்
நீங்கள் பிறந்த ஊரிலேயே தங்காமல் பணி நிமித்தமாக பல ஊர்களில் தங்கும்படி நேரும். பார்மசிஸ்ட், இஞ்சிரியரிங், ஆபரணங்கள் தொடர்பான பணி, பல்கலைக்கழகத்தில் உயர் பதவி, ஒரு பிரிவின் தலைவர, வழக்கறிஞர், நீதிபதி, ராணுவம் அல்லது பாதுகாப்பு பிரிவு, தீயணைப்பு ஆபீசர், குழந்தகள் பாதுகாப்பு யூனிட், ஆதரவற்றோர் இல்லம் பணி, ஆன்மீக குரு அல்லது போதகர், நெருப்பு சம்மந்தமான தொழில் அதாவது பேக்கரி, வெல்டிங், ஆச்சாரி, டைலரிங், செராமிக் உற்பத்தி அல்லது கயொர்லின் பொருட்கள் நெருப்பு தொடர்பான பணிகள் அல்லது கூர்மையான ஆய்தங்கள் தொடர்பான பணிகள் உங்களுக்கு லாபகரமாக இருக்கும்.
இல்லற வாழ்க்கை
உங்களது மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். உங்களது வாழ்க்கை துணை திறமை வாய்ந்தவராகவும், நேர்மை, பொறுப்பு மற்ரும் குடும்பத்துகேற்ற னல்ல குணங்களை கொண்டிருப்பார். வீட்டில் அற்புதமான சூழல் அமைந்திருந்தாலும் உங்களது வாழக்கை துணையின் உடல் ஆரோக்கியம் கவலைக்குரியதாக இருக்கும். உங்களது வாழக்கை துணை உங்களுக்கு ஏற்கனவே அறிமுகமானவராக இருப்பார். காதல் திருமணத்துக்கான வாய்ப்புகள் உள்ளது. உங்களது தாயுடன் ஒரு சிறப்பான பிணைப்பு உங்களுக்கு இருக்கும் எனவே உங்களது உடன் பிறந்தவர்களை விட அவர் உங்களிடம் அதிக அன்பு செலுத்துவார். உங்களது 50 வயது முதல் 56 வயது வரை நிறைய போராட்டங்களை வாழ்க்கையில் சந்திக்க நேரும்.