பூரட்டாதி நட்சத்திர பலன்கள்
அமைதி விரும்பியான நீங்கள் புத்திசாலிகள். பாரபட்சமின்றி நடப்பதுடன் எளிமையான வாழ்வை பின்பற்றுவீர்கள். கடவுள் மேல் மிகுந்த பக்தி கொண்டிருப்பீர்கள். உங்களது நம்பிக்கை தூய்மையானது என்பதால் மற்றவருக்கு எப்போதும் உதவ தயாராக இருப்பீர்கள். பணத்தை சேர்ப்பதை விட மற்றவர்களிடம் நம்பிக்கையையும் மரியாதையையும் சேர்ப்பீர்கள். உணமையை பேசுவதையும் உண்மையாக நடப்பதையும் விரும்புவீர்கள். ஏமாற்று பொய் ஆகியவற்றிலிருந்து தள்ளியே இருப்பீர்கள். யாராவது கஷ்டத்தில் இருந்தால் ஓடி சென்று உதவுவீர்கள். உயர்ந்த குணமும் சகஜமாக அனைவரிடம் பழகும் இயல்பும் கொண்டவர் நீங்கள். நட்பில் நேர்மையும் பாரபட்சதன்மையற்றும் இருப்பீர்கள். தூய்மையான மனமும் நல்ல நட்த்தையும் கொண்டிருப்பீர்கள். கல்வியும் ஞானமும் கொண்டவராக விலங்குவீர்கள். இது தவிர அறிவியல், வனவியல் மற்றும் ஜோதிடத்தில் ஆர்வம் கொண்டிருப்பீர்கள். சிறந்த கொள்கைவாதியான நீங்கள் பணத்தை விட அறிவுக்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள். பிசினஸ் செய்வது வேலை செய்வது இரண்டுமே உங்களுக்கு லபம் அளிக்கும். பிசினஸ் செய்பவராக இருந்தால் அதை முன்னேற்ற பாடுபடுவீர்கள். பார்ட்னர்ஷிப்பில் தொழில் செய்வீர்கள். பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். எதிர்மறையான சிந்தனைகளுக்கு இடம்ளிக்க மாட்டீர்கள். எதிர் மறையான சூழல்களை துணிவுடன் சந்திப்பீர்கள். பகழடைய அவசரப்படாமல் பொறுமையாக செயல்படுவீர்கள்.
கல்வி மற்றும் வருமானம்
கல்வி மற்றும் வருமானம்: புத்திசாலியான நீங்கள் அந்த துறையில் நுழைந்தாலும் வெற்றியடைவீர்கள். அரசாங்கத்தில் இருந்து எதிர்பாராத லாபம் அடைவீர்கள். பொருளாதார ரீதியாகவும் சமுதாய ரீதியாகவும் சுதந்திரமாக விளங்குவீர்கள். 24 முதல் 33 வயது வரை சிறந்த வளர்ச்சி காண்பீர்கள். உங்களுக்கு சாதகமான தொழில்கள் அறுவை சிகிச்சை, மர்ம கதை எழுத்தாளர், போதகர், ஜோதிடர், யோகா பயிற்சியாளர், சைக்கோ ஆராய்சியாளர், அரசியல், ஆயுதம் தயாரித்தல், ராணுவ வீர்ர், எங்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட், வெல்டிங், இரும்பு மற்றும் தங்கம் தொடர்பான வேலைகள், பார்மசிட்டிக்கல் வேலைகள் ஆகியவை.
இல்லற வாழ்க்கை
நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு தாய்பாசம் கிடைக்காமல் போகலாம். இதன் காரணம் தாயிடமிருந்து பிரிந்த்தால் இருக்கலாம். ஆனால் உங்கள திருமண வாழ்வு மகிழ்ச்சியாக இருக்கும். மனைவி புத்திசாலியாகவும் கடமையுணர்வு மிக்கவராகவும் இருப்பார். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும்.