கேட்டை நட்சத்திர பலன்கள்
அரோக்கியமான, சுறுசுறுப்பு நிறைந்த கவர்ச்சியான தோற்றம் கொண்டவர் நீங்கள். இளகிய மனமும், நேர்மையான குணமும் பொருந்தியவர் நீங்கள். உங்களது மனசாட்சியின்படி செயல்படுவீர்கள். மற்றவரின் பேச்சை நீங்கள் கேட்க விரும்பாதவர் ஆதலால் அவர்கள் உங்களுக்கு தலைகனம் என எண்ணக்கூடும். கொள்கைப்பிடிப்புடன் வாழ்பவர் என்பதால் பிடிவாத குணம் கொண்டிருப்பீர்கள். திறந்த மனம் கொண்டிருப்பதால் குறிகிய சிந்தனைகளுக்கு இடமளிக்க மாட்டீர்கள். புத்திக்கூர்மை கொண்டவர் என்பதால் எல்லா விஷயங்களையும் எளிதில் கிரகித்து கொள்வீர்கள். அவசர புத்தியால் சில நேரங்களில் தவறுகள் நேரலாம். எதையேனும் அடையவோ அல்லது யாரையாவது போல உருவாகவோ லட்சியம் கொண்டிருப்பீர்கள். மற்றவர்களை கவர பல செயல்களை செய்வீர்கள். தூய்மையான மனமும் நாசூக்கான பழக்க வழக்கமும் கொண்ட உங்களுக்கு உங்களது மனதில் உள்ளதை மற்றவரிடம் வெளிப்படுத்த தெரியாது. எனவே உங்களது இந்த நல்ல குணங்களை அவர்கள் அறிந்து கொள்ளாமல் போகக்கூடும். சிறு வயதிலேயே தொழில் அல்லது வேலைக்கு சென்றுவிடுவீர்கள், அதற்காக பல இடங்களுக்கு பிரயாணம் செய்யவும் தயங்கமாட்டீர்கள். எந்தையும் அர்பணிப்புடன் செய்து வெற்றியடைவீர்கள். கட்டுமஸ்தான உடலமைப்பால் எதையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். நேரத்தின் மதிப்பை நங்கு உணர்ந்திருப்பீர்கள். எனவே அனாவசியமாக உங்களது நேரத்தை வீணாக்க மாட்டீர்கள். வேலையோ தொழிலோ எதுவாக இருந்தாலும் அதில் வெற்றி பெறுவீர்கள். வேலை செஉபவர் என்றால் உயர்ந்த பதவிகளை எட்டிப்பிடிப்பீர்கள். சரியான திசையில் செல்ல உங்களுக்கு பலரும் உதவுவார்கள். பிசினஸ் செய்பவர் என்றால் உங்களது போட்டியாளர்களை விட உங்களது கையே பிசினசில் ஓங்கியிருக்கும். 18 வயது முதல் 26 வயது வரை சில போராட்டங்களை நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால் அதிலிருந்து நல்ல படிப்பினையை கற்றுக்கொள்வீர்கள். நச்சுப்பொருட்கள் உங்களது ஆரோக்கியத்துக்கு கேடாகும். சிந்தனைத்திறன், திறமை மற்றும் புத்திசாலித்தனம் நிறைந்தவர் நீங்கள். உங்களது நற்பெயரை காப்பாற்றிக்கொள்ள சுற்றியுள்ள அனைவரிடமும் நேசத்துடன் பழகுவீர்கள். எச்சரிக்கை குணம் உங்களிடம் அதிகம் இருக்கும். நல்ல கல்வி பெற்ற நீங்கள் பெற்ற கல்வியை வாழ்க்கைக்கு உதவும்படி சிறப்பாக பயன்படுத்துவீர்கள்.
கல்வி மற்றும் வருமானம்
உங்களுக்கு சாதகமான தொழில்கள் பாதுகாப்பு பிரிவு, அரசாங்க பணி, நிருபர், ரேடியோ மற்ரும் தொலைகாட்சி ஆர்டிஸ்ட், செய்தி வாசிப்பாளர், நடிகர், கதை சொல்லுதல், தீயணைப்பு ஆபிசர், உயர் அல்லது மேல் நிலை அதிகாரி, கப்பல் அல்லது வேறு வகை நீர் போக்குவரத்துகள், வன பாதுகாப்பு அதிகாரி, ராணுவம், பேரிடர் நிர்வாகம், ஓட்டப்பந்தய வீரர், தொலை தொடர்பு அல்லது ஸ்பேஸ் சிஸ்டம் தொடர்பான வேலை, அறுவை சிகிச்சை நிபுணர் ஆகியவை.
இல்லற வாழ்க்கை
உங்களது திருமண வாழ்க்கை பிரச்சினைகள் அதிகம் இன்றி சாதாரணமாக இருக்கும். பணி நிமித்தமாக குடும்பத்தை விட்டு தள்ளி இருக்கும் சூழல் ஏற்படும். உங்களது வாழ்க்கை துணை உங்களது மேல் ஆதிக்கம் செலுத்தக்கூடும். எனினும் அவரது ஆதிக்கம் உங்களை பொறுத்த வரை சாதகமானதாகவே இருக்கும். அவரது உடல் நலத்தில் பாதிப்புகள் ஏற்படலாம். எனவே எச்சரிக்கை தேவை. சகோதர சகோதரிகள் இடையே சில சிக்கல்கள் ஏற்படக்கூடும்.