பரணி நட்சத்திர பலன்கள்
பரணி நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் பெரிய மனதுக்கு சொந்தக்காரர். மேலும் பிறர் கடுமையான சொற்களை உங்கள் மேல் வீசினாலும் அதனை பெரிது படுத்த மாட்டீர்கள். உங்களது கண்கள் மிக பெரியதாகவும் உங்களை பற்றி அதிகம் வெளிப்படுத்துவதாகவும் இருக்கும். எதிரில் உள்ளவர்களிடம் உங்களது கண்களாலேயே பேசி விடுவீர்கள். மனம் கவரும் சிரிப்பாலும் நல்ல குணத்தாலும் உங்கள் மேல் அனைவரும் பைத்தியமாகிவிடும்படி செய்துவிடுவீர்கள். மற்ரவர்களை பெரிதும் ஈர்க்கும் தன்மை கொண்டவர் நீங்கள். உள்ளுக்குள் கவலைகள் இருந்தாலும் வெளியே அதை காட்டிக்கொள்ளாமல் அமைதியாக திகழ்வீர்கள். எல்லோரிடமும் நட்புணர்வுடன் பழகும் நீகள், எதிர்காலத்தை பற்றி அதிக யோசிக்க மாட்டீர்கள். வாழ்க்கையை முழுதாக வாழ்ந்து பார்க்க விரும்பும் நீங்கள் ஆபத்துகளை சந்திக்க தயங்கமாட்டீர்கள். சரியான திசையை நோக்கி பயணித்தல் மற்றும் அன்பக்குரியவர்களின் ஆதரவு ஆகியவையே உங்களது லட்சியத்தை எளிதாக அடைய உங்களுக்கு உதவும். குறுக்கு வழிகளில் செல்லமாட்டீர்கள் நேர்மையான எளிய வழியே உங்களுக்கு பிடித்தமானது. உங்களது மனசாட்சிக்கு எதிராக எதையும் செய்ய மாட்டீர்கள். உள்ளதை உள்ளபடியே அனைவரிடமும் தெரிவிப்பீர்கள். இதனால் ஒரு ஆரோக்கியமான உறவுமுறை பாதிக்கும் என்று தெரிந்தாலும் வெளிப்படையாக செயல்பட தயங்க மாட்டீர்கள். நேர்மையான நீங்கள் உங்களது சுய மரியாதையை என்றும் விட்டுக்கொடுக்க மாட்டீர்கள். எனவே உங்களது வேலைகளை நீங்களே எப்போதும் செய்து கொள்ள விரும்புவீர்கள். பரணி நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன் ஆவார். புனித்த்தன்மை, அதகு, கலை ஆகியவற்றை இது குறிக்கும். இதனால் நீங்கள் புத்திக்கூர்மை, அழகை ஆராதிக்கும் குணம், இசை விரும்பி, சுகபோகங்களில் ஆர்வம், கலாரசனை கொண்டவராக, அதிக பிரயாணம் செய்ய விரும்புபவராக இருப்பீர்கள். நல்ல ஆடை ஆபரணங்கள் அணியவும் ராஜ போக வாழ்வு வாழவும் விரும்புவீர்கள். மேலும் உங்களுக்கு கலைகள், இசை, வேடிக்கை வினோதங்களில் ஆர்வம் இருக்கும். பெண்களுக்கு இந்த கிரக அமைப்பு ஓரளவுக்கு சாதகமாக உள்ளது. ஏனெனில் சுக்கிரனின் தாக்கத்தால் பெண்தன்மைகள் (அழகு மற்ரும் கலாரசனையின் அதிபதி சுக்கிரன் என்பதால்) அதிகரிக்கும். தன்னம்பிக்கையும் பெரியவர்களிடம் மரியாதையும் கொண்டவர் நீங்கள். வாய்ப்புகள் உங்களை தேடி வரும்வரை காத்திருக்காமல் வாய்ப்புகளை நீங்கள் தேடி செல்வீர்கள். உங்களது குடும்ப வாழ்க்கை இனிமையானதாக இருக்கும். உங்களது வாழ்க்கை துணை உங்களை அதிகம் நேசிப்பதோடு அல்லாமல் அவரை உங்களது அன்பால் ஆட்சி செய்வீர்கள்.
கல்வி மற்றும் வருமானம்
இசை, நடனம், கலை மற்றும் நடிப்பு மற்றும் நாடகம், மாடலிங்,, ஃபேஷன் டிசைனிங், புகைப்படம் எடுத்தல், வீடியோ எடிட்டிங் போன்ற துறைகள் மற்றும் அழகு படுத்துதல் தொடர்பான துறை, நிர்வாகப்பணி, விவசாயம், விளம்பரம், மோட்டார் வாகனம் தொடர்பான பணிகள் ஹோட்டல் துறை, சட்டம் போன்ற துறைகளில் உங்களுக்கு வெற்றி கிட்டும். பணத்தை சேமிப்பதில் நீகள் ஆர்வம் கொண்டிருப்பீர்கள்.
இல்லற வாழ்க்கை
உங்களது குடும்பத்தை அதிகம் நேசிப்பீர்கள். அவர்கள் இல்லாமல் ஒரு நாள் கூட இருக்க விரும்பமாட்டீர்கள். உங்களுக்கு 23 முதல் 27 வயதுக்குள் திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. உங்களது குடும்பத்தாரின் தேவைகளை தீர்ப்பதையே முக்கியமாக கருதி அதிக பணத்தை செலவழிப்பீர்கள். உங்களது வாழ்க்கை துணையிடமிருந்து அன்பு, ஆதரவு மற்ரும் நம்பிக்கையை பெறுவீர்கள். பெரியவர்களுக்கு மரியாதை கொடுப்பீர்கள். உங்களது இத்தகைய குணங்களால் நீங்கள் அழகான குடும்ப வாழ்க்கையை அனுபவிப்பீர்கள்.