மிருகசீரிஷ நட்சத்திர பலன்கள்
உங்களைப்பற்றி ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் நீங்கள் ஒரு சிறந்த ஆராய்ச்சியாளர். எதையும் ஆராயும் நோக்கம் உங்களிடம் அதிகம் இருக்கும். அன்மீகம், உளவியல் மற்றும் உணர்ச்சிகளை குறித்துமேலும் அறியும் ஆர்வம் கொண்டிருப்பீர்கள். அறிவு மற்றும் அனுபவத்தை பெறுவதே உங்கள் நோக்கமாக இருக்கும். கூர்மையான புத்தியும் எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் திறனும் கொண்டிருப்பீர்கள். தன்மையான , அடக்கமான, குதூகலாமான, நட்பான கலகலப்பான குணம் கொண்டவர் நீங்கள். உங்களது மூளையும் மனதும் எப்போதும் சுறுசுறுப்பான குணமும் கொண்டவர் நீங்கள். மக்களை சந்திப்பதிலும் அவர்களுக்கு உதவுவதையும் விரும்புவீர்கள். எளிமையாக வாழ்வதையே உங்களது கொள்கையாக கொண்டிருப்பீர்கள். வாக்குவாதங்களையும், சண்டைகளையும் கருத்து வேற்றுமைகளையும் தவிர்ப்பீர்கள். இதனால் உங்களை கோழை என மற்றவர்கள் நினைக்க கூடும் ஆனால் அது நிஜமல்ல. உங்களது சிந்தனைகள் நியாயமானதாகவும் பாகுபாடன்றி உண்மையாகவும் இருக்கும். கருத்துக்களை பரிமாறிக்கொள்வதில் சிறந்து விளங்குவீர்கள். சிறந்த பாடகராக கவிஞராகவும் விளங்க கூடும். கூடுதலாக, நகைச்சுவை உணர்வில் நீங்கள் யாருக்கும் சளைத்தவர் அல்ல. அன்பும் நேசமும்மே வாழக்கையின் அடிப்படைகள் என்பதை அறிந்தவர் நீங்கள். எதையும் லாஜிக்குடன் அணுகுவீர்கள். மற்றவர்களிடம் இனிமையாக நடப்பீர்கள் அவர்களும் அப்படியே நடக்க வேண்டுமென எதிர்பார்ப்பீர்கள். ஆனால் துரதிஷடவசமாக அப்படி நடக்காது. நன்பர்கள், பார்ட்னர்கள் மற்ரும் உறவினர்களிடம் ஜாக்கிரதையாக நடக்க வேண்டும். தலைமை பண்புகள் நிறைந்திருக்கும் உங்களிடம். எல்ல விஷயத்தையும் திட்டமிட்டு தொடங்கி சிக்கல்களை சரி செய்வீர்கள்.
கல்வி மற்றும் வருவாய்
நல்ல கல்வியை பெற்றிருப்பீர்கள். பணத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டுமென பிறருக்கு சொல்வீர்கள். ஆனால் உங்களது செலவுகளை உங்களால் கட்டுப்படுத்த முடியாது. சில நேரங்களில் உங்களை பொருளாதார பிரச்சினைகள் சூழும். நீங்கள் ஒரு சிறந்த பாடகராக, இசை கலைஞராக, ஆர்டிஸ்டாக, கவிஞராக, மொழி விற்பன்னராக, நாவலாசிரிரியராக, எழுத்தாளராக அல்லது சிந்தனையாளராக இருக்க கூடும். வீடு, ரோடு, மேம்பாலம் கட்டுமானம்,கருவிகள் செய்தல், டெக்ஸ்டைல் அல்லது ஆடை தொழிற்சாலை, ஆராய்சி தொடர்பான பிரிவுகள்; இயற்பியல். வான சாஸ்திரம். சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் இஞ்சினியரிங் ஆகியவை லாபம் தரும்.
இல்லற வாழ்க்கை
பொதுவாக உங்களது திருமண வாழ்வு இனிமையாக இருக்கும். ஆனால் உங்களது வாழ்க்கை துணைக்கு உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படக்கூடும். திருமண வாழ்வின் மகிழ்ச்சியை அனுபவிக்க, நீங்கள் பிடிவாதத்தையும் சந்தேக குணத்தையும் கைவிட வேண்டும். அப்போது தான் குடும்பத்தில் அமைதி நிலவும். கணவனும் மனவியும் ஒருவருக்கொருவர் குறை காணாமல் இருந்தால் சிவனும் பார்வதியும் போல ஆதர்சதம்பதிகளாக இருப்பீர்கள். 32 வயது வரை, வாழ்க்கையில் சோதனைகளை சந்திப்பீர்கள். அதன் பிறகு வாழ்க்கை ஒரு நிலைக்கு வரும். 33 வயது முதல் 50 வயது வரை உங்களது காலம் சாதகமாக இருக்கும். வெற்றிகளை தரும்.