Rasi Palan 2013 - Rasi Palangal 2013 - Tamil Astrology 2013 - Tamil Horoscope 2013
2013 தமிழ் ராசிபலன் – 2013 தமிழ் ஜாதகம் – 2013 தமிழ் ஜோதிடம்
ஜாதக பலனை தமிழில் ராசிபலன் என்று அழைக்கிறோம், ராசிபலன் என்பது ஒருவருடைய பிறந்த நேரத்தில் அவருடைய ராசி மண்டலத்தில் சந்திரன் இருக்கும் ஸ்தானத்தின் அடிப்படையில் கணிக்கப்பட்டதாகும். 2013 ஆண்டில் சந்திரன் அமைந்திருக்கும் ஸ்தானம் அந்த வருடத்துக்கான ராசிக் குறிப்பை சரியான வகையில் உணர்த்தி விடும். இந்த ஆண்டு ராசிபலனில் ஜனவரி மாத ராசிபலன், பிப்ரவரி மாத ராசிபலன், மார்ச் மாத ராசிபலன், ஏப்ரல் மாத ராசிபலன், மே மாத ராசிபலன், ஜூன் மாத ராசிபலன், ஜூலை மாத ராசிபலன், ஆகஸ்டு மாத ராசிபலன், செப்டம்பர் மாத ராசிபலன், அக்டோபர் மாத ராசிபலன், நவம்பர் மாத ராசிபலன், டிசம்பர் மாத ராசிபலன் என்று 2013ம் ஆண்டுக்கான விரிவான ராசிபலன்கள் தமிழில் கிடைக்கும்.
2013 ஆண்டுக்கான தமிழ் ராசிபலன் உங்களுடைய ராசியின் அடிப்படையிலும் வெகு புராதன வேத ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையிலும் தயாரிக்கப்பட்டது. உங்களுடைய ராசி தெரியவில்லை என்றால் இங்கே கிளிக் செய்து சரியான ராசியை இலவசமாகத் தெரிந்து கொள்ளுங்கள்.
உங்கள் ராசியைத் தேர்வு செய்யுங்கள்.
மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் |
சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் |
தனுசு | மகரம் | கும்பம் | மீனம் |
மேஷம் 2013 ராசிபலன் (Aries)
மேஷ ராசிக்காரர்களே, 2013ம் ஆண்டு உங்களுக்குப் பலவகைகளில் ஏற்றத் தாழ்வுகளைக்
கொண்டதாக அமைந்திருக்கும். மகிழ்ச்சியான தருணங்கள் பலவற்றை அனுபவிக்க நேர்ந்தாலும்
வாழ்க்கையில் ஒருவகையான திருப்தியை நீங்கள் உணரமாட்டீர்கள். இந்த ஆண்டில், காதல், ஆரோக்கியம்,
குடும்பம், உத்தியோகம், பணம் மற்றும் கல்வி போன்ற விஷயங்களில் இந்த ராசிக்காரர்கள்
சற்று எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருக்க வேண்டியிருக்கும். இல்லையெனில் சில பின்னடைவுகளை
சந்திக்க நேரிடலாம்,. உங்கள் குடும்பம் மற்றும் ஆன்மீகம் தொடர்பான சில விஷங்களில் உங்கள்
பணத்தை நீங்கள் முதலீடு செய்வீர்கள். உங்களுக்கு வருமானமும் சேமிப்பும் அதிகரிக்க வாய்ப்பு
இருப்பதால் பணத்தைப் பற்றி அதிகம் கவலைப்படத் தேவை இருக்காது. 2013ம் ஆண்டில் காதல்
மற்றும் குடும்பம் தொடர்பான விஷயங்களில் மிகவும் கடினமான தருணங்களையும் நீங்கள் உறுதியோடு
சமாளித்து விடுவீர்கள் என்றாலும் அது உங்களுக்கு அதிகப் பயன் அளிக்காது. எனவே உங்களால்
இயன்ற அளவு உங்களை அமைதியாக வைத்து இருக்க முயற்சி செய்யுங்கள். மாணவர்கள் தங்களுக்கேற்ற
கல்வி நிறுவனங்களையும் பாடத்திட்டங்களையும் புத்திசாலித்தனமான வகையில் தேர்ந்தெடுத்தால்
2013ம் ஆண்டு அவர்களுக்கு மிகவும் அற்புதமான வகையில் அமையும்.
ரிஷபம் - ராசிபலன் 2013 (Taurus)
ரிஷப ராசிக்காரர்களே, உங்களுக்கு 2013
மிகவும் அமோகமாக அமைந்து விடும். எதைத் தொட்டாலும் வெற்றி நிச்சயம். உங்களுக்காகக்
காத்திருக்கும் வெற்றியை சாதிக்க ஒரே வழி எல்லாவற்றிலும் சற்று பொறுமையாகக் காத்திருப்பதுதான்,
நீங்கள் அடையப்போகும் வெற்றி வாய்ப்புக்கள் சற்றே தாமதம் அடைந்தாலும் அந்த வெற்றிகளை
நீங்கள் அடைவது சர்வ நிச்சயம். 2013ம் ஆண்டு குடும்பம், காதல், உத்தியோகம் போன்ற விஷயங்களில்
நிறைவு அளித்தாலும் நீங்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டியது உங்களுடைய ஆரோக்கியத்தில்தான்.
குடும்பம் மற்றும் காதல் தொடர்பான விஷயங்களில் இந்த ஆண்டு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகும் வாய்ப்புக்கள் உள்ளன. திருமணம் ஆனவர்கள்
மகப்பேற்றுக்குத் திட்டமிடலாம். நீங்கள் பணி செய்யுமிடத்தில் சில பிரச்சினைகளை சமாளிக்க
நேரிடலாம். ஆனாலும் குறிப்பாக உங்கள் புத்தி சாதுரியத்தினாலும் கடுமையான உழைப்பினாலும்
அந்தப் பிரச்சினைகளில் இருந்து நீங்கள் வெளியேற வாய்ப்புக்கள் உள்ளன. அனைவரிடமும் மிகவும்
அன்பாகப் பழகும் உங்கள் நல்ல தன்மை உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்தை வழிவகுக்கத்
துணையாக நிற்கும். இந்த ஆண்டில் மாணவர்களுக்கு சாதகமான நிலை அமையும்.
மிதுனம் - ராசிபலன் 2013 (Gemini)
மிதுன ராசிக்காரர்களே பொதுவாக அமைதியான மற்றும் அடக்கமானது உங்களுடைய ராசி. 2013ம்
ஆண்டு முழுதும் நிம்மதியாகக் கடந்து செல்ல உங்களுடைய இந்தக் குணம் எப்போதும் உதவி செய்யும்.
இந்த ஆண்டின் நிலவரங்கள் அத்தனை சாதகமாக இல்லை என்று சொல்லலாம். உங்களை நேசிப்பவர்கள்
மற்றும் குடும்பத்தினர் உங்களுடைய எண்ணங்களை எதிர்மறையாக எடுத்துக் கொள்ளும் வாய்ப்புக்கள்
உள்ளன. 2013ம் ஆண்டில் உங்கள் நம்பிக்கைக்கு உரியவர்களுடன் மட்டுமே தொடர்புகளை வைத்துக்
கொள்ளுங்கள். சில நம்பிக்கைத் துரோகங்களை இந்த ஆண்டில் நீங்கள் எதிர்கொள்ள நேரிடலாம்.
உங்கள் நண்பர்களும் உங்களை ஏமாற்றும் அல்லது துரோகம் இழைக்கும் சந்தர்ப்பங்கள் நேரிடலாம்.
நீங்கள் பணிபுரியும் இடத்திலும் சில இடர்ப்பாடுகள் நேரிட வாய்ப்பு உண்டு. உங்கள் தொழில்
அல்லது பண வரவு மற்றும் செலவு தொடர்பான விஷயங்களில் ஒவ்வொன்றையும் மிகவும் கவனமாக ஆராய்ந்து
பரிசீலித்து முடிவுகளை மேற்கோள்ளுங்கள். மாணவராக இருந்தால் நீங்கள் சேரப்போகும் கல்வி
நிறுவனம் குறித்து தீர விசாரித்து அறிந்து கொள்ளுங்கள். 2013ம் ஆண்டு உங்களுக்கு அத்தனை
சாதகமாக அமையாததினால் பெரிய அளவில் முதலீடு எதுவும் செய்யாமல் கவனமாக இருந்து கொள்ளுங்கள்.
சிறிய அளவில் முதலீடு தேவைப்படும் வியாபாரங்கள் லாபம் அளிக்கலாம். சில வழக்குகளில்
சிக்கிக் கொள்ளும் வாய்ப்புக்களும் இருக்கின்றன. எனவே மிகுந்த கவனத்துடன் நடந்து கொள்ளுங்கள்.
கடகம் - ராசிபலன் 2013 (Cancer)
கடக ராசிக்காரர்களே, 2013ம் ஆண்டில் அதிக அளவிலான பொறுப்புக்களை நீங்கள் பணிபுரியும்
இடத்திலும் இல்லத்திலும் சுமக்கப் போகிறீர்கள். நீங்கள் செய்யாத காரியத்தில் கூட உங்கள்
மீது பழி சுமத்தப்படும். இதில் முக்கியமான பிரச்னை என்னவென்றால் உங்களை நீங்களே கூட
பழித்துக் கொள்வீர்கள், பெருந்தன்மையாக நடந்து கொள்வது நல்லதுதான் என்றாலும் உங்களைச்
சுற்றி நடக்கும் விஷயங்களின் மீது அவற்றின் நல்ல தன்மைகளையும் கவனத்தில் கொள்வது நலம்
பயக்கும். காதல், உத்தியோகம் மற்றும் பணவருவாய் போன்ற விஷயங்கள் இந்த ஆண்டில் மிகவும்
சாதகமாக இருக்கும். கடந்த ஆண்டுகளில் காதல் உறவில் நிலைமை சாதகமாக அமையாது இருந்திருந்தால்
இந்த ஆண்டு அந்தக் காதல் உறவு மீண்டும் கைக்கு எட்டும் வாய்ப்பு உள்ளது. சிறு சிறு
சண்டை சச்சரவுகளைத் தவிர்த்து காதல் பயணத்தை உல்லாசமாக அனுபவியுங்கள். நீங்கள் புதிய
வியாபாரத்தைத் துவக்க வாய்ப்புக்கள் உள்ளன. அயல்நாடுகள் தொடர்பான வியாபாரத்தில் சிறிது
லாபம் அடைய வாய்ப்புக்கள் உள்ளன. வியாபாரத்தில் எந்தவகையான ஆபத்தான முயற்சிகளையும்
எடுக்க வேண்டாம். அவை சிலவேளை நட்டத்தில் கொண்டு நிறுத்தும் வாய்ப்புக்களும் இருக்கின்றன.
சிம்மம் - ராசிபலன் 2013 (Leo)
சிம்ம ராசிக்காரர்களே, இந்த 2013ம் ஆண்டில் நீங்கள் மிகவும் அதிருஷ்டசாலியாகத்
திகழப் போகிறீர்கள், நீங்கள் தொட்டவை அனைத்தும் பொன்னாகும், இல்லையென்றாலும், ஏதோ ஒருவகையில்
காரியங்கள் லாபகரமாகவே நடக்கும். உங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். இதனால்
லாபம் அதிகரித்து பெரிய அளவில் தொகையை சேமித்து வைப்பீர்கள். உங்கள் அமோகமான திறமையில்
நம்பிக்கை வைக்கும் அதே நேரத்தில் தேவைக்கு அதிகமான நம்பிக்கை வைப்பதையும் தவிர்க்க
முயற்சியுங்கள். முதலீடுகள் செய்ய மிகவும் சாதகமானது இந்த 2013. சிம்ம ராசியை சேர்ந்த
மாணவ மாணவியர் மேல் படிப்புக்கு முயற்சிக்க வேண்டும். அவர்களுக்கு மிகவும் சாதகமான
பலன்கள் கிட்டும் வாய்ப்பு உண்டு. உங்கள் காதல் வாழ்க்கை இந்த ஆண்டு தீவிரம் அடையும்.
குடும்பத்தினருடன் உங்களுடைய உறவுகள் சீரடைந்து இல்லத்தில் உற்சாகமும் திருப்தியும்
தவழும். 2013ம் ஆண்டின் சிறந்த அம்சம் என்னவென்றால் உங்களுக்கு இந்த ஆண்டு மன நிம்மதி
கிட்டும்.
கன்னி - ராசிபலன் 2013 (Virgo)
கன்னி ராசிக்காரர்களே, 2013ம் ஆண்டில், குடும்பம், காதல் மற்றும் தெய்வீகமான காரியங்களில்
உங்கள் நேரத்தையும் கவனத்தையும் செலுத்தப் போகிறீர்கள். உங்கள் குடும்பத்தினருடன் ஒரு
நெடிய சுற்றுலாவை திட்டமிட வாய்ப்புக்கள் உண்டு. இந்த சந்தர்ப்பம் குடும்பத்தினருடன்
நேசத்தையும் பாசத்தையும் நெருக்கத்தையும் மேலும் அதிகரிக்க வாய்ப்புக்களை அளிக்கும்.
இந்த ஆண்டு உங்கள் ஆரோக்கியம் நல்ல வகையில் திகழுவதற்கான அறிகுறிகள் உள்ளன. குடும்பத்தினருடன்
நீங்கள் செலவழிக்கும் நேரம் உங்களுடைய உள் மனத்தை நீங்கள் அறிந்து கொள்ள உதவும். பணவரவு,
தொழில் மற்றும் கல்வி தொடர்பான விஷயங்களில் கலவையான பலன்கள் இருக்கும். சில நேரங்களில்
நீங்கள் தோல்வியடைந்ததாகத் தெரிந்தாலும் சில நேரங்களில் மகிழ்ச்சியின் உச்சியில் மிதப்பது
போலவும் இருக்கும். 2013ம் வருஷத்தில் நீங்கள் மிகவும் பெரிய காரியங்களை சாதித்து அனைவரின்
கவனத்தையும் மரியாதையையும் ஈட்டுவீர்கள். நீங்கள் பணிபுரியும் இடத்தில் உங்கள் சாதனைகள்
அனைவராலும் பாராட்டப்படும். பணம் முதலீடு செய்வதில் மிகவும் கவனத்துடன் செயல்படவேண்டும்.
வியாபாரம் தொடர்பாக நீங்கள் உடனடியான பயணம் ஒன்றை மேற்கொள்ள நேரிடலாம்.
துலாம் ராசிபலன் 2013 (Libra)
துலாம் ராசிக்காரர்களே, 2013ம் ஆண்டு உங்கள் மீது பெரிய அளவில் விளைவுகளை ஏற்படுத்தும்.
எதிலும் எப்போதும் மிகவும் திருப்தி அடையும் ராசியை உடையவரான நீங்கள் 2013ம் ஆண்டில்
ஓரளவில் சில அதிருப்தியான சந்தர்ப்பங்களையும் சந்திக்க வாய்ப்புக்கள் உள்ளன- இந்த ஆண்டு
சில எதிர்மறையான விளைவுகள் உங்களுக்கு ஏற்பட்டு சிறிது கலக்கம் அளித்தாலும் அதனால்
நம்பிக்கையை இழப்பதும் ஆரோக்கியத்தின் மீது சரியான கவனம் செலுத்தாமல் இருப்பதும் எந்த
வகையிலும் உங்களுக்கு நன்மை பயக்காது, வீட்டு விஷயங்களிலும் காதல் விவகாரத்திலும் நீங்கள்
அதிகப்படியான கவனம் செலுத்த வேண்டும். தொழிலில் எதையாவது புதிதாகத் துவங்குவதற்கு முன்பு
அந்தத் துறையில் அனுபவம் உள்ளவர்களிடம் சரியான ஆலோசனை பெற்று தீர ஆராய்ந்த பிறகு அதில்
ஈடுபடுவது நன்மை பயக்கும். உங்களுடைய தொழிலில் பழைய பங்குதாரர்கள் அதிருப்தி காரணமாக
உங்களை விட்டு விலகுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. உங்கள் பணத்தை சிறிது நிதானமாக செலவழிக்க
முயற்சி செய்யாவிட்டால் அது பெரிய அளவில் பிரச்சினைகளில் கொண்டு விடுவதற்கு வாய்ப்புக்கள்
உள்ளன. ஆபத்தான முயற்சிகளில் ஈடுபடுவதற்கு கண்டிப்பாக இது சரியான நேரம் அல்ல. உங்கள்
பணத்தை எதிலாவது முதலீடு செய்வதற்கு முன்பு சாதகங்களையும் பாதகங்களையும் அலசி ஆராய்ந்த
பிறகே செய்யுங்கள். மாணவர்கள் கடும் உழைப்பை மேற்கொண்டால் கண்டிப்பாக அவர்களுக்கு வேண்டிய
பலன் கிட்டும்.
விருச்சிகம் - ராசிபலன் 2013 (Scorpio)
விருச்சிக ராசிக்காரர்களே, 2013 உங்களுக்கு அனைத்தும் சேர்ந்த கலவையான ஆண்டாக இருக்கும்.
இந்த ஆண்டில் வாழ்க்கை உங்களுக்கு சாதகமான வகையில் ஏறத்தாழ ஒரு ரங்கராட்டினத்தின் சுழற்சி
போல அமைந்திருக்கும். குழந்தை போன்று வலுவுடன் உங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணங்களை
அனுபவிக்கப் போகிறீர்கள். வீட்டில் ஒரு அமைதியான சூழ்நிலை இருக்கும் அதே நேரத்தில்
சில சச்சரவுகள் உங்களை தொந்தரவு செய்யும். உங்கள் குடும்ப உறுப்பினர் ஒருவரின் ஆரோக்கியக்
குறைவினால் ஆதங்கப்படும் வாய்ப்பு உண்டு. ஆனால் உங்கள் விஷயத்தில் இந்த ஆண்டில் நீங்கள்
மிகவும் ஆரோக்கியமாக இருப்பீர்கள். காய்ச்சல், கிருமித் தாக்குதல் போன்ற சிறிய அளவிலான
பிரச்னைகள் மட்டுமே உங்களைத் தாக்க வாய்ப்பு உண்டு. நீங்கள் நேசிக்கும் ஒருவருடன் அதிக
நேரத்தை செலவழிக்க வாய்ப்பு இருக்கும் அதே நேரத்தில் ஆண்டின் இரண்டாவது பாதியில் நீங்கள்
சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கும். தொழில், பணவருவாய், கல்வி போன்ற விஷயங்களில்
இந்த ஆண்டு சாதகமாக இருக்கும். உங்களுக்குத் தேவையானவை எல்லாம் பாதகமான விளைவுகளை அனுபவிக்க
நீங்கள் மிகவும் கடுமையான உழைப்பினை மேற்கொள்ள வேண்டியிருக்கும். 2013ம் ஆண்டில் உங்கள்
பணத்தை அதிக அளவில் சேமித்து வைக்க உங்களால் இயலாமல் போக வாய்ப்புக்கள் இருக்கின்றன.
தனுசு - ராசிபலன் 2013 (Sagittarius)
தனுசு ராசிக்காரர்களே, 2013ம் ஆண்டு உங்களுக்கு சில வகைகளில் கவர்ச்சிகரமானதாக
அமையும். உல்லாசமான மனநிலையைக் கைவிட்டு, விஷயங்களை எச்சரிக்கையுடனும் பொறுப்பு உணர்வுடனும்
அணுகுவதற்குக் கற்றுக் கொள்வீர்கள். ஆண்டின் துவக்கத்தில் குடும்ப விஷயங்களில் சிறிது
பதட்டம் இருந்தாலும் நாட்கள் செல்லச் செல்ல உங்கள் பிரச்னைகள் ஒவ்வொன்றாகத் தீரத் துவங்கும்.
உங்களுடைய பிடிவாத குணத்தினால் நீங்கள் நேசிக்கத் துவங்கும் ஒருவர் உங்களை விட்டுப்
பிரியக் கூடும். நீங்கள் சற்று புத்திசாலித்தனமாக நடந்து கொண்டால் 2013ல் திருமணம்
நிச்சயமாகும் வாய்ப்பு உண்டு. தொழில் ரீதியாக இந்த ஆண்டு அத்தனை சாதகமானதாக இல்லை.
நீங்கள் ஈடுபடும் திட்டங்களில் கடினமான உழைப்பினை நல்கி உங்கள் முயற்சி, உழைப்பு அனைத்தையும்
அர்ப்பணித்தாலும் சிறிய அளவில் மட்டுமே பலன் கிட்டுவதால் மனத்தளவில் சோர்வு அடைந்து
விடுவீர்கள். 2013ம் ஆண்டில் நிதி நிலைமை உங்களுக்கு ஸ்திரமாக அமையும்.
மகரம் - ராசிபலன் 2013 (Capricorn)
மகர ராசிக்காரர்களே, 2013ம் ஆண்டில் உங்கள் வாழ்க்கையை நீங்களே உருவாக்கிக் கொள்ளும்
வாய்ப்பு உங்களுக்குக் கிட்டப் போகிறது, இதயம் அல்லது நேசம் மற்றும் தொழில் தொடர்பான
விஷயங்கள் உங்களுக்கு அதீதமான உல்லாசத்தைத் தரும் அதே வேளையில் குடும்ப முனையில் சில
பின்னடைவுகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம், ஆண்டின் இரண்டாம் பாதியில் குடும்பச் சூழல்
அத்தனை சாதகமாக இருக்காது, தொழிலைப் பொறுத்தவரை 2013ம் ஆண்டில் நீங்கள் எடுக்கப் போகும்
புதிய முயற்சிகளால் உங்களுக்குப் பெயரும் புகழும் கிட்டும். புரிந்து கொண்டு நடப்பவர்
நீங்கள் என்பதால் உங்கள் உறவுகள் அற்புதமாக மலரும். உங்களுடைய வருவாய் வாய்ப்புக்கள்
அதிகரிக்கும் என்பதால் இந்த ஆண்டு பணவரவிலும் சாதகமாகவே அமைந்திருக்கிறது. நீங்கள்
அதிக அளவில் பணம் சம்பாதித்தாலும் அந்தப் பணத்தை முதலீடு செய்வது அத்தனை உசிதமல்ல.
மாணவர்கள் தங்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவார்கள். தீய சகவாசங்களை விலக்கி தங்கள்
நேரத்தை உபயோகமான வழிகளில் செலவழிப்பார்கள்.
கும்பம் - ராசிபலன் 2013 (Aquarius)
கும்ப ராசிக்காரர்களே, நீங்கள் அற்புதமான வகையில் 2013ம் ஆண்டை அனுபவிக்கப் போகிறீர்கள்.
நேரம் உங்களுக்கு மிகவும் அற்புதமாக அமைந்திருக்கிறது. நீங்கள் வேலை செய்யும் இடத்தில்
நீங்கள் நேசிக்கும் மனிதர்களின் அன்பு, பாசம் மற்றும் மரியாதை போன்றவை உங்களுக்குப்
பெரும் மகிழ்ச்சியை அளிக்கும். சில நேரங்களில் தன்முனைப்பு (ego) உங்களை ஆட்கொள்ளும்.
அவை போன்ற சந்தர்ப்பங்களைத் தவிர்ப்பது நலம். பரந்த அளவிலான மனப்பாங்கினைப் பேணும்
தன்மை இந்த ஆண்டில் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். பருவ காலங்கள் சேர்ந்த சிறிய
அளவிலான சில நோய்கள் உங்களை பாதித்தாலும் கவலைப் படும் அளவுக்கு ஒன்றும் இருக்காது,
ஒரு தேர்ந்த அனுபவம் கொண்டவருடன் இந்த ஆண்டு நீங்கள் பணிபுரியப் போவதால் 2013ம் ஆண்டு
தொழில் ரீதியிலும் உங்களுக்கு சாதகமான ஆண்டாகவே இருக்கும். உங்களுடைய கச்சிதமான காரியத்திறனால்
2013ம் ஆண்டின் இறுதியில் உங்களுக்குப் பதவி உயர்வு கிட்டலாம். ஆண்டு முழுதும் ஆண்டு
முழுதும் கிட்டும் தொடர்ச்சியான பண வரவு உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.
மீனம் ராசிபலன் 2013 (Pisces)
மீன ராசிக்காரர்களே, 2013ம் ஆண்டு அடுத்தவர்களை சார்ந்து இருப்பதற்கான நல்ல ஆண்டு
கிடையாது. உங்கள் திறமையில் நம்பிக்கை வைத்து சுய சார்புடன் இருத்தலே நலம் பயக்கும்,
உங்கள் குடும்பத்துக்காக நீங்கள் கடுமையாக உழைத்தாலும் அவர்களால் அதிக அளவில் மதிக்கக்
கூடிய வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் சற்று கூடுதல்
கவனம் செலுத்தாவிட்டால் தோல் மற்றும் ரத்தம் தொடர்பான தீவிரமான சில நோய்களால் தாக்கப்
படும் வாய்ப்பு உண்டு. உங்கள் காதல் உறவினை நீங்கள் அலட்சியப்படுத்த முடியாது. காதல்
வாழ்க்கை பற்றிய உங்கள் தீர்மானத்தில் நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும். உத்தியோக
ரீதியாகவும் 2013 அத்தனை சாதகமானதாக இல்லை. உயர்பதவியில் இருக்கும் ஒருவரிடம் நீங்கள்
தீவிரமான வாக்குவாதத்தில் ஈடுபடுவீர்கள். இதனால் பாதகமான விளைவுகள் ஏற்பட வாய்ப்பு
உண்டு. பொருளாதார ரீதியில் உங்களுக்கு நிலைமை சரியாக அமையாமல் போவதற்கு வாய்ப்புக்கள்
இருப்பதால் பெருத்த தொகையை முதலீடு செய்வதைத் தவிர்க்கவும்.
Astrological services for accurate answers and better feature
Astrological remedies to get rid of your problems

AstroSage on MobileAll Mobile Apps
AstroSage TVSubscribe
- Horoscope 2023
- राशिफल 2023
- Calendar 2023
- Holidays 2023
- Chinese Horoscope 2023
- Education Horoscope 2023
- Purnima 2023
- Amavasya 2023
- Shubh Muhurat 2023
- Marriage Muhurat 2023
- Chinese Calendar 2023
- Bank Holidays 2023
- राशि भविष्य 2023 - Rashi Bhavishya 2023 Marathi
- ராசி பலன் 2023 - Rasi Palan 2023 Tamil
- వార్షిక రాశి ఫలాలు 2023 - Rasi Phalalu 2023 Telugu
- રાશિફળ 2023 - Rashifad 2023
- ജാതകം 2023 - Jathakam 2023 Malayalam
- ৰাশিফল 2023 - Rashifal 2023 Assamese
- ରାଶିଫଳ 2023 - Rashiphala 2023 Odia
- রাশিফল 2023 - Rashifol 2023 Bengali
- ವಾರ್ಷಿಕ ರಾಶಿ ಭವಿಷ್ಯ 2023 - Rashi Bhavishya 2023 Kannada